August 11, 2019

முஸ்லிம் கிராமங்கள் தாக்கப்படலாம் - மகிந்த விடுத்துள்ள எச்சரிக்கை


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அதிகம் பேசுபவரல்ல ஆனால் செயற்திறன் மிக்கவர் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Asianage. ஊடகத்திற்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்சகுறித்து எதிர்கட்சிகள் பொய்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள போதிலும் அவர் மோசமானவரில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

  மக்களே கோத்தபாய ராஜபக்சவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஏற்கனவே தீர்மானித்துவிட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கட்சியினர் சித்தரிப்பது போல கோத்தபாய ராஜபக்ச மோசமான மனிதரில்லை அவர் செயற்திறன் மிக்கவர் அதிகம் பேசமாட்டார் அமைதியாக செயற்படுபவர் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவர் ஜனாதிபதியாக பதவி வகித்தால் - பிரதமராக அதிக அனுபவமுள்ள நான் பிரதமராக பதவி வகித்தால் நாங்கள் அனைவரும் இணைந்து மக்களிற்கு என்ன தற்போது தேவையோ அதனை வழங்க முடியும் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது சட்டமொழுங்கில்லை ஜனநாயகம் இல்லை தேர்தல்களும் இல்லை எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாங்கள் இலங்கைக்கு பாதுகாப்பையும் அபிவிருத்தியையும் வழங்குவோம் என்பதும் இந்தியாவுடன் நல்லுறவுகளை உறுதி செய்வோம் என்பதும் புதுடில்லிக்கு தெரியும் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களிற்கும் கோத்தபாய ராஜபக்சவிற்கும் இடையில் தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்படுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச இது முற்றிலும் பொய் என குறிப்பிட்டுள்ளார்.

இது எங்களிற்கு எதிரான திட்டமிட்ட பிரச்சாரம் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவர்கள் முஸ்லீம் கிராமங்களை தாக்கிவிட்டு ராஜபக்சாக்களிற்கு வாக்களிக்காதீர்கள் என தெரிவிப்பார்கள்  என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச தற்போது முஸ்லீம் மக்களிற்கு உண்மை தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலைவர்களும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்றனர் ஆனால் அவர்கள் தங்கள் மக்களிற்காக எதனையும் பெறுகின்றனர் இல்லை என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இரண்டு வருடத்திற்குள் அனைவரும் ஏற்றுக்கொள்ளகூடிய தீர்வை தமிழ்மக்களிற்கு வழங்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

5 கருத்துரைகள்:

இந்த செய்தி மூலம் தெரிய வருவது, இலங்கையில் உள்ள முஸ்லீம் மக்களுக்கு எதிராக சதி வலைகள் பின்னப்பட்டுள்ளன. எனவே, முஸ்லீம்களாகிய நாம் எப்போவும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் நிதானமாகவும் செயற்திறனாகவும் எதுவும் நடக்கலாம் என்று முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

This a politics play to blame one another.. but they all are responsible

அராஜகத்தையும் அநியாயம்,ஊழல்,களவு,பொதுமக்களின் சொத்துக்களைக் களவாடும்,சூறையாடும் யுகத்தை மாற்றி கள்வர்களையும் ஊழல்கார ர்களையும் சிறையிலடைந்து நல்லாட்சி ஏற்படுத்த முன்வந்தவர்கள் செய்த நல்லகைங்கரியத்தை இப்போது நாம் அனுபவிக்கின்றோம். ஓரளவுக்கேனும் நீதியும் சட்டமும் குறிப்பாக பொதுமக்களுக்கு நல்லாட்சியை விமர்சிக்கும் உரிமையும் இருக்கின்றது. ஆனால் அவர்கள் செய்த அடிப்படை பிழைகள் காரணமாக மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியதுபோல் அராஜகமும் கள்வர்களும் பொய்யையும் பிழையையும் கூறிக்கொண்டு பொதுமக்களை ஏமாற்ற ஆரம்பித்திருக்கின்றார்கள். பொதுமக்களே, உங்கள் பங்கு வந்திருக்கின்றது. பொய்யர்களுக்கும் கள்வர்களுக்கும் ஆட்சியைக்கொடுத்து விட்டு மீண்டும் நீங்கள் ஆழ்ந்த நித்திரையில் உறங்கப்போகின்றீர்களா, உங்கள்பெறுமதியான வாக்குகளைப் பயன்படுத்தி நாட்டுக்கும் மக்களுக்கும் பயன்படும் ஆட்சியைத் தெரிவுசெய்யப்போகின்றீர்களா. முடிவு உங்கள் கையில் தான்.

Lets make clear things please, Insha Allah.
http://www.adaderana.lk/news/57004/gotabaya-a-silent-man-of-action-mahinda
Gotabaya, a silent man of action - Mahinda
August 11, 2019 02:21 pm

Q: And that attack on Muslims that they attributed to Mr. Gotabaya?

That was a lie spread by them. They would go and attack Muslim villages and say loudly, ‘Vote for Rajapaksa’, so the blame would be on us. It was an organized and planned campaign against us. But now the Muslim people know who was really responsible, they are intelligent and educated.
Mr. Abu Abdullah, your comment interpretation is "INCORRECT".
Noor Nizam - Convebner "The Muslim Voice".

அப்படி வந்தால்....
வருவதற்கு முன் எல்லா ஊர்களிலும் வருபவர்களை கவனிக்க தயாராக இருங்கள். நல்ல முறையில் கவனிக்க வேண்டும்.
தகப்பன் பெயர் தெரியாத, தகப்பன் யார் என்று தெரியாத பாவப்பட்டவர்கள் வருவாங்க வாரது வரட்டும் நல்ல முறையில் கவனிக்க வேண்டும்.

Post a Comment