Header Ads



ஜனாதிபதியுடன் கூட்டணி அமைக்க சஜித் - ரணில் முயற்சித்தனர், மங்கள தடுத்தார்

ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதே சுதந்திரக் கட்சிக்கு உள்ள ஒரே வழி என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கர தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். 

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனநாயக இடது முன்னணியின் செயலாளர், சஜித்-ரணில் முறன்பாட்டினால் எந்தவித நன்மையும் ஏற்பட போவது இல்ல. இவர்கள் ஜனாதிபதியுடன் கூட்டணி அமைக்க முயற்சித்தனர். எனினும் அதற்கு மங்கள உள்ளிட்ட மேற்கத்தேய பிரதிநிதிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். 

ஏனெனில் ஜனாதிபதியின் ஏகாதிபத்திய கொள்கைக்கு அவர்கள் எதிரானவர்கள். ஆகவே பொதுஜன முன்னணியுடன் இணைவதே ஜனாதிபதிக்கு தற்போதுள்ள ஒரே வழி எனினும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பொதுஜன பெரமுனவின் சின்னத்தில் இன்றி வேறு எந்தவொரு பொதுவான சின்னத்தில் போட்டியிட தயார் என கூறுவது தொடர்பில் இதன்போது ஊடகவியலாளர்கள் வினவினர். 

இதற்கு பதிலளித்த அவர், பொதுஜன பெரமுனவின் சின்னம் பிரச்சினையின் அடையாளம் அல்ல என கூறினார். அத்துடன் அவர் வேறு நபர்களுக்காக வேலை செய்வதாக நிமல் சிறிபால டி சில்வா எனக்கு கூறினார். 

மேலும் இதில் சதித்திட்டங்கள் பல உள்ளதாக அவர் கூறியதாக தெரிவித்த வாசுதேவ நாணயக்கார தான் கூட்டணி அமைப்பதில் ஆர்வமாக உள்ளதாகவும் கூறினார்.

1 comment:

Powered by Blogger.