Header Ads



தனக்கு இன்னும் அதிகாரம் இருக்கிறது என, ஜனாதிபதி, மீண்டும் நிரூபித்துள்ளார்

ஜனாதிபதியின்  நிறைவேற்று அதிகாரத்தை 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் முழுமையாக கட்டுப்படுத்தவில்லை.  ஆனால் இந்த அரசியலமைப்பின் பிரகாரம் 2020 இல் தெரிவாகும் ஜனாதிபதிக்கு  எந்த அமைச்சு பதவிகளையும் பெறுப்பேற்க முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹூமான் தெரிவித்தார்.

 வெகுசன ஊடக அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது ;

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சுடன் இணைத்துக் கொண்டமையானது அரசியல் ரீதியில் பவ்வேறு கேள்விகளை  தோற்றுவித்துள்ளது. எவ்வாறாயினும் இந்த விடயமானது கொள்கை ரீதியான பிரச்சினையாகவே கருத வேண்டும்.  

ஸ்ரீ லங்கா சுதந்திர  கட்சியின் மாநாட்டிலும் நிறைவேற்று அதிகாரம்  கொண்ட ஜனாதிபதிக்கு தற்போது எந்த அதிகாரமும் இல்லை என்றும் பிரதமர் பதவிக்கே அதிக  அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் குறுகிய காலத்திலேயே  தனக்கு இன்னும் அதிகாரம்  இருக்கிறது  என்பதை மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளார் என அவர்  தெரிவித்தார்.

(நா.தினுஷா) 

No comments

Powered by Blogger.