Header Ads



நரித் தந்திரத்துடன் ரணில் - நாளை இரவு எடுக்கவுள்ள தீர்மானம்

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்புமனுவை பெறுவதற்காக ரணில் விக்ரமசிங்க உட்பட சிலர் மேற்கொண்ட இரகசியமான நடவடிக்கை சம்பந்தமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த இரகசிய நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில், கிறீன் பிளட் அமைப்பின் அமைப்பாளர் லசந்த குணவர்தன, அமைச்சர்கள் ரவி கருணாநாயக்க, வஜிர அபேவர்தன, அகில விராஜ் காரியவசம், சாகல ரத்நாயக்க, திலக் மாரப்பான ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மானித்திற்கு அமைய ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அடுத்த வார ஆரம்பத்தில் உடனடியாக செயற்குழுவைக் கூட்ட உள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் 90க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கம் வகிக்க வேண்டும் என்ற போதிலும்.

இதுவரை 63 உறுப்பினர்கள் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்றில் இரண்டு பேர் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்த பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு செயற்குழுவிற்கு உடனடியாக 30 பேரை நியமிக்க வேண்டும் என மேற்படி பேச்சுவார்த்தையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டியவர்களும் தீர்மானிக்கப்பட்டுள்ளனர். இதில் உள்ளவர்களின் பெயர் படடியல் குறித்து நாளைய தினம் தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு அறிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் செயற்குழுவை கூட்டி ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யும் தேர்தலை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சட்ட நடவடிக்கைகள் அமைச்சர் திலக் மாரப்பனவிடவும் ஊடக நடவடிக்கைகள் லசந்த குணவர்தனவுக்கும், ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பு ரவி கருணாநாயக்கவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்புக்கு அமைய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டு கூட்டத்தில், பெரும்பான்மை உறுப்பினர்களின் இணக்கத்திற்கு அமையவே கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்பட வேண்டும்.

கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்யும் இணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள செயற்குழு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை ஒரே தடவையில் கூட்டுமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் கடந்த 19 ஆம் திகதி பிரதமரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கு அமைய கடந்த 21 ஆம் திகதி பிரதமரை சந்தித்த சிரேஷ்ட அமைச்சர்கள் கபீர் ஹாசிம், ரஞ்சித் மத்தும பண்டார, மலிக் சமரவிக்ரம ஆகியோர் இந்த கோரிக்கை விடுத்திருந்தனர். திங்கள் (26) இது சம்பந்தமான தீர்மானத்தை எடுப்பதாக பிரதமர் அமைச்சர்களிடம் உறுதியளித்துள்ளார்.

3 comments:

  1. All his strategies for last 30 years destroyed the grand old UNP party
    and open the way for MR & Co era....

    ReplyDelete

  2. இவரது நரித்தந்திரத்தை முஸ்லிம்கள் இன்னும் உணராதது பெரும் கவலையானது
    முஸ்லிம்களின் பொருளாதாரத்தில் கை வைத்த UNP, SLFP கூட்டு சதி செய்கிறார்கள்

    ReplyDelete
  3. இந்த ரணில் தனது சுயநலத்தினால் கட்சியையும் சீரழித்து நாட்டையும் சீரழிக்கின்றான்.

    ReplyDelete

Powered by Blogger.