Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகள், தடையாக இருக்கிறார்கள் - ரதன தேரர்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு 2014ஆம் ஆண்டு எல்லா அதிகாரமும் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டிருக்கின்ற நிலையில், அதனை முஸ்லிம் அரசியல்வாதிகள் தடுத்து வைத்துக் கொண்டு, செயற்பட்டு கொண்டிருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

நான்காவது நாளாகவும் கல்முனையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று -20- நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் கல்முனைக்கு விஜயம் மேற்கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர்,

அதாவது உங்களுக்கு இந்த பிரதேச செயலகம் தொடர்பாக கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தின் கீழ் நீங்கள் ஆழ வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

அதை தவிர்க்கும் முகமாக நீங்கள் அது தொடர்பில் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உருவாக்க வேண்டும் என்று. அதில் உங்களுக்கு தேவையான முக்கியமான அதிகாரங்களான காணி அதிகாரங்கள், நிதி அதிகாரங்கள் என்பன உங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. எனவே அது தொடர்பாகத் தான் இன்று நீங்கள் உண்ணாவிரதம் இருக்கின்றீர்கள்.

இன்று இந்த பிரதேச செயலகம் தொடர்பாக பெரும்பாண்மையாக தமிழ் மக்கள் வாழ்ந்துக் கொணடிருக்கின்ற பிரதேசத்திலே அவர்களுக்கு அதிகாரத்தை வழங்காமல் அவர்களுக்கு தேவையான காணி, நிதி அதிகாரங்கள் என்பவற்றை வழங்காமல் அதனை தடுத்து வைத்துக் கொண்டு செயற்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

அதே போன்று இன்று பல வசதிகளும் இருக்கின்றது. உங்களுக்கு ஒரு பிரதேச செயலகம் ஒன்று இருக்கின்றது. அதை தரம் உயர்த்த வேண்டும் என்பதற்காக தான் எங்களது ஒரு தேரர் உட்பட பல பேர் இங்கு உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இங்கு பெரும் அநீதியிழைக்கப்பட்டு கொண்டு இருக்கின்றது.

நாங்கள் அனைவரும் இது தொடர்பாக ஆராய இருக்கின்றோம்.

அதாவது இந்த பிரதேச செயலகம் தொடர்பாக 2014ஆம் ஆண்டு இதனை கொடுக்க வேண்டும் என்று சொல்லி எல்லா அதிகாரமும் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அதனை தடுத்து வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இதற்கு தடையாய் இருப்பவர்கள் இந்த பிரதேசத்தில் இருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்.

இந்த விடயம் தொடர்பாக அறிக்கை சமர்பிப்பதற்கு மாவட்ட அரசாங்க அதிபருக்கு அதிகாரம் இருக்கிறது எனப்படுறது.

மாவட்ட அரசாங்க அதிபருக்கு முடியும் இரண்டு நாட்களில் இந்த சம்பவங்கள் உண்மையா? என்பது உறுதிப்படுத்தக்கூடிய தன்மை.

ஆனால் அவர் இந்த விடயம் சம்பந்தமாக அவருக்கு விளங்கியிருக்கும் மக்கள் கூறுவது உண்மையா? இது நடைபெறுவது உண்மையா என்று? அவருக்குத் தெரியும்.

அவர் தான் இந்த அறிக்கையை மிக இலகுவாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கக் கூடிய ஒரு உத்தியோகஸ்தராக இருக்கின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்போராட்டத்தில் அத்துரலியே ரதன தேரருடன் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரனும் பங்கெடுத்துள்ளனர்.

5 comments:

  1. Well done
    அடுத்த ஜனாதிபதி வேட்பாளருக்கு சரியான ஆள் இந்த பிக்கு தான்.

    ReplyDelete
  2. ajai,ungalai adijodu konrathu,pirapaharan uruvaga kaaranamaga irunthahum,singalamthan .thirunthatha ajai.

    ReplyDelete
  3. this is a matter of Ministry of Public Administration & local authority, with PM , President of the country and no need protests , supporters and again rival party protest. This means their are no law and order.

    ReplyDelete

Powered by Blogger.