Header Ads



கோத்தாபயவுக்கு சிக்கல் ஏற்பட்டால், புதிய ஜனாதிபதி வேட்பாளர் யார்...??

சமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதாக இருந்தால், கோத்தாபய ராஜபக்சதான் பிரதமர் என்று பெயரிட்டு தேர்தல் பிரச்சாரங்களை நடத்த வேண்டும் என பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கொழும்பு ஊடகம் ஒன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

கோத்தபாய ராஜபக்ச மீது முன்வைக்கப்படும் தொடர் குற்றச்சாட்டுக்கள் மற்றும் நிலவும் குழப்பமான சூழ்நிலை காரணமாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மாற்று வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில், அவ்வாறு ஜனாதிபதி வேட்பாளராக சமல் ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டால் கோத்தபாய ராஜபக்ச தான் பிரதமர் என தெரிவித்து பிரச்சாரங்களை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் முழு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரமும் கோத்தபாயவை மையமாகக் கொண்டிருப்பதால் அதை முழுமையாக மாற்ற முயற்சிப்பது கூட மிகவும் சாதகமற்ற நிலையை ஏற்படுத்தும் என்பதன் காரணமாக இவ்வாறான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மறுபுறம், பொதுஜன பெரமுன தேசிய பாதுகாப்பை அடிப்படை பிரச்சினையாக அடையாளம் காட்டியுள்ளமையினால் கோத்தாவை சமலுடன் மாற்றுவது ஒரு தோல்வியுற்ற முயற்சி என்று தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, ஜனாதிபதி வேட்பாளருக்கு தடையாக இருந்தாலும், கோத்தா இல்லாமல் ஜனாதிபதி பிரச்சாரத்தை முன்னெடுக்க முடியாது என்று பிரச்சார நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே ஏதேனும் சட்டரீதியான தடையாக இருந்தால் அடுத்த சில மாதங்களில் அவற்றைத் தீர்த்து கோத்தபாய பிரதமராக நியமிக்கப்படுவார் என்று மக்களுக்கு வாக்குறுதி அளித்து அவருடைய கொள்கைகளை மேலும் மேம்படுத்துவதைத் தவிர பொதுஜன பெரமுனவிற்கு வேறு வழியில்லை என்று குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்புமனு ஒப்படைப்பதில் இருந்து பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இன்னும் இருப்பது 39 நாட்கள் மட்டும் என்பதால் இந்த காலத்திற்குள் வேறு எந்த நடவடிக்கைகளுக்கும் இடமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சமல் ஜனாதிபதியாகவும், கோத்தபாய ராஜபக்ச பிரதமராகவும், இதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட துணை பிரதமர் பதவி மகிந்த ராஜபக்சவிற்கும் வழங்குமாறும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

4 comments:

  1. Maginda rajapaksha oramkattepaduhirara?

    ReplyDelete
  2. இந்த திட்டத்தைப் பாருங்கள். கோதபாயாவுக்கு சனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாதுபோனால் மாற்றுவழி என்ன? சமல் ராஜபக்ஸ சனாதிபதி கோதா பிரதமர், மஹிந்த துணைப்பிரதமர். இந்த கள்ளக்கூட்டம் எவ்வாறு நாட்டை ஒரு குடும்பத்துக்கு அடகு வைக்கின்றார்கள் என்பதைப் பாருங்கள். பொதுமக்களே இது உங்கள் நாடு, இந்த நாடு மஹிந்த ராஜபக்ஸவின் குடும்பச் சொத்தல்ல என்பதை மிக புத்திசாதுர்யமாக யோசனைசெய்து உங்கள்பெறுமதியான வாக்குகளை பொது மக்களையும் இந்த நாட்டை யும் முற்படுத்தி சிந்தனைசெய்ய முடிந்த ஒருவருக்கு உங்கள் பெறுமதியான வாக்குகளை வழங்குங்கள்.

    ReplyDelete
  3. so 1,2,3 President. Prime minister, deputy prime minister will go to three brothers, if it happen then all voters have to go hell, lack of back bone...

    ReplyDelete
  4. what about ஞானசார பிக்கு சார்?

    ReplyDelete

Powered by Blogger.