Header Ads



ஜனா­தி­பதி தேர்தல் என்­பது குறுந்­தூர ஓட்­டப்­போட்டி, நாமலின் நலனுக்காகவே பொது­ஜன பெர­முன உருவானது

ஐக்­கிய தேசிய முன்­னணி ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முழு­மை­யான தயார் நிலையில் இருக்­கி­றது. ஜனா­தி­பதி தேர்தல் என்­பது குறுந்­தூர ஓட்­டப்­போட்டி போன்­ற­தாகும். ஆகவே ஜனா­தி­பதி தேர்தல் நெருங்­கி­ய­வுடன் எமது வேட்­பா­ளரை அறி­விப்போம்.  கட்­சியின் சார்பில் யார் வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கப்­பட்­டாலும் அவ­ருக்கு நாங்கள் முழு ஆதரவை வழங்­குவோம்' என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹிரு­ணிகா பிரே­மச்­சந்­திர தெரி­வித்தார். 

அதே­வேளை  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் அந்­த­ரங்க உடன்­ப­டிக்­கை­களை மேற்­கொண்டு ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்கும் எவ­ருக்கும் ஆத­ர­வ­ளிக்கப் போவ­தில்லை. ஐக்­கிய தேசிய கட்­சியை இரண்­டாக பிள­வு­ப­டுத்தும் முயற்­சி­களை ஜனா­தி­பதி முன்­னெ­டுத்து வரு­கின்றார் என்றும் அவர் குற்­றஞ்­சு­மத்­தினார்.  அலரி மாளி­கையில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் இவ்­வாறு தெரி­வித்தார்.

 அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், 

ஐக்­கிய தேசிய முன்­னணி எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முழு­மை­யாக தயார் நிலை­யி­லேயே உள்­ளது. கடந்த நான்­கரை வரு­டங்­களில் பாரிய அபி­வி­ருத்திப் பணிகள் நிறைவு செய்­யப்­பட்­டுள்­ளன. எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் 15ஆம் திகதி பலாலி விமான நிலையம் திறந்­து­வைக்­கப்­ப­ட­வுள்­ளது. அதன் பின்னர் சர்­வ­தே­சத்­து­ட­னான எமது தொடர்­பு­களை மேலும் வலுப்­ப­டுத்திக்கொள்ளக்கூடி­ய­தாக இருக்கும். 

அதற்கு மேல­தி­க­மாக  ஒக்­டோபர்  30ஆம் திகதி குளி­யாப்­பிட்டி பிர­தே­சத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள  தொழில்நுட்ப கல்­லூ­ரியை திறந்து வைக்­கவும் எதிர்­பார்த்­துள்ளோம். கம்­பெ­ர­லிய வேலைத்­திட்­டத்­தி­னூ­டாக வெகுவிரை­வாக கிராமப் புறங்­களில் காணப்­படும் அடிப்­படைப் பிரச்­சி­னை­களை நிறைவு  செய்யும் வேலைத்­திட்­டங்கள் இடம்­பெற்றே வரு­கின்­றன.  

இவ்­வா­றான அபி­வி­ருத்திப் பணி­களை முன்­னெ­டுத்து வரு­கின்ற நிலையில்  சக­லரும் எங்­க­ளிடம் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு தயாரா  என்று வின­வு­கின்­றனர். இலட்­சக்­க­ணக்­கான மக்­களின் ஆத­ரவை வென்ற சிறந்த  தலை­வர்கள் எங்­க­ளுடன் இருக்­கி­றார்கள். கடந்த வருடம் இடம்­பெற்ற  52 நாள் அர­சியல் நெருக்­க­டியின்போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு பக்­க­ப­ல­மாக இருந்து நீதி­யான முறையில் அர­சாங்­கத்தை பாது­காப்­ப­தற்கும் எங்­க­ளுக்கு ஒத்­து­ழைப்பை வழங்­கி­யி­ருந்­தார்கள். அதே­போன்று ஜனா­தி­பதி தேர்­தலிலும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் முக்­கிய தலை­வர்கள் ஒன்­றி­ணைந்து பய­ணிக்க தயா­ரா­கவே இருக்­கின்­றனர்.  

இந்த தடவை ஜனா­தி­பதி தேர்தல் இல­கு­வா­ன­தாக அமையப் போவ­தில்லை.  ஸ்ரீ லங்கா பொது­ஜன முன்­ன­ணியை போன்று எங்­களின் கட்­சியில் எந்த முரண்­பாடும் கிடை­யாது. ஆகவே கூட்­ட­ணி­யின்றி  தனித்து போட்­டி­யிடும் எவ­ராலும் தேர்­தலில் வெற்­றி­பெற முடி­யாது. தற்­போ­தைய  நிலை­மை­களில் பொது­ஜன முன்­ன­ணியின் வேட்­பாளர் கோத்­தபாய ராஜ­ப­க் ஷவை சந்­தைப்­ப­டுத்­து­வ­திலும் அந்த பிரி­வினர் சிக்­கலை சந்­தித்­துள்­ளனர்.  

