Header Ads



ஐதேக வாக்­குகள் பெர­மு­ன­வுக்கு, செல்வதை தடுக்­கவே JVP தனித்து போட்­டி­

ஐக்­கிய தேசிய கட்­சிக்கு எதி­ரா­ன­வர்­களின் வாக்­குகள், பொது­ஜன பெர­மு­ன­வுக்கு அளிக்­கப்­ப­டு­வதை தடுக்­கவே மக்கள் விடு­தலை முன்­னணி தனித்து போட்­டி­யி­டு­கின்­றது.

அத்­துடன் சட்­டப்­பி­ரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தி, கோத்­த­பா­யவின் பயணத்தை தடுக்க முடி­யாது என்று ஜன­நா­யக இட­து­சாரி முன்னணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார்.

சோச­லிச மக்கள் முன்­னணி கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

கோத்­த­பாய ராஜபக்ஷ் எந்த கட்­சி­யையும் சேரா­தவர். அவர் பொது வேட்­பா­ள­ரா­கவே பொது­ஜன பெர­முன கட்­சியில் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டு­கின்றார். கோத்­த­பா­யவை தோற்­க­டிக்கும் நோக்­கமே ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கும் இருக்­கின்­றது. 2015ஆம் ஆண்டு இடம்­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் இவர்கள் அனை­வரும் ஒரு அணி­யாக செயற்­பட்டு எமக்­கெ­தி­ராக பிர­சாரம் செய்­தனர்.

ஆனால் இம்­முறை இவர்­க­ளுக்கு அவ்­வாறு செயற்­பட முடி­யாது. ஏனெனில் கடந்த தேர்­தலில் இவர்கள் மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­திகள் எத­னையும் கடந்த நான்­கரை வருட ஆட்­சிக்­கா­லத்தில்  நிறை­வேற்­ற­வில்லை. அதனால் மாற்­றத்தை எதிர்­பார்த்து வாக்­க­ளித்­த­வர்கள் இம்­முறை ஐக்­கிய தேசிய கட்­சிக்கு வாக்­க­ளிக்­கப்­போ­வ­தில்லை. இதனை உணர்ந்­து­கொண்டே இம்­முறை  திட்­ட­மிட்டு மக்கள் விடு­தலை முன்­னணி தனித்து போட்­டி­யிட தீர்­மா­னித்­தி­ருக்­கின்­றது. இதன் மூலம் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு எதி­ரா­ன­வர்கள் பொது­ஜன பெர­மு­ன­வுக்கு வாக்­க­ளிப்­பதை தடுக்­கலாம். இதுவே இவர்­களின் பிர­தான திட்­ட­மாகும்.

அத்­துடன் வாக்­க­ளிப்­பின்­போதும் முத­லா­வது தெரிவு மக்கள் விடு­தலை முன்­னணி என்றும் இரண்­டா­வது தெரிவு ஐக்­கிய தேசிய கட்சி என்றும் வாக்­க­ளிக்­க­வேண்டும் என்றே பிர­சாரம் செய்­யப்­போ­கின்­றனர். இதன் மூலம் யாருக்கும் பெரும்­பான்மை கிடைக்­கா­மல்­போகும் சந்­தர்ப்­பத்தில், ஐக்­கிய தேசிய கட்­சிக்கு அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொ­டுப்­பதே இவர்­களின் மற்­று­மொரு திட்­ட­மாகும்.

மேலும் சட்­டப்­பி­ரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தி கோத்­த­பாய ராஜ­பக்ஷ்வை தடுக்­கவும் சிலர் முயற்­சித்து வரு­கின்­றனர். கோத்­த­பா­யவின் பிரச்­சினை அர­சியல் பிரச்­சி­னை­யாகும். சட்­டப்­பி­ரச்­சினை அல்ல. அதனால் நீதிமன்றம் மக்களின் அபிலாஷைகளை உணர்ந்துகொண்டே அவருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளுக்கு தீர்ப்பளிக்கும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது. அதனால் சட்டப்பிரச்சினைகளை ஏற்படுத்தி ஒருபோதும் கோத்தாவின் பயணத்தை தடுக்க முடியாது என்றார்.

2 comments:

  1. Mr Vasudeva,

    It is now obvious that you are having fear about your victory because of the arrival of JVP. Your fear is very reasonable because the elements which like to see our motherland - SRI LANKA as trouble free nation rallying with Anurakumara Dissanayake. You can see more and more in the future and make yourself ready to stand by that.

    ReplyDelete
  2. 70 years old.still in the field.very concern about paksha.
    No one speak about country.
    Apa saranai

    ReplyDelete

Powered by Blogger.