Header Ads



உலகளாவிய சுற்றுலாத்துறை விருது, வழங்கல் நிகழ்வில் Figo Holidays முதலிடம்

இலங்கையின்சுற்றுலாத்துறைக்கு வழங்கிய சிறந்த பங்களிப்புகளுக்காக Figo Holidays நிறுவனத்துக்கான  விருது அதன்  நிர்வாக இயக்குநர  R.M.M  கலீல் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

 26 ஆவது உலகளாவிய சுற்றுலாத்துறை விருது வழங்கல் (WORLD TRAVEL AWARDS) நிகழ்வில் “இலங்கையின் முன்னணி சுற்றுலா முகவர் நிறுவனம் 2019” என்ற விருதை வென்று சாதனை படைத்ததை அடுத்தே அதன் தலைவர் விருது வழங்கி கெளரவிக்கப் பட்டுள்ளார்.

வியட்நாமின்  Phu Quoc இல் அமைந்துள்ள வின்பேர்ள் மாநாட்டு மண்டபத்தில் கடந்த  ஒக்டோபர் 12 ஆம் திகதி சனிக்கிழமைநடைபெற்ற உலகளாவிய சுற்றுலாத்துறை விருதுகள் - ஆசியா மற்றும் ஓசியானியா கலா - 2019' விழாவிலேயே இவ்விருது வழங்கப்பட்டது.

இந்த விருது வழங்கல் நிகழ்ச்சித் திட்டமானது உலகளாவிய சுற்றுலாத்துறையில் அங்கீகரிக்கப்பட்ட மிகவும் மதிப்புமிக்க கௌரவத்தை வழங்கும் ஒரு நிகழ்வாகும் என்பது குறிப்பிடத் தக்கது.

Figo Holidays (Pvt) Ltd, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) யின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இலங்கையின் முன்னணி சுற்றுலாப் பயண வழிகாட்டி நிறுவனம் என்பதுடன் இது  பிரித்தானியா, துருக்கி, மலேசியா, இந்தியா, மாலைதீவு, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து வருகின்றது.

2018 இல் இடம் பெற்ற இலங்கையின் சுற்றுலாத்துறை விருது (Sri Lanka Tourism Award 2018) வழங்கலில் பயண மற்றும் சுற்றுலா வழிகாட்டி வகையின் கீழும் உலகளாவிய சுற்றுலாத்துறை விருதுகளின் (WORLD TRAVEL AWARDS) கீழ் இலங்கையின் முன்னணி பயண முகவராகவும் பெயரிடப்பட்டமை Figo Holidays இன் சாதனைகளில் சிலவாகும்.

அந்த வகையில் இலங்கைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தற்போது Figo Holidays நிறுவனம் உலகளாவிய சுற்றுலாத்துறை விருது (WORLD TRAVEL AWARDS) வழங்கலில் 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் முன்னணி பயண முகவர் விருதை வென்று நற்பெயரைச் சம்பாதித்துள்ள மை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.