Header Ads



மத்ரஸாக்களில் கல்வி பயிலும் 35.000 மாணவர்கள் அடிப்படைவாதிகளாக வர வாய்ப்புண்டு - பொய்கூறும் ரதன தேரர்

இஸ்லாமிய மத்ரஸா பாடசாலைகளில் அடிப்படைவாதமே போதிக்கப்படுகின்றன. எனவே அங்கு கல்வி பயிலும் 35 ஆயிரம் மாணவர்கள் எதிர்காலத்தில் அடிப்படைவாதிகளாக வருவதற்கு வாய்ப்புண்டு என எச்சரிக்கை விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்னதேரர்.

இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று இடம்பெற்ற திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவுக்கு விற்கும் சோபா ஒப்பந்தத்தை இல்லாதொழிப்போம் என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தற்போது இவ்வாறான பாடசாலைகளில் கல்வி கற்கும் 35 ஆயிரம் மாணவர்கள் ஒரு காலத்தில் அடிப்படைவாதிகளாக தோற்றம் பெற வாய்ப்புண்டு இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. நாட்டில் இன்று இஸ்லாமிய அடிப்படைவாதம் ஒரு புறமும், வல்லரசு நாடுகளின் ஆக்கிரமிப்புக்கள் ஒப்பந்த ரீதியில் இடம் பெறுவது மறுபுறமும் என இடம்பெறுகின்றன.

இவ்விரு செயற்பாடுகளுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தான்தோன்றித்தனமான பொருளாதார கொள்கைகளும், பொருத்தமற்ற அரசியல் கொள்கைகளுமே மூல காரணியாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

5 comments:

  1. தன்னுடைய இனவெறியின் பின்னணியில் இரண்டு முஸ்லிம் கவர்களை பதவி இறக்கிய வெறியில் துள்ளும் இந்த இனவெறி பிடித்த இனவாதக் காபிரின் முயற்சியும் இவனைத் தூண்டும் வங்கரோத்து அரசியல்வாதிகளும் அவனைச் சார்ந்தவர்களையும் அழித்து நாகமாக்கி, முஸ்லிம்களின் நிலைப்பாட்டை இந்த நாட்டில் ஸதிரப்படுத்துமாறும் அல்லாஹ்விடம் இறைஞ்சிக்கேளுங்கள். அல்லாஹ் நிச்சியம் உங்கள் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வான்.

    ReplyDelete
  2. வெக்கமில்லையாடா? காவிநிர பிடவையை கிழட்டிவிட்டு தன் குடும்மபத்தை காபற்ற உழைப்பதட்கு கஸ்டபடும் நம் நாட்டு ஏழைமக்ளின் வாழ்கையை சற்று அனுபவித்துப்பார் அப்போது நீ தற்போது சொல்லித்திரியும் பல அபாண்ட பொய்களின் விபரீதங்கள் உணர்ந்து கொள்வாய் மேலும் உனது உண்மை நிலைமையையும் உன்னை படைத்த ஏக ஒருவனாகிய கடவுளையும் சில நேரம் தெரிந்து கொள்வாய்!

    ReplyDelete
  3. DALADA MALIHAIKKU MUNNAL
    SHÀAHUM WARAI UNNAAVIRAZAM
    IRUKKALAMEI.

    ReplyDelete
  4. பாவம் விடுங்கள் ஏதோ மன வியாதியால் அவதிப்படும் ஒருவர்

    ReplyDelete

Powered by Blogger.