Header Ads



ஆடை பற்றிய சுற்றறிக்கையில் மாற்றமில்லை - ரணிலின் வாக்குறுதி குப்பை கூடைக்கு சென்றது

அரச துறை உத்தியோகத்தர்கள் சம்பந்தமாக வௌியிடப்பட்ட சுற்றறிக்கையை திருத்தம் செய்வதற்கு இன்னும் தீர்மானிக்கவில்லை என்று பொது நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சு கூறியுள்ளது. 

அந்த சுற்றறிக்கையை திருத்தம் செய்வதற்கோ அல்லது தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கோ நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதன் பேச்சாளர் ஒருவர் கூறினார். 

அனைத்து அரச உத்தியோகத்தர்களும் அந்த சுற்றறிக்கைக்கு அமைவாக செயற்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

கடந்த 17ம் திகதி சாரி அல்லது ஒசரி மாத்திரம் அணிந்து கொண்டு பணிக்கு வருமாறு கூறி பொது நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளரால் சுற்றறிக்கை வௌியிடப்பட்டது. 

எவ்வாறாயினும் வெவ்வேறு இன பெண்கள் அணியும் ஆடைகளில் வித்தியாசம் இருப்பதாகவும் சாரி அல்லது ஒசரி மாத்திரம் அணிய கட்டாயப்படுத்துவது மனித உரிமை மீறல் என்று னித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது. 

இதேவேளை பொது நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சால் வௌியிடப்பட்ட சுற்றறிக்கையை பின்பற்ற தேவையில்லை என்று பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

6 comments:

  1. சாரியையும் உடல் மறைத்து அழகாக உடுக்கலாம் ரீ சேட் டெனீம் பாவாடை சட்டை அணிபவர்கள்தான் கவலைப்பட வேண்டும். எனவே இச்சட்டம் ஒழுக்கத்தைக் கொண்டு வரும்.

    ReplyDelete
  2. @Suhaib

    உன்னுடைய பெயரை குமார்,குப்புசாமி,கந்தசாமி என்று மாற்றிகொள் அது தான் உமக்கு சரியான பெயர்.

    ReplyDelete
  3. P Ms PROMISSES TO MUSLIM
    MPs & MINISTERS,TO ABOLISH THE CIRCULER,
    REGARDING MUSLIM WOMENS DRESS, IN GOVERNMENT INTITUTIONS,
    IS ANOTHER,

    KOLIPPAAL. As usual.

    ReplyDelete
  4. தமது பெயரைக்கூட பதிவதற்கு தைரியமில்லாத சஹ்ரானின் அருடிவருடிகள் மற்றவர்களுக்கு பெயர் வைக்கின்கின்றனர். தாயை விழித்து வசை பாடுமளவுக்கு நான் நாகரீகமற்றவன் இல்லை என்பதால் NGK என்பவரின் அப்பாவித்தாயும் தகப்பனும் என் வசைக்குட்படவில்லை.

    ReplyDelete
  5. தமது பெயரைக்கூட பதிவதற்கு தைரியமில்லாத சஹ்ரானின் அருடிவருடிகள் மற்றவர்களுக்கு பெயர் வைக்கின்கின்றனர். தாயை விழித்து வசை பாடுமளவுக்கு நான் நாகரீகமற்றவன் இல்லை என்பதால் NGK என்பவரின் அப்பாவித்தாயும் தகப்பனும் என் வசைக்குட்படவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.