Header Ads



றிஷாத் பதியுதீனுடன் கூட்டு வைத்திருக்கும், எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிக்க முடியாது - சுமதிபால

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் றிஷாத் பதியுதீன் போன்ற நபர்களுடன் கூட்டு வைத்திருக்கும் எந்த வேட்பாளருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் ஆதரவு அளிக்க முடியாது என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

‘சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தேசிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்கமாட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு இல்லாமல்,  தேசிய ஜனநாயக முன்னணியால் தேர்தல்களை எதிர்கொள்ள முடியாது.

கொள்கை முரண்பாடு காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டு வைத்திருக்கின்ற எவருடனும்  சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் இணங்கிப் போகமுடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் றிஷாத் பதியுதீன் போன்ற நபர்களுடன் கூட்டு வைத்திருக்கும் எந்த வேட்பாளருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் ஆதரவு அளிக்க முடியாது.

தீவிரவாதத்தை ஆதரித்ததாகக் கூறப்படும் றிஷாத் பதியுதீன் போன்ற அமைச்சர்களுக்கு எதிராக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அடிமட்டத்திலிருந்தே குறிப்பிடத்தக்க எதிர்ப்பு எழுந்துள்ளது.

பொதுமக்கள் அவரை நம்பவில்லை, எனவே அவருடன் இணைந்த ஒரு வேட்பாளரை சுதந்திரக் கட்சியினால் ஆதரிக்க முடியாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. These guys are opportunists and do not have any strong policy in their life. To date these guys tried to get the minorities support and failed. If any minority party support them for the coming election they will not talk like this. All are selfish and never think about the country and the people. God must protect our country and people.

    ReplyDelete
  2. அப்போ 52 நாள் அரசியல் புரட்ச்சியின் போது குண்டு வெடிக்கவில்லையே,சும்மா பொய் சாக்கு போக்குகளினை ஏன் கூறுகிறீர்கள்.உலக கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை (ICC) ஏன் உங்கள் மீது தடைவிதித்துல்லது? அரசியலில் யாரும் சுத்தவாலிகல் அல்ல.

    ReplyDelete
  3. We know your.pedigree. U r a bookir and even your clients rejected u last time.u got a national list by bookie money.

    ReplyDelete

Powered by Blogger.