Header Ads



இன்றுவரை எனனை விமர்சித்தே, தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள் - கோத்தா வேதனை

கொள்கை பிரகடனத்தினை தெளிவுப்படுத்தி மக்கள் மத்தியில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள முடியாதவர்கள் இன்று என் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக தெரிவித்த பொதுஜன பெரமுனவின்  ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தவறான அரசியல் கலாசாரத்தினை முழுமையாக இல்லாதொழிப்பதாகவும் கூறினார்.

அத்துடன் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தினை எவ்வாறு முன்னேற்றுவது  தொடர்பான கொள்கை திட்டங்களை அடிப்படையாகக் கொண்டதகவே எனது தேர்தல் பிரச்சாரங்கள் காணப்படுகின்றது. ஆனால் ஆளும் தரப்பினர்  ஆரம்பத்தில் இருந்து இன்று வரை பிறரை  குறிப்பாக  என்னை விமர்சித்தே தேர்தல் பிரச்சாங்களை முன்னெடுக்கின்றார்கள்.  

அபிவிருத்தி தொடர்பான  கொள்கை   திட்டங்களை இதுவரையில்  மக்கள் மத்தியில்  தெளிவுப்படுத்தவில்லை.

நாட்டில் தவறான அரசியல் கலாசாரங்களே காணப்படுகின்றது. இந்த  கலாசாரம் முழுமையாக ஆட்சிக்கு வந்தவுடன் மாற்றிமைக்கப்படும். 

அநுராதபுரம்- தம்புத்தேகம நகரில் இன்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில்  கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.