ஜனா­தி­பதி தேர்தல் குறுந்­தூர ஓட்டப் போட்­டியை போன்­ற­தாகும். ஆதலால் இதனை மரதன் ஓட்­டப்­போட்டி போன்று கருதி தேர்­த­லுக்கு தயா­ரா­கு­வதால் எந்த பலனும் கிடைக்கப் போவ­தில்லை. 2015 ஆம் ஆண்டும் தேர்தல் காலம் நெருங்­கி­ய­வு­ட­னேயே எங்­களின் வேட்­பா­ளரை அறி­வித்தோம். இம்முறையும் தேர்தல் காலம்  நெருங்­கி­ய­வு­டனே எங்­களின் வேட்­பா­ளரை அறி­விப்போம். அவ்­வாறே வேட்­பாளர் யாராக இருந்­தாலும் இந்த தேர்­தலில் நிச்­ச­ய­மாக வெற்­றி­ய­டைவோம்.

கூட்­டணி அமைப்­ப­தற்­கான பேச்­சு­வார்த்­தை­களும் நிறை­வுக்கு வந்­துள்­ளன. பங்­காளிக் கட்­சி­களும் எங்­க­ளுடன் பய­ணிக்க தயா­ராக இருக்­கின்­றன.  புதி­தாக தமது வாக்கு உரி­மையை பிர­யோ­கிக்­க­வுள்ள இளை­ஞர்கள் 11 வரு­டங்­க­ளுக்கு முன்­பாக இருந்த ஆட்­சியை மறந்­தி­ருப்­பார்கள். அதனை அவர்­க­ளுக்கு நினை­வுப­டுத்த வேண்­டிய நிலை உரு­வா­கி­யுள்­ளது. கோத்தபாய ராஜ­ப­க் ்ஷவின் சகல கருத்­துக்­களும் தூக்­கத்­தி­லி­ருந்து எழுந்து பேசு­வதை போன்­ற­தாகும். தான் கூறும் விட­யங்கள் மாத்­தி­ரமே ஊட­கங்­களில் வெளி­யாக வேண்டும் என்று கரு­து­கிறார். 

கோத்­தபாய ராஜ­ப­க் ்ஷவின் உத்­த­ரவின் கார­ண­மா­கவே எனது தந்­தையை நான் இழந்தேன். அதனை மேர்வின் சில்­வாவும் தனது வாக்கு மூலத்­தி­னூ­டாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார். ஆகவே அவ­ரது செயற்­பா­டு­களால் நான் தனி­ப்பட்ட ரீதியில் பாதிப்­ப­டைந்­துள்ளேன். 

பாரா­ளு­மன்ற உறுப்பினர் நாமல் ராஜ­ப­க் ்ஷவின் அர­சியல் எதிர்­கா­லத்­துக்­கா­கவும்  குடும்ப நல­னுக்­கா­க­வுமே பொது­ஜன பெர­முன என்ற  கட்சி தோற்றம் பெற்­றது.  ஆகவே  கோத்­தபாய ஜனா­தி­ப­தி­யானால்  அதனால் ஏற்­படக்கூடிய விளை­வு­களை அன்று உணரக்கூடி­ய­தாக இருக்கும்.  ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­க­ளிடம் இன்று ஊட­கங்கள் கேள்வி  கேட்­பதைப் போன்று கோத்­தபாயவின் ஆட்சி வந்தால்  அதற்கு இடம் கிடைக்­கப்­போ­வ­தில்லை. 

கேள்வி: ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்து ஐக்­கிய தேசிய கட்­சிக்குள் வேறு­பட்ட கருத்­துக்கள் எழுந்­துள்ள நிலையில், யார் வேட்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டால் வெற்­றி­ய­டைய முடியும் என்று நீங்கள் கரு­து­கி­றீர்கள்?  

பதில்: எனக்கு என்­றுமே கட்­சியின் தலை­மைத்­து­வத்­துடன் நெருக்கம் இருந்­தது கிடை­யாது. தற்­போது  ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­களின் பட்­டி­யலில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, கட்­சியின் பிரதி தலைவர் சஜித் பிரே­ம­தாச,  சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­யவின் பெயரும்  முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவர்­களில் யார் வேட்­பா­ள­ரா­னாலும் எங்­களின் ஆத­ரவை வழங்­குவோம்.  கடந்த காலங்­களில் ஐக்­கிய தேசிய கட்­சிக்குள் பிளவை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே முன்னெடுத்து வந்தார். 

தற்போதும் கட்சியை இரண்டாக்கும் முயற்சிகளையே ஜனாதிபதி முன்னெடுத்து வருகிறார். ஜனாதிபதி தேர்தல் குறித்து ஐக்கிய தேசிய கட்சியிலுள்ள ஒருசில உறுப்பினர்களிடம் அவர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக எங்களுக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.  ஆகவே  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அந்தரங்க  உடன்பாடுகளை வைத்துக்கொண்டு  ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் எவருக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை.  கட்சியின்  சகல தலைவர்களும்  ஒன்றுகூடி கலந்துரையாடி எடுக்கும் தீர்மானங்களை கட்சியின் சகல உறுப்பினர்களுடனும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.