May 25, 2019

நோன்பு காலத்தில், உறவுகள் சிறைச்சாலைகளில் - மையத்து வீடுகளாக முஸ்லிம் வீடுகள்

இலங்கையை பொருத்தவரையில் சந்தர்ப்பவாதிகளின் தூண்டுதலினால் சட்டவிரோதமான கைதுகளும் தடுத்து வைப்புகளும் அங்காங்கே நடைப்பெற்றுக்கொண்டு இருக்கின்றன.

குர்ஆன், இஸ்லாமிய சஞ்சிகைகள் , Laptop, mobile phone, cdக்கள் , ராணுவ உடையை ஒத்த உடைகள் , அன்றாட பாவனைக்கு உபயோகிக்கும் கத்திகள் மற்றும் கோடாரிகள் போன்றவை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் (PTA) உயிரை பறிக்கும் அபாயகரமான ஆயுதங்களாக சித்தரிக்கப்பட்டு பொலிசாரால் அறிக்கைகளுக்காக பகுப்பாய்வுதிணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இப்புனித நோன்பு காலத்தில் தங்கள் உறவுகள் சிறைச்சாலைகளில் தவிப்பதை தாங்கமுடியாத ஒவ்வொரு குடும்பங்களின் வீடுகளும் மைய வீடுகளாகவே காணப்படுவதைக்கண்டு கண்ணீர் விடுவதுடன் எம்மால் முடிந்த உதவிகளை நாம் செய்து வருகிறோம்.

தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றும் குடும்பத்தலைமைகளினது கைதுகளானது, அந்த குடும்பங்களை கடுமையாக பாதித்துள்ள இச்சந்தர்ப்பத்தில் தனது குடும்பத்தின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கே கஷ்டப்பட்டுக்கொண்னிருக்கிறார்கள்

இந்துர்ப்பாக்கியமான சந்தர்பத்தில் PTA சட்டத்தின் உண்மையான நிலைமையை கைதானவர்களின் உறவினர்களுக்கு விளங்கப்படுத்தாமல் "அடுத்த தவணையில் விடுதலையை பெற்றுத்தருகிறேன்" எனக்கூறி பெருந்தொகையாக பணத்தினை சில சட்டத்தரணிகள் கட்டணமாக பெற்றதை எமக்கு வரும் தொலைபேசி அழைப்புகளினூடாக அறியக்கூடியதாக உள்ளது.

"கேட்ட பணத்தை கட்டணமாக கொடுத்து விட்டோம் , பல தவணைகள் சென்று விட்டன. ஆனாலும் சட்டத்தரணிகள் உறுதியளித்தது போல பிணையோ , விடுதலையோ கிடைக்க வில்லை. இதற்கு பிறகு என்ன செய்யவேண்டும் " எனக்கேட்டு பல தாய்மார்களும் சகோதரிகளும் தொலைபேசியின் ஊடாக அழுகின்ற போது அவர்களுக்கு உண்மையான சட்ட நிலைமையை விளங்கப்படுத்துவதிலேயே எமது பயணங்கள் கழிகிறது .

PTA யின் கீழான கைதுகளின் மூலம் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்குமான பதில்கள் இதோ.

1. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட பொருட்களே அவர்களின் தடுத்து வைக்கும் காலத்தை தீர்மானிக்கிறது.

2. உடமையில் ஏதுமில்லாமல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்கள் விசாரணையின் பின் விடுதலை செய்யப்படுவார்கள்.

3. வெளிமாவட்டங்களில் தொழில் செய்யும் போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் தனது அடையாளத்தை உறுதிப்படுத்திய பின் விடுதலை செய்யப்படுவார்கள் .

4. கத்தி போன்ற பொருட்களுடன் கைது செய்யப்படுபவர்கள் தண்டப்பணத்தோடு விடுதலை செய்யப்படுவார்கள்.

