Header Ads



ஜனாதிபதி ஆணையிட்டால் தேர்தலில் போட்டியிட, நானும் தயாராகவே இருக்கின்றேன் - குமார வெல்கம

“ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆணையிட்டால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு நானும் தயாராகவே இருக்கின்றேன்.''

இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஐக்கிய தேசிய முன்னணி, ஜே.வி.பி. ஆகிய கட்சிகளின் அரச தலைவர் வேட்பாளர்களை என்னால் தோற்கடிக்க முடியும்" எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனித்து நின்று - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நலன் கருதி சுயமாக முடிவெடுக்க வேண்டும்" எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மிகவும் நெருங்கிய ஒருவராக இருந்த குமார வெல்கம, கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதை பகிரங்கமாக எதிர்த்து வந்தார்.

தற்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குமார வெல்கம இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Naanum thayaaraahatthann irikken....janaathipathy aanay pottaal...
    Hmmmmmmmm....
    Hmmmmmmm
    Hmmmmmm...
    Pollu edutthawanellaam.wettaykaaranaam.....

    ReplyDelete

Powered by Blogger.