May 06, 2019

சஹ்ரானின் ஆயுதப் பிரி­வுக்கு பொறுப்­பான, மில்ஹானைத் தேடி வேட்டை


(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயி­றன்று இலங்­கையில் இடம்­பெற்ற தொடர் தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டைய பிர­தான சந்­தேக நபர் ஒரு­வரைக் கைதுசெய்ய சி.ஐ.டி. சிறப்பு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது.  

குறித்த கொடூர தாக்­கு­தல்­களை நடத்­திய தேசிய தெளஹீத் ஜமா அத் எனும் அமைப்பின் ஸ்தாபகர் சஹ்ரான் ஹாஷிம் எனும் பயங்­க­ர­வா­தியின் கீழ் செயற்­பட்ட குழுவின் ஆயுதப் பிரி­வுக்கு பொறுப்­பாக இருந்­த­வ­ராக கரு­தப்­படும் மில்ஹான் எனும் நபரைத் தேடியே இந்த விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தாக பாது­காப்பு உயர்­மட்ட தக­வல்கள் கேச­ரிக்கு வெளிப்­ப­டுத்­தின. 

மில்ஹான் எனும் குறித்த நபர்  தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு முன்னர் சவூதி அரே­பி­யா­வுக்கு  உம்­ரா­வுக்­காக சென்­றுள்­ள­தாக சி.ஐ.டி.க்கு தகவல் கிடைக்கப் பெற்­றுள்ள நிலையில், அவர் மீள இலங்­கைக்கு திரும்­ப­வில்லை எனவும் அவ­ரது பயணப் பொதி மட்டும் இலங்­கைக்கு வந்­துள்­ள­தா­கவும் அந்த தக­வல்கள் குறிப்­பிட்­டன. அதன்­படி மில்­ஹானைக் கைது செய்ய சிறப்புத் திட்டம் வகுக்­கப்­பட்­டுள்­ளது.

 குறித்த சந்­தேக நபர், யுத்த காலத்தில் காத்­தான்­கு­டியில் இயங்­கி­ய­தாக நம்­பப்­படும் துணை  ஆயுதப் படை­களில் இருந்­தவர் என தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில்,  வவு­ண­தீவு, பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் கொலை­யி­னையும் அவரே  நெறிப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும்  தகவ்ல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இதே­வேளை, உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று தற்­கொலைத் தாக்­கு­தல்கள் தொடர்பில் பிர­தான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும், சி.ஐ.டி. எனும் குற்றப் புல­னாய்வுப் பிரிவு, சி.ரி.ஐ.டி. எனும் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவு ஆகி­யன அவை தொடர்பில்  சுமார் 68 பேரை பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் தடுத்து வைத்து  விசா­ரித்து  வரு­கின்­றன . அவர்­களில்  குறித்த தற்­கொலை தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­பட்ட அல்­லது அவற்றை நெறிப்­ப­டுத்­திய பிர­தான சந்­தேக நபர்கள் 8 பேர் அடங்­கு­வ­தாக  உயர்­மட்ட விசா­ரணை தக­வல்கள் ஊடாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

இதே­வேளை மட்­டக்­க­ளப்பு - மன்­முனைப் பற்று , ஒல்­லிக்­குளம் பகு­தியில் தேசிய தெளஹீத் ஜமா அத் ஸ்தாபகர் சஹ்ரான் ஹாஷிமின் சகோ­த­ரான சாய்ந்­த­ம­ருது தற்­கொலை தாக்­கு­தல்­களில் கொல்­லப்­பட்ட  ரில்­வானின் கீழ் இயங்­கி­ய­தாக  கூறப்­படும் பயிற்சி முகாம் ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. சுமார் 15 ஏக்­கர்கள் கொண்ட விசா­ல­மான இடப்­ப­ரப்பைக் கொண்ட இந்த இடம் பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யி­னரின் சிறப்புக் குழு­வி­னரால் சுற்­றி­வ­லைக்­கப்­பட்­டது. இதன்­போது சந்­தேக நபர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். 

இதே­வேளை, உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பிர­தான சந்­தே­க­ந­ப­ரான சஹ்ரான் ஹசிமின் மைத்­துனர் என கூறப்­படும் மெல­ளானா  ரிலா, மற்றும் அவ­ரது சகா­வாக கரு­தப்­படும்  ஷஹ்­னவாஜ் எனும் நபர் ஆகியோர் சவுதி அரே­பி­யாவில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக இந்­திய ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. ஹிந்­துஸ்தான் டைம்ஸ் பத்­தி­ரி­கையில் இந்த  செய்தி வெ ளியி­டப்­பட்­டுள்­ளது.

இந்­திய உள­வுத்­துறை கொடுத்த தகவல் பிர­காரம் அவர்கள் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் அவர்களுக்கும் நாட்டிலுள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகள் மற்றும் கேரளாவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு இடையில் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இந்திய அதிகாரிகள், சவுதி அரேபிய அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து செயற்படுவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a comment