September 10, 2019

பயங்கரவாதத்துடன் தொடர்பற்ற முஸ்லிம்களை கைதுசெய்து, குற்றச்சாட்டுக்களை இட்டுக்கட்டி, ஆதாரங்களைத் தேடும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்

ஏப்ரல் 21 தொடர் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களை தொடர்ந்து நாட­ளா­விய ரீதியில் முன்­னெ­டுக்­கப்­பட்ட சிறப்பு விசா­ர­ணை­க­ளுக்­க­மைய இது­வரை கைது செய்­யப்­பட்­டோரில் 293 பயங்­க­ர­வாத சந்­தேக நபர்கள் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் தெரி­வித்­தி­ருக்­கிறார். பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைகள், அந்­ந­ட­வ­டிக்­கை­க­ளுக்கு உதவி ஒத்­தாசை வழங்­கி­ய­வர்கள் மற்றும் தடை செய்­யப்­பட்ட அமைப்­புக்­களின் உறுப்­பி­னர்­க­ளாக இருந்து ஆயுதப் பயிற்சி பெற்­ற­வர்கள் என்ற குற்­றச்­சாட்­டுக்­களின் கீழேயே இந்த 293 பேரும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

எனினும் பயங்­க­ர­வாத தரப்­பு­க­ளுடன் எந்­த­வி­தத்­திலும் தொடர்­பு­ப­டாத பலரும் கைது செய்­யப்­பட்டு, தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அவர்­களும் மேற்­படி 293 பேரினுள் அடங்­கு­கின்­ற­னரா என்­பது தெளி­வு­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

இந் நிலை­யில்தான் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­பட்­டி­ரா­தோரை இதன் பிற்­பாடும் தடுத்த வைக்­காது விசா­ர­ணை­களைத் துரி­தப்­ப­டுத்தி உடன் விடு­விக்க வேண்டும் எனும் கோரிக்­கைகள் தற்­போது முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இது தொடர்பில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் உரை நிகழ்த்­திய ஐக்­கிய தேசியக் கட்­சியின் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்­மானும் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

”பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுடன் சம்­பந்­த­மில்­லாத இன்னும் சிலர் சிறை­களில் இருக்­கின்­றனர். அவர்கள் தொடர்­பான விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்தி அவர்­களை சமூ­கத்­துடன் இணைந்து வாழ சட்­டமா அதிபர் திணைக்­களம் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். ஏனெனில் சாட்­சிகள் இல்­லாமல், குற்­றச்­சாட்­டுக்கள் இல்­லாமல் ஒரு­வரை தடுப்­புக்­கா­வலில் வைத்­தி­ருப்­பது அவரின் அடிப்­படை உரி­மையை மீறும் குற்­ற­மாகும்” என முஜிபுர் ரஹ்மான் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

அதே­போன்­றுதான் அண்­மையில் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள ஜமா­அதே இஸ்­லாமி அமைப்பின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்­பரை விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் அவர் ஜனா­தி­ப­தி­யி­டமும் பொலிஸ் ஆணைக்­கு­ழு­வி­டமும் குறித்த உரையில் கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.

”ஜமா­அத்தே இஸ்­லாமி நடு­நி­லை­யான சிந்­த­னையை முன்­வைக்க முயற்­சித்த, அதற்­காக சிரமம் எடுத்துக் கொண்ட ஓர் அமைப்பு. அந்த அமைப்பின் முன்னாள் தலை­வரை எது­வித சாட்­சி­களோ, ஆதா­ரமோ இன்றி எந்தப் பொறுப்­பு­மற்ற நிலையில் கொழும்பு குற்­றத்­த­டுப்பு பிரி­வினர் நள்­ளி­ரவில் வீட்­டுக்குச் சென்று கைது செய்து இன்னும் தடுப்புக் காவலில் வைத்­துள்­ளனர். அவரை கைது செய்து வைத்­தி­ருப்­ப­தா­னது விசே­ட­மாக, முஸ்லிம் சமூ­கத்­தினுள் ஒரு விரும்­பத்­த­காத செய­லாக பதி­வா­கி­யுள்­ளது. முஸ்லிம் சமூ­கத்­தினுள் மார்க்க ரீதி­யான மிக உயர்ந்த அந்­தஸ்த்தில் இருக்­கின்ற அவரை தடுத்து வைத்­தி­ருப்­பது அநீ­தி­யா­ன­தாகும். இவ்­வாறு நடு­நி­லை­யான சிந்­தனை கொண்ட, இஸ்லாம் மதம் பற்­றிய ஒரு தெளிவை கொண்ட புத்­தி­ஜீ­வியை குற்­றச்­சாட்­டுகள் அல்­லது சாட்­சிகள் எது­வு­மின்றி கைது செய்து தடுத்து வைத்­தி­ருப்­ப­தா­னது சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது” என அவர் தனது உரையில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

