Header Ads



சக்தி TV க்கு எதிராக, கிண்ணியா நகரசபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்

சக்தி ரி.வி.க்கு எதிராக, கிண்ணியா நகர சபையில் கண்டனத் தீர்மானமான்று, இன்று செவ்வாய்கிழமை நிறைவேற்றப்பட்டது.

கடந்த மாதம் 21ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னரான அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு, முஸ்லிம்கள் தொடர்பாக  சக்தி ரி.வி எனும் ஊடகம் முறையாக வழிநடத்தப்படவில்லை என்றும், ஊடக தர்மம் மீறப்பட்டுள்ளதை வன்மையாக கண்டித்தும், இதன்போது நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். நளீம் உரையாற்றினார்.

கிண்ணியா நகர சபை அமர்வு இன்று இடம்பெற்ற வேளை, சக்தி ரி.விக்கு எதிராக கண்டனப் பிரேரனையை முன்வைத்து தவிசாளர் நளீம் உரையாற்றினார்.

சக்தி ஊடகத்துக்கு எதிராக கண்டணப் பிரேரனையை சக உறுப்பினர்கள் உட்பட தானும் ஏற்றுக் கொள்வதாகவும் இதன்போது தவிசாளர் கூறினார்.

“நாட்டின் அசாதாரண நிலைமையின் போது ஊடகங்கள் தர்மத்தை மீறாதவாறு நடந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக காட்ட நினைப்பது எமக்கு மனவேதனையை தருகிறது.

ஊடகங்கள் சுதந்திரமாக செயற்படுவதை நாங்கள் வரவேற்கிறோம். உண்மை நிலையை எடுத்துக்காட்டுவதை விரும்புகிறோம். இதை விடுத்து அசாதாரண நிலைமையின் போது முஸ்லிம்களுக்கு எதிராக வதந்திகளை பரப்புவதை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறான செய்திகளால் மக்களுடைய அன்றாட நடவடிக்கைகள் பாதிகக்கப்படுகிறது. இதன் மூலம் பெரும் அச்சத்தை இந்த ஊடகம் உண்டு பண்ணுகிறது” என்றும் அவர் இதன் போது தெரிவித்தார்.

– ஹஸ்பர் ஏ ஹலீம் –

3 comments:

  1. அவர்கள் ஊடகமாம்

    ReplyDelete
  2. Then what about Hiru and Ada Derana TV? They were also misleading the public about Muslims. They were biased and did not follow any ethics of journalism. They acted like TVs against Muslims.

    ReplyDelete
  3. Shakthi TV telecasting only Tamil program and Tamil news. In general they are criticizing everyone whether they are Tamils, Muslims or Sinhalese. If you watch sinhala news channels, this shakthi TV is nothing.

    ReplyDelete

Powered by Blogger.