5. சஞ்சிகைகள் , laptop மற்றும் Phone போன்ற பொருட்களுடன் கைது செய்யப்படும் அப்பாவிகளின் அதிஷ்டம் காரணமாக அப்பொருட்களில் அடங்கியுள்ள விடயங்களை புரிந்துக்கொள்ள கூடிய பொலிஸ் பொருப்பதிகாரிகளை (oic) அவர்கள் பெற்றுக்கொள்கின்றனர். பொருட்களில் அடங்கியுள்ள தகவல்கள் எந்த விதத்திலும் பயங்கரவாதத்திற்கு தொடர்பில்லை என்ற அறிக்கையினை நீதிமன்றத்தில் சமர்பிப்பதன் மூலம் சந்தேக நபர்கள் குறுகிய காலத்தில் விடுதலை செய்யப்படுவார்கள்.

6. நவீன தொழில்நுட்பத்துடன் சிறிதளவும் தொடர்பில்லாத Nokia basic model phone களுடன் மல்லுகட்டும் சில oic மார்களிடம், நமது அப்பாவிகளும் நவீன தொலைத்தொடர்பு கருவிகளும் கையளிக்கப்பட்டால் இவர்களது நிலைமை கண்ணைக்கட்டி காட்டில் விட்ட மாதிரி ஆகிவிடுகிறது.

இவ்வாறான பொருட்களிலுள்ள விபரங்களை அறிவதற்காக அப்பொருட்களை இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பிவிட்டு ஏதோ ஒரு கிண்ணஸ் சாதனை நிகழ்த்தியது போன்று ஒவ்வொரு OIC களும் பில்டப் கொடுத்துக்கொண்டிருப்பதை நாம் அன்றாடம் நீதிமன்றங்களில் காண்கின்றோம்.

இவ்வாறானவர்களின் பிணை மற்றும் விடுதலையானது இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளில் தங்கியுள்ளது. அது வரும் வரையிலும் சந்தேக நபர்கள் 14,14 நாட்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள்.

இந்த தாமதத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கணனி தொழிநுட்பம் தொடர்பான ஆளணி பற்றாக்குறையைக் குறிப்பிடலாம்.

உதாரணமாக அண்மையில் மத்திய மாகாணத்தில் உள்ள ஒரு பிரதேசத்தில் பொலிசாரினால் கொழும்பு குற்றவியல் தடுப்பு பிரிவிற்கு (CCD) பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட laptop மற்றும் mobile phone கள் ஆளணி பற்றாக்குறையை காரணம் காட்டி மீண்டும் குறித்த போலீசாருக்கு அனுப்பப்பட்டு அது மீண்டும் இரசாயன திணைக்களத்திற்கு அறிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

7.பகுப்பாய்வு அறிக்கைகளின் படி உண்மையாக பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர் என சந்தேக நபர் தெரியவருமாயின் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு தண்டணை வழங்கப்படும் வரை சந்தேக நபர்கள் விளக்க மறியலில் வைக்கப்படுவார்கள்.

இவைகள் தான் சட்ட நடபடி முறைகள் .

சில சட்டத்தரணிகளின் பிழையான ஆலோசனைகளின் படி மேல் நீதிமன்றங்களில் (High court) பிணைக்காக விண்ணப்பத்தை மேற்கொண்டால் அவை விசாரணைக்கு எடுத்து பிணை கிடைக்கும் முன் இரசாயன பகுப்பாய்வு அறிக்கை வந்து நீதவான் நீதிமன்றத்தில் வழக்குகள் முடிவுறுத்தப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.

மேலும் உயர்நீதி மன்றத்தில் (Supreme court ) அடிப்படை உரிமை வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சட்ட விரோதமான கைதுகளையும் தடுத்து வைத்தல்களையும் பட்டியலிட்டு சட்டமா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவருவதனூடாக ஒவ்வொரு அப்பாவி சந்தேக நபர்களையும் சட்டமாஅதிபரின் அனுமதியுடன் பிணையில் விடுவிக்கலாம் என்பதோடு வழக்குகளின் முடிவின் போது அவர்களுக்கான நஷ்ட ஈடுகளையும் பெற்றுக்கொடுக்கலாம்.

