May 30, 2019

பள்ளிவாசல்களை உடைப்பது, இனவாதிகளுக்கு வழிகாட்டும் - ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்


படைத்தவனின் திருப்தியை மறந்து படைப்பினங்களின் திருப்திக்காக இறை இல்லத்தை உடைத்த கோழைத்தனமான நிகழ்வு அநுராதபுர மாவட்டம் கெகிராவை, மடாடுகம எனும் பிரதேசத்தில் 29.05.2019 அன்று நடைபெற்றுள்ளது.

 குறித்த செயற்பாட்டை செய்தவர்கள் ஊர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தின் அனுமதி அணுசரனையுடனே இறைவனின் கோபத்தை பெற்றுத்தரும் குறித்த மிருகத்தனமான செயலை செய்ததாக அவர்களே வாக்குமூலம் வழங்கியுள்ளனர். 

 குறித்த பள்ளி வாசல் ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கு சொந்தமான பள்ளிவாசல் இல்லாவிட்டாலும் எந்த அமைப்பைச் சார்ந்தவர்களின் இறையில்லம் என்றாலும் இறையில்லத்தை உடைத்த செயலையும், அதை செய்தவர்கள், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் அனைவரையும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிப்பதுடன் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்.

 நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலை இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில் முஸ்லிம்கள் தங்களுக்கு மத்தியிலுள்ள கருத்து வேறுபாடுகளுக்காக (தப்லீக் , தவ்ஹீத், சுன்னத்வல் ஜமாஅத் மற்றும் ஜமாஅத்தே இஸ்லாமி என்ற பெயரில்) ஒரு சாரார் மற்றொரு சாராரை பழிதீர்க்கும் வண்ணம் சண்டையிடுவதும், அநியாயமாக காட்டிக்கொடுப்பதும் இறைவனை வணங்கும் இறையில்லத்தினை உடைப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்க மனிதத் தன்மைக்கு மாற்றமான மிக மோசமான இழிவான செயற்பாடாகும்.

 புனித மிக்க ரமழானுடைய மாதம் என்று கூட பாராமல் இறையில்லத்தின் மீது கைவைக்கும் கீழ்த்தரமான செயற்பாட்டினை செய்தவர்கள் யாராக இருந்தாலும் எந்த அமைப்பை சார்ந்தவர்களாக இருப்பினும் பாரபட்சமின்றி அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்னால் நிருத்தப்பட வேண்டும் என்பதுடன் சமூக ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் குறித்த செயலுக்கு உதவி செய்த ஊர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் உட்பட அனைவருக்கும் உச்சகட்ட தண்டனை வழங்கப்படவேண்டும்.

 மாற்று மதத்தவர்களின் வணக்கத்தளங்களையே புனித இஸ்லாம் மதித்து நடக்க சொல்லும்பொழுது, இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தவர்களே பள்ளிவாசலை உடைத்திருப்பது எந்த முஸ்லிமின் உள்ளமும் ஏற்றுக்கொள்ளாத மோசமான செயற்பாடாகும். "அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்?" 2 : 141 இதுபோன்ற நாசகார செயற்பாட்டை செய்கின்றவர்கள் மிகப்பெரும் அநியாயக்காரர்கள் என்று இறைவனே குறிப்பிடுகிறான்.

 இறை இல்லத்தை உடைத்து இறைவனை வணங்கி வழிபடும் (தொழும்) அடியானை தடுப்பது என்பது இறைவனுடன் போர் செய்யும் அளவிற்கு கடுமையான பாவம் என்று அல்குர்ஆன் எச்சரிக்கிறது. (96 : 9,10) 
மக்கத்து காபிர்களின் வழியில் இயக்க வேறுபாடுகளை பழி தீர்க்கும் இழி செயலை ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுடன் குறித்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள சாராருக்க உடனடியாக நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக்கொள்கிறது.

 மத நல்லிணக்கம் என்ற பெயரில் பெயர் தாங்கி முஸ்லிம்கள் செய்யும் முட்டாள் தனமான செயற்பாடுகள் இனவாதிகளுக்கு மீதம் இருக்கும் பள்ளிவாசல்களை உடைப்பதற்கு வழிகாட்டும் செயலாகவே அமைகிறது.
எனவே இது போன்ற இழி செயலை செய்பவர்களை அவர்களின் தலைமையான ஜம்மியத்துல் உலமாவும் கண்டிப்பதுடன் எதிர்காலத்தில் இது போன்ற ஈனத்தனமான செயல்களை செய்யவிடாமல் தடுக்க வேண்டும் என்று ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு
M.F.M பஸீஹ் M.I.Sc
செயலாளர்
ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்.

9 கருத்துரைகள்:

Why did you destroy the mosque of All Ceylon Thareekathul Mufliheen (Abdullah Payilvan) and also numerous Sufi Tariqas.

Palliyay udaitha peyarthangi muslimggal naasama pohattum.

PIRACHINAI ILLAMAL MUSLIMGAL WALUM PHUZIHALIL,PANATHUKKAHA WAHABI KOLHAI PARAPPI,URIL PIRACHINAI WTPADUTHUWAZUTHAN,WAHABIHALIN KOLHAI.
EZUWAHA IRUNDALUM ( T J ) THATKOLAI JAMATH.

சகோதரர் பசீஹ் அவர்களே உங்களின் கருத்துக்களினை நானும் வரவேற்கிறேன்.பள்ளியை உடைத்தது அதுவும் எம்மவர்கல் என்னும் போது இது ஜாஹிலிய்யாக் காலத்து காட்டு மிராண்டிகலின் இழிவான செயல் போல் உள்ளது.இதற்க்கான தண்டனை அவர்களுக்கு வழங்க வேண்டும்.ஆனால் சகோதரரே நீங்கள் சொல்வது போல் தப்லிக்,சுன்னத்துல் வல் ஜமாத்,ஜமாத்தே இக்ஷ்லாமி. இவர்கள் அனைவரும் இன்னும் ஒரே பெயரில் இயங்க.தவ்ஹீத் ஜமாத் ஏன் 5 வகயான பிரிவுகளுடன்,தலைமைகலுடன்,பள்ளிகலுடன் பிரிந்து செயற்பட என்ன காரணம்.சகோதரரே எனது ஒரே ஒரு கேல்விக்கு பதில் வழங்குங்கள்

எனவே தவ்ஹீத் இப்படி 5 பிரிவுகளாக பிளவு படக்கூடிய குழப்பவாதிகலும்,தலைமைக்கு கட்டுப்படாதவர்கலும்,பதவி,பணம் இப்படியான பேராசாசை பிட்த்தவர்கலாகவும் இருப்பது ஏன்.

We can't demolish a Masjid but we can demolish unauthorized buildings.

பிழைதான், