Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்

- AAM. Anzir -

இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும்,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முக்கிய சந்திப்பு நடைபெற்றது.

தமது அமைச்சு மற்றும் பிரதியமைச்சு பதவிகளில் இருந்து விலகுவது குறித்த தீர்மானத்தை இதன்போது முஸ்லிம் அரசியல்வாதிகள் அறிவித்தனர். இதைக்கேட்டு அப்சட் ஆன பிரதமர், ரணில் விக்கிரமசிங்க இதனால் அரசாங்கம் ஆட்டம் காணலாம் என தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்போது குறிக்கிட்டுள்ள அமைச்சர் மங்கள சமரவீர எக்காரணம் கொண்டும், முஸ்லிம் அரசியல்வாதிகள் பதவி விலகக்கூடாதென வலியுறுத்தியுள்ளார்.

எனினும் தமது தீர்மானத்திலிருந்து பின்வாங்காத, முஸ்லிம் அரசியல்வாதிகள் பதவிகளை துறப்பது என்ற தமது தீர்மானத்தில் உறுதியாக உள்ளனர்.

8 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ்...
    உஙகள் ஒத்துமையை பாராட்டுகிறோம், இந்த ஒத்துமையின் மூலம் முஸ்லீம் சமூகத்தின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுக்க அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் அருள் புரிவானாக ஆமின்

    ReplyDelete
  2. very good news....

    ReplyDelete
  3. நாட்டில் நடக்கும் அக்கிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாயின் அனைத்து முஸ்லீம் அமைச்சர்களும் உடனடியாக சர்வதேச ஊடகங்கள் முன்னிலையில் பதவி விலக வேண்டும்.

    ReplyDelete
  4. தேர்தலுக்கு போய் முஸ்லிம்களின் பலத்தை உணர்த்தி அவர்களின் உரிமைகளுக்காக பேரம்பேசி அதில் கைவைக்க கூடாதென உறுதியெடுத்து உறுதியான ஆட்சி தொடரும் வகையில் எமது வியூகங்களை அமைக்க வேண்டும்.அதற்காக யாரும் இனவாத த்தை விதைக்கும் அணியுடன் போய்ச் சேர வேண்டுமென நினைக்க கூடாது.அவர்கள் இறுமாப்பில் விரும்பினால் வாழுங்கள் இல்லாவிட்டால் பெளத்த நாட்டிலிருந்து வெளியேறுங்கள் என்கின்றனர்.

    ReplyDelete
  5. ஒட்டுமொத்த சிறுபான்மையினருக்கும் ஒரு அபாய அறிவிப்பாகவே இன்றைய கண்டி நிகழ்வு கருதப்படவேண்டும்.
    ஒரு காவிய உடையின் உண்ணாவிரதம் இரண்டு சிறுபான்மை ஆளுனர்களை ஆட்டம் காண வைத்துள்ளது. எதிர்காலத்தில் பல காவியுடைகள் இணைந்து உண்ணாவிரதம் என்ற பெயரில் ஒட்டுமொத்த சிறுபான்மையினரையும் மண்டியிட வைப்பதற்கான ஆரம்பமாகவே இன்றைய நிகழ்வு இருக்கும்.
    சிறுபான்மையினர் குறிப்பாக தமிழ்,முஸ்லீம்இ சமூகங்கள் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமை படவேண்டிய தேவை உடனடியாக உணரப்பட வேண்டும்

    ReplyDelete
  6. இந்த ஒத்துமையை கண்டு சந்தோச படாத முஸ்லிமே இருக்க முடியாது (அல்ஹம்துலில்லாஹ்)

    ReplyDelete
  7. ஏதோ நடந்தது நடந்துவிட்டது. இனிமேலாவது தமிழ் முஸ்லிம் தரப்புகள் ஒன்று சேர்ந்து தம் அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துச் சென்றால் நிச்சயமாக நல்லதே நடக்கும். ஒரு இனத்தை கைக்குள் வைத்து மற்ற இனத்தை கருவருக்கும் முயற்சிக்கு நாங்களே உதவியாக இருந்துவிடக்கூடாது.

    ReplyDelete

Powered by Blogger.