இந்த விடயம் சாத்தியமாக்கிவதற்கும் கால தாமதம் ஏற்படும்.

அண்மையில் PTA யின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைகழக மாணவர்களின் விடுதலையானது , கைது செய்யப்பட்ட மாணவர்களால் சட்ட மா அதிபருக்கு எழுதப்பட்ட பிணைக்கோரிக்கைக் கடிதங்களும் , எப்போதும் தமது இனத்தை பற்றி சிந்திக்கின்ற தமிழ் அரசியல்வாதிகளின் உந்துதலினாலுமே சாத்தியமானது.

எமது அப்பாவி கைதிகள் சட்டமா அதிபருக்கு எழுதும் கடிதங்கள் எமது கையில். அது வெகு விரைவில் சட்டமா அதிபரின் கைகளுக்கு சென்றடைந்ததும் அதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கு எந்த முஸ்லிம் தேசிய , சாணக்கிய தலைமைகள் முன்வரப்போகின்றது????????

அரசியல்வாதிகளே ! இந்த அப்பாவிகள் தொடர்பில் இரண்டு விடயங்களில் நீங்கள் உதவ முடியும்.

1. கொழும்பு குற்ற தடுப்பு பிரிவு ( CCD) மற்றும் இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் உள்ள கணனி தொழிநுட்பவியலாளர்களின் ஆளணி பற்றாக்குறையை நீக்குவதற்கு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

2. அப்பாவி கைதிகளினால் சட்டமா அதிபருக்கு அனுப்பப்படும் பிணைக்கான கோரிக்கை கடிதங்களுக்கான பதில்களை துரிதப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

“யா நப்சி ! யா நபசி ! என மஹ்ஷர் மைதானத்தில் நிற்பவர்கள் போலிருக்கும் எமது அரசியல் தலைமைகள் தமது கடமையை செய்ய தவறுபவர்கலாயின் ,

" உள்ளே போன அத்தனை பேரும் குத்தவாளி இல்லேங்க , வெளியே உள்ள அத்தனை பேரும் புத்தன் காந்தி இல்லேங்க"

சட்டத்தரணி சறூக்- 0771884448

1 கருத்துரைகள்:

தற்போது அமைச்சர் ரிசாதுக்கு முடியாது அரசுக்கு அதிக அழுத்தம் கொடுக்க.ஏனெனில் ஏற்கெனவே அவர் மீது இல்லாத போலிக் குற்றசாட்டுகல்,நம்பிக்கையில்லா பிரேரனை என இருக்கும் போது,அவருக்கு கொஞ்ஞம் கடினம்.அது போல அசாத் சாலி,ஹிக்ஷ்புல்லா இருவரின் நிலையும்.ஏற்கெனவே அதிகமாக சமூகத்துக்கு குரல் கொடுத்தார்கள் இவர்கள் மூவரும் அதுதான் இனவாதிகலின் கோபம்.முஜிபுர் ரஹ்மானும் இனவாதிகலின் கோபப் பார்வையில் உள்ளவர்.ஆனால் மு.காங்கிரசின் தலைவர் ஒரு சிறந்த சட்டத்தரனி அதன் உறுப்பினர்கள் சிலரும் சட்டத் தரனிகல்.இனவாதிகலின் கோபம் இவர்கள் மீது அதிகமாக இல்லை.என்வே திரு.அமைச்சர் ஹக்கிம் அவர்களும் அவரின் கட்சி நாடாலுமன்ர உறுப்பினர்களும் அந்த பாதிக்கப்பட்ட அப்பாவிகலுக்காக சட்ட நடவடிக்கைக்கு உதவலாம்.இது போல் இரு பெரும்பான்மை கட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்மார்,பாராலுமன்ர உறுப்பினர்கள் இவர்களும் இந்த அப்பாவிகலுக்கு உதவலாமே.

Post a comment