Header Ads



"அல்லாஹ்வினால் சோதிக்கப்படாத எந்தவொரு, சமுதாயமும் உலகில் வாழ்ந்ததில்லை"

கெகிராவ,மடாடுகம வில் அமைக்கப்பட்டிருந்த தெளஹீத் இயக்கத்தினரின் பாவனையில் இருந்த பள்ளிவாசல் அதே ஊரைச்செர்ந்த இன்னொரு பிரிவினரால் தகர்க்கப்பட்ட செய்தியை கேட்டும் பார்த்தும் அதிர்ச்சியடைந்தேன்.உங்களுக்கும் அதே உணர்வு ஏற்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

பள்ளிவாசல்கள் கண்ணியமான அழ்ழாவின் வீடுகள்.அழ்ழாவைத் தொழுவதற்காக கட்டப்படும் இல்லங்கள் என்பதனை மறந்த ஒரு கூட்டம் இப்பாதகத்தை செய்திருப்பது இஸ்லாத்தின் போதனைகளை அறியாது செய்த பாதகச்செயலாகக்காண்கின்றேன்.

பள்ளிவாசல்களில் ஒரு துரும்பைக்கூட இட மனம்வராத எமக்கு,இவன்களுக்கு இரும்பினால் பள்ளியை அடித்து அதனை உடைப்பதற்கு எப்படி உள்ளம் இடம் கொடுத்ததோ?

பாபரி மஸ்ஜிதும் மடாட்டுகம பள்ளிவாசல்,இரண்டும் இறை இல்லம்தான்,ஆர் எஸ் எஸ் காவிகள் பாபரிமஸ்ஜிதின் மேல் ஏறி அதன் கட்களை பெயர்க்கும்போது ஏற்பட்ட வலியும் இதுவும் ஒன்றுதான்.காவிகளுக்கு பள்ளியின் புனிதத்துவம் தெரியவில்லை,அதேபோன்று இக்காடையர்களுக்கும் தெரியவில்லை.

எம்பெருமானார் யுத்தங்களை வழிநடாத்தும்போது சஹாபாக்களுக்கு சொன்னார்கள்,”நீங்கள் செல்லும் இடங்களில் உள்ள மத வழிபாட்டுத்தளங்களை அழிக்காதீர்கள்,வயோதிபர்கள்,பெண்கள்,குழந்தைகளைக் கொல்லாதீர்கள்,பயன் தரும் மரங்களை வெட்டாதீர்கள்”.

எதிரிகளின் வழிபாட்டுத்தளங்களையே அழிக்கவேண்டாம் என்று இஸ்லாம் இயம்பும் போது அகீதாவில் முரண்படாத கருத்தியல்களில் மாற்றம் உள்ள இஸ்லாமியரின் பள்ளிவாசல்களை எங்ஙனம் அழிக்கலாம்?

சஹ்றானின் குழுவின் தாக்குதலின்பின் பயந்துள்ள இலங்கை முஸ்லிம் சமூகம் தன்னை அன்னிய சமூகத்திற்கு ஈடாக மாற்றிக்கொள்ள துணிந்திருப்பது இஸ்லாத்தைவிட்டும் எம்மை தூரமாக்கும் என்பதனை புரிந்துகொள்ளவேண்டும்.இத்தருணத்தில் உலமாக்கள்கூட தடம்மாறிப்போவது போன்ற உணர்வைத்தோற்றுவிக்கின்றது.

இதனால் அவர்கள் திருப்தி அடைவார்களா என்றால் நிச்சயம் இல்லை.அவர்களுக்குத்தேவையானது,முஸ்லிம்களின் பொருளாதாரம்,கல்வி,கலாச்சாரத்தை என்பவற்றை அழித்து நாம் இந்நாட்டின் பிரஜைகள் என்றவகையில் அனுபவிக்கும் நலங்கள் அனைத்தையும் களைப்பதுதான்.இது எம்மிது திணிக்கப்பட்டுள்ள பேரினவாதசூழ்ச்சி என்பதனை புரிந்துகொள்ளுங்கள்.அரசில்யலும் இனவாதமும் கலந்தது என்பதை உணருங்கள்.

