June 26, 2019

அபாயாவில் என்ன குறையிருக்கிறது...? சிங்கள வாலிபனின் துணிகரக் கேள்வி


என்னை_முந்திக்_கொண்டு_பதிலளித்த_சிங்கள_வாலிபர்.

அமர்ந்து வேலையொன்று செய்து கொண்டிருக்கையில், எனது கதிரைக்கு பக்கத்தில் வந்து கடிதம் ஒன்றை எழுத ஆரம்பித்தாள்.எனது இந்த (File) பைலை கீழே வைத்து எழுதுங்கள் எனக் கொடுத்தேன்.முடிந்த பின்னர் நீங்கள் ஆசிரியையா?! எனக் கேட்ட போது, ஆம். அப, நீங்களும் ஆசிரியரா?! என என்னிடம் கேட்டார்,ஆம் என்றேன். என்னிடம் கேள்விகளைத் தொடுத்தார்.

ஒங்களுக்கு ஸ்கூல்ற பிரச்சினையில்லை ?! 

தாடிய எடுக்கச் சொல்லல்லயா?! 

புர்காதானே பிரச்சின என்றதும்.!!

எனக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது எனப்பதிலளித்ததும், எமக்குப் பக்கத்தில் தேவை நிமித்தம் வந்திருந்த ஒரு சிங்கள வாலிபன் கேட்டுக் கொண்டிருந்து முந்திக் கொண்டு பதிலளிக்க ஆரம்பித்தார்.

#புர்கா அணிபவர்களுக்கு சலி நோய், ஆஸ்துமா போன்றவைகள் ஏற்படுவதில்லையாம். பாலை வனத்தில் பெண்கள் இயற்கை உபாதைகளை போக்க முகங்களை மறைக்கும் வழக்கம் ஒன்றிந்ததாகவும் செல்லப்படுகிறது. அறபிய கலாசாரம் என்றாலும் , அந்த அபாயாவில் என்ன குறையிருக்கிறது?! சிங்கள மக்களாகிய நாம் எமது கலாசார ஆடையா அணிகிறோம்?! நான் அணிந்திருக்கும் இந்த "ஷேர்ட்" "கல்சன்" எமது கலாசாரமா?! அது மேற்கத்திய கலாசாரம் தானே!! அவர்களது கலாசார ஆடையை அணிவதில் என்ன பிரச்சினை??

"இந்த ஆடையை தடை செய்ய வேணும் என்பது நீண்ட நாள் கனவு. இந்த நிகழ்வை பயன் படுத்திக் கொண்டார்கள். குண்டு வைத்தவர்கள் யாரும் புர்கா, அபாயா அணிந்தவர்கள் அல்லர்."

"இலங்கையில் 2600 பள்ளிகள் உள்ளன. மூன்று பள்ளிகளில் இருந்து மட்டுமே வாள்கள் பிடிபட்டன. அதிலும் அருகாமையில் உள்ள கிணற்றில் இருந்தும், மற்றைய இரண்டும் என்னமோ ஞாபகமில்லை." என்றார்.

#ஹலால் விடயம் என்றார் அந்தப் பெண்.

"அது எழுத்தல்ல அதற்குப் பின்னால் இருப்பது உணவின் ஆரோக்கியம், உட்கொள்வதற்கான உத்தரவாதம்.

சொல்வதையெல்லாம் எம்மவர்கள் தேடிப்பார்க்காமல் அப்படியே கேட்டதை அடுத்தவர்களிடம் சொல்லிவிடுகிறார்கள்." எல்லாம் அரசியல்....

" நீங்க முஸ்லிம் என்றதுக்கு சொல்லவில்லை என்பதை தெளிவான தோரணையில் சொன்னார்".

கண்ணியத்திற்குரிய பிக்குகளில் சிலரின் செயற்பாடுகள் பொருத்தமில்லை. உதாரணமாக: பாதைகளை மறித்து மக்களை விழிப்புணர்வூட்டுவது என்ற பெயரில் நடைபெறும் விடயம். அப்படி மக்களுக்குச் சொல்ல வேண்டிதை பன்சலயில் வைத்துச் சொல்லலாம்...என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது அவருடன் வந்தவரின் வேலை முடிந்து வந்து, போவோம் என்றதுடன், போய் வருகிறேன் என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

"நகர் புற மக்களை விட , கிராமப் புற மக்களுக்கு விடயங்களை அழகாகவும் தெளிவாகவும் விளங்கப்படுத்த முடியும். விளங்கும் நிலையில் உள்ளார்கள்" #விக்டர்_ஐய்வன் கூற்று ஞாபக்த்திற்கு வந்தது.

A Raheem Akbar
2019/06/26

3 கருத்துரைகள்:

சிங்கள மக்கள் மாத்திரமல்ல அனைத்து சாதாரண மக்களும் மிகவும் தெளிவானவர்களாகவே இருக்கின்றனர். சமூகத்தில் தங்கள் கடமையும் பொறுப்பும் என்னவென்பது அவர்களுக்கு மிகவும் அத்துப்படி. என்ன செய்வது காடையர்களுக்கு முன்னால் தங்கள் இயலாமையை மறைக்க “மௌன விரதம்” காக்கின்றனர் அவ்வளவுதான்.

வாய் திறக்க வேண்டியவர்கள் வாய் திறவாது இருப்பதும் குற்றச் செயல்களுக்கு அங்கீகாரமாக விடுகிறது. இது அனைத்து சாராருக்குமானது.

அல்லாஹ் கூறிய அத்துமீறல், வரம்பு கடத்தல் போன்றவையும் நம்மைக் காத்துக் கொள்ளும் வழிமுறைகள்தான் என்பதை முஸ்லிம்கள் உணர்ந்து நடந்திருந்தால் இன்று, ஹலால், ஆடை பிரச்சினைகள் தோன்றியிரா.

அல்லாஹ் பிரச்சினை உருவாகும் மார்க்கத்தை மனித குலத்துதிற்கு அருளியிருக்கவில்லை. விளங்கிக் கொண்ட, நடைமுறைப்படுத்திய, தான்தோனலறித்தனமாக நடக்க முயன்றவைகளாலேயே பிரச்சினைகள் தோன்றிட வழி சமைத்துக் கொடுத்தன.

பிரிவினைகளும், மார்க்கத்தின் தலைமைகள் பிரிவினையில் மாட்டிக் கொண்டதும், தேவையற்ற விடயங்களில் யாரையோ திருப்திப் படுத்திட முனைந்து ஈடுபட்டதும் இன்றைய இழி நிலைக்குக் காரணமாகும்.

ஒரு பெண் தன் உடலை மறைத்து ஆடை அணிவதை பலரும் விரும்புகின்றனர். கறுப்பும், முகமூடியும் தான் விரும்புகின்றவர்களையும் குழப்பியது.

Post a comment