Header Ads



ஹிஜாப் அணிய எந்தத் தடையும் இல்லை - மீண்டும் திட்டவட்டமாக அறிவிப்பு

முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகள் மற்றும் பாதுகாப்பு தலைக்கவசங்களுடன் எவரேனும் பாடசாலைகளுக்கு பிரவேசிக்க முற்படும் சந்தர்ப்பங்களில் பாடசாலை பிரதானிகள் செயற்படவேண்டிய முறை தொடர்பில் விசேட கடிதமொன்றை பாடசாலை பிரதானிகளுக்கு அனுப்பி வைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கல்வித்துறை செயலாளருக்கு இது தொடர்பில் ஆலோசனை வழங்கியுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முகத்தை மூடுவது தொடர்பில் அவசர கால சட்ட சரத்துக்களுக்கு கீழ் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் தொடர்பில் அறியாமை காரணமாக முகத்தை முழுவதுமாக மூடும் தலைக்கவசத்துடனும் , சில ஆசிரியைகள் முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடையுடன் வருவதன் காரணமாக கடந்த தினங்களில் சில பாடசாலைகளில் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.

இது தொடர்பில் அவதானம் செலுத்தி குறித்த சந்தர்ப்பங்களின் போது பாடசாலை பிரதானிகள் செயற்பட வேண்டிய முறை தொடர்பிலும் மற்றும் பாடசாலைகளுக்கு பிரவேசிக்கும் போது ஆடை மற்றும் தலைக்கவசம் அணிந்து வருதல் தொடர்பிலான உத்தரவுடன் குறித்த விசேட கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது..

இதில் , மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அவசர கால சட்டத்திற்கு அமைய ஆடை மற்றும் தலைக்கவசம் அணிவது தொடர்பில் கல்வி அமைச்சுக்கு அனுப்பியுள்ள புகைப்பட​மும் இந்த கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.



No comments

Powered by Blogger.