பொருளாதாரத்திற்கு ஆப்பு வைப்பதனைக்கண்கூடாக்காண்கின்றோம்.அதற்கு உதாரணம் தேவையில்லை.

2013 இல் பொதுபல சேனா, சட்டக்கல்லூரிக்கு முஸ்லீம் மாணவர்கள் அதிகமாக தெரிவாகின்றனர் என்று போராட்டம் நடத்தியது,அன்மைய முஸ்லிம் மருத்துவர் சாபிக்கு எதிரான போராட்டம் அணைத்தின் பின்னணியும் முஸ்லிம்களை உயர்கல்வியில் ஒதுக்குவதாகும்.எதிர்காலத்தில் விக்ஷேட வைத்தியத்துறைகளில் முஸ்லிம் மாணவர்களின் சித்தி குறைவடைவதனை எதிர்பார்க்கலாம்.முஸ்லிம்கள் கல்வித்துறையில் முன்னேருவது இனவாதிகளுக்கு கசப்பான அம்சமாகும்.

அரச உத்தியோகங்களில் முஸ்லிம்களின் பங்கு மிகக்குறைவாக இருப்பதும் உயர் பதவிகள் எட்டாக்கனியாகவும் இருப்பதினால் இன்னும் அவற்றிற்கு எதிரான போராட்டம் துவங்கப்படவில்லை.இன்னும் எவ்வளவோ உண்டு.

ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்.வல்ல அழ்ழாவினால் சோதிக்கப்படாத எந்தவொரு சமுதாயமும் உலகில் வாழ்ததில்லை,நாம் ஈமான் கொண்டோம் என்பதற்காக சோதிக்கப்படாமல் விட்டுவிடப்படுவோம் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றீர்களா ? என்று கண்ணியமான அழ்ழாஹ் அல்குரானிலே எங்களைப்பார்த்துக் கேட்கின்றான்.எனவே மறைவான விடயங்களில் அவனே கூலிகொடுக்கப்போதுமானவன்.ஆதலால் அந்நியரிடம் சகவாழ்விற்கு விட்டுக்கொடுப்புகளுக்குத்தயாராகும் நாம் முதலில் எமக்குள் சகவாழ்வை மேற்கொள்வோம்.

4 comments:

  1. Nam alivukku kaaranam naame. Ithai Allah wudaiya palli endru parka wendume andri, enda iyakkam endru parka koodadu. inda seyalal name nam samudayatthai elivu padiththi kondullom. Maatru madaththinarukkum namakkum vitthiyasam ellathu aakik kondulladu enda seyal.

    Palliyai udappai vittu vittu, Iyakkangala marandu, muslimgalaha ellarum ondru pattu anda masjid ill tholudu irukkalam allawa?

    Elawuwaha odaithu vittai, oru palli ondrai katta ongalal mudiyuma enpadai yosittaya? Appalliyil tholudawan evanayinum, avan sajjda seidadu Allahwai andri weru ewanaiyum alla.

    Allah evarkalai mannikkatum..

    ReplyDelete
  2. எங்கட சமுதாயம் காட்டி கொடுப்பதாலும் கூட்டி கொடுப்பதாலும்தான் இந்தளவிற்கு சிக்கல். எங்கட சமுதாயத்த காட்டி கொடுத்து விட்டு, நல்லிணக்கம் என்று ........ வருது நல்லா

    ReplyDelete
  3. மஸ்ஜித் ளிராரை உடைப்பதற்கு ஆள் அனுப்பியது நபிகளார் தானே சென்றவர்கள் ஸஹாபாக்கள் தானே

    ReplyDelete

Powered by Blogger.