இது இவ்­வா­றி­ருக்க, சட்டவிரோத கைதுகள் மற்றும் தடுத்­து­வைத்தல் என்­ப­வற்றைத் தவிர்த்துக் கொள்­வ­தற்­காக இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு வழங்­கி­யி­ருக்கும் வழி­காட்­டல்­களை கவ­னத்தில் கொண்டு செயற்­ப­டு­மாறு அனைத்து பொலிஸ் உத்­தி­யோ­கஸ்­தர்­க­ளையும் அறி­வு­றுத்­தும்­படி பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்­ர­ம­ரத்ன அனைத்து பொலிஸ் நிலை­யங்­க­ளி­னதும் பொறுப்­ப­தி­கா­ரி­களை கடி­த­மூலம் கடந்த வாரம் வேண்­டி­யி­ருந்தார். கடந்த காலங்­களில் பல சட்­ட­வி­ரோத கைதுகள் இடம்­பெற்று தடுத்­து­வைக்கப்பட்ட சம்­ப­வங்கள் பதி­வா­ன­தை­ய­டுத்து, இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு பொலி­ஸா­ருக்கு வழங்­கிய சிபா­ரி­சு­களின் அடிப்­ப­டை­யி­லேயே பதில் பொலிஸ் மா அதிபர் மேற்­படி கடி­தத்தை பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கு அனுப்­பி­யி­ருந்தார்.

”நம்­பத்­த­குந்த தக­வல்கள் கிடைத்­ததன் பின்பு சந்­தே­கத்தின் பேரி­லேயே கைதுகள் இடம்­பெ­ற­வேண்டும். கைது செய்­யப்­பட்­டதன் பின்பு அந்தக் கைதினை நியா­யப்­ப­டுத்­து­வ­தற்­காக குற்­றங்­களைத் தேடிக்­கண்­டு­பி­டிக்கக் கூடாது” என மனித உரிமை ஆணைக்­குழு பொலி­சா­ருக்கு வழங்­கிய தனது வழி­காட்­டல்­களில் தெரி­வித்­தி­ருந்­தது. கைதுகள் இடம்­பெறும் அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளிலும் உரிய விசா­ர­ணைகள் இடம்­பெற்று, அந்த விசா­ர­ணைக்­கான நிரந்­தர சாட்­சிகள் இருக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அன்றி ஒரு தக­வலின் அடிப்­ப­டையில் மாத்­திரம் கைதுகள் இடம்­பெ­றக்­கூ­டாது எனவும் அவ் வழி­காட்­டலில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இருந்­த­போ­திலும் பொலிசார் இவற்றைக் கருத்திற் கொண்டு செயற்­ப­டு­கி­றார்­களா எனும் கேள்­வியே உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்­பரின் கைது விவ­கா­ரத்தில் எழுகிறது. இதுபோன்ற கைதுகள் இதன்பிற்பாடும் நடைபெற இடமளிக்க முடியாது. டாக்டர் ஷாபியைக் கைது செய்து மூக்குடைபட்டது போன்று இன்னுமின்னும் பயங்கரவாதத்துடன் எந்தவித சம்பந்தமுமற்ற முஸ்லிம் புத்திஜீவிகளையும் நடுநிலையாளர்களையும் கைது செய்து பின்னர் குற்றச்சாட்டுக்களை இட்டுக் கட்டி அதற்கு ஆதாரங்களைத் தேடுகின்ற கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

இதற்காக சகலரும் முன்வந்து குரல் கொடுக்க வேண்டும், செயற்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.

vidivelli

0 கருத்துரைகள்:

Post a comment