Header Ads



ஹிஸ்புல்லாவும், ஆசாத்தும் விலகியதை அடுத்து பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி

சர்ச்சைக்குரிய ஆளுநர்களான அஸாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது ராஜினாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ள நிலையில் திருகோணமலை மக்கள் வெடி கொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்துள்ளனர்.

அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அஸாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவியிலிருந்து நீக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இவருக்கு வலுசேர்க்கும் வகையில் நாட்டின் பல பகுதிகளிலும் உண்ணாவிரதப் போராட்டங்களும், கடையடைப்பு போராட்டங்களும், பேரணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் சிலர் இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.

அவர்கள் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று தமது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ள நிலையில், கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உண்ணாவிரதத்தில் ஈடுபடுபவர்கள் இந்த தகவலை அறிந்துள்ள நிலையில் வெடி கொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்துள்ளனர்.

5 comments:

  1. until mahinda and his family present in politics the country not gonna have a peace and law and order.

    ReplyDelete
  2. இப்போதே உறுதியாகிவிட்டது.அடுத்த முறை மஹிந்த அணி ஆட்சியை கைப்பற்றிவிடும் என்பது.என்வே மீண்டும் தமிழா உன் பக்கம் அவர்களின் கத்தி திரும்பும்.அப்போது பார் அது முள்லி வாய்க்காலை விட கேவலமாக இருக்கும்.இருந்து பார் எமது மகிழ்ச்சியை அப்போது.ஏனெனில் வியாழந்திரனும்,கருணாவும் இப்போது இனவாதம் பேசி உங்களை மடக்கி வைத்துள்ளனர்.ஆனால உங்களுக்கு ஒரு பிரச்சினை திணிக்கப்படும் போது,அவர்கள் ஓடி ஒளிந்து விடுவார்கள்.அந்த நாள் வெகு விரைவில்.

    ReplyDelete
  3. @Rizard, காத்தான்குடியில் தான் அடுத்த அடியாம்

    ReplyDelete
  4. இதைதான் 2009 இல் நாங்கள் பிணங்களாக கிடந்த போது நீங்கள் செய்தீர்கள். ஆனால் நாங்கள் பிணமாக கிடக்கும் போது கொண்டாடவில்லை , ஆசாத்சாலியும் ஹிஸ்புல்லாவும் 21/4 இன் பின்பு கூட எங்களிடம் தான் தங்கள் ஆதிக்க வெறியை காட்டினார்கள். எல்லாவற்றிற்கும் ஓட்டமாவடி காளிதுணை.

    ReplyDelete
  5. Rasa 2009இல் செத்ததெல்லாம் பயங்கரவாதிகள். பயங்கரவாத கூட்டம் வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன? 30 வருடங்கள் பயங்கரவாதிகள் விதைத்த வினையை தான் முள்ளிவாய்க்காலில் அனுபவித்தீர்கள். அவன் பாற்சோறு கொடுத்தான் மசிறி பிடிங்கினான் என்று ஊளையிடுவதை விட பிச்சையெடுத்துகொண்டிருக்கும் முன்னாள் தமிழ் பயங்கரவாதிகளை பாருங்கள்

    ReplyDelete

Powered by Blogger.