Header Ads



றிசாத் பதியுதீன் தொடர்பில், பொய்யுரைத்தார், இராணுவத் தளபதி - கம்மன்பில பிதற்றுகிறார்

இராணுவத் தளபதி பொய்யுரைத்துள்ளார் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ரிசாட் பதியூதீன் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியதாக இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க வெளியிட்ட தகவல் பொய்யானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களை விடுதலை செய்ய மன்னாரை மையமாகக் கொண்ட அமைச்சர் ஒருவர் தமக்கு அழுத்தங்களை பிரயோகித்தார் என அரசாங்க பத்திரிகையொன்றுக்கு இராணுவத் தளபதி கூறியிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினால் அமைச்சர் ரிசாட்டுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் முதல் குற்றச்சாட்டே இந்த அழுத்தம் குறித்தானது என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரை விடுதலை செய்யுமாறு ரிசாட் கோரியதாகவும் ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். எனினும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்று சாட்சியமளித்த போது அவர் வேறுவிதமான கருத்துக்களையே வெளியிட்டிருந்தார்.

ரிசாட் பதியூதீன் அழைபேசியில் அழைத்து சந்தேக நபர்கள் பற்றி கோரிய போது ஒன்றரை ஆண்டுகளின் பின்னர் தகவல்களை வழங்குவதாக தாம் கூறியதாக முன்னதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டிருந்தார் எனவும் பின்னர் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் வேறும் ஓர் விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இராணுவத் தளபதி பொய்யுரைப்பது உறுதியாகின்றது என்பதுடன் அவர் மீது தேவையற்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதும் உறுதியாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

7 comments:

  1. ரணில் தனது அரசை காப்பாற்ற, ராணுவ தளபதியை பொய் சாட்சியாக்க அழுத்தம் கொடுக்கப்ட்டுள்ளது என 90% பெரும்பாண்மையான இலங்கை மக்களின் கருத்து.

    எனவே, றிசாத், ஹிஸ்பல்லா, குருநாகல் Dr ஆகியவர்களுக்கு எதிராக முதலிருந்து எல்லா விசாரணைகளும் FBI உதவியுடன் ஆரம்பிக்க வேண்டும்.

    ReplyDelete
  2. It appears that all Hela urumaya Part former and current members and it's affiliated members and their parties and group becoming terrorist. They should be banned for creating false allegations and disharmony in the country. This include current minister, MP in yellow robe, criminal in yellow robe just got out from jail which can't be justified and number one criminal studied in Australia who is a bloody dumbest person

    ReplyDelete
  3. பாதுகாப்பு உயர்மட்டத்தினரையே இவர்கள் இவ்வாறு அவதூறாக விமர்சித்தால்,நாட்டில் வாழும் சாதாரண பொதுமக்களின் நிலமை எவ்வாறு இருக்கும்.அதுதான் ஜ நா வும் சொல்லிவிட்டது Sri Lanka வில் இனவாதம் எல்லை மீறிச் செல்கிறது என.

    ReplyDelete
  4. என்ன ஒரு அறிவு இவருக்கு,ஒரு இரானுவ தளபதிக்கு அழுத்தம் பிரயோகிப்பது உலகில் எங்கும் நடக்காத ஒரு விடயம் என்பது சாதாரண பொது மக்களுக்கும் தெரிந்த விடயம்.

    ReplyDelete
  5. Appo iwararu sollura maathiri iwarukku ponnaday potthi kondaadanum....iwangathaan ithukkellam kooli waangiyaache...pesaaty ellam.peyrume...ithuthaan iwarda job...
    Makkale konajm unarawa yosinga...

    ReplyDelete
  6. ஆமா ajan, அல்பிரட் துரையப்பா முதல் லக்ஸ்மன் கதிர்காமர் வரை நடந்த அத்தனை கொலைகளையும் விசாரிக்க சொல்ல வேண்டும் FBI யிடம். மிக முக்கியமாக அத்தனை கொலைகளுக்கும் முட்டுக் கொடுத்து வக்காலத்து வாங்கும் அத்தனை தேச துரோகி தமிழனுகளையும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்க வேண்டும்

    ReplyDelete
  7. முதலில் ajan எனும் பயங்கரவாதியை FBI விசாரிக்க வேனும்

    ReplyDelete

Powered by Blogger.