Header Ads



ஜனாதிபதித் தேர்தலில் மொட்டு, பாராளுமன்ற தேர்தலில் தனிச்சின்னம் - மைத்திரி சந்திப்பில் ராஜபக்ஸ சகோதரர்கள் கூறியது

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைவர்கள் தமது ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான நிலைப்பாடுகளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று (28) அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (28) நண்பகல் இடம்பெற்ற சந்திப்பிலேயே இதனைக் கூறியுள்ளனர்.

இந்த சந்திப்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ, எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ, அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ ஆகியோர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மலர் மொட்டு சின்னத்தில் போட்டியிட்டுவிட்டு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தாம் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்வோம் என்ற கோரிக்கையை பொதுஜன பெரமுன கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில் தமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் கலந்துரையாட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்குப் பதிலளித்துள்ளதாகவும் தகவல் வட்டாரங்கள் கூறியுள்ளன.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

DC

No comments

Powered by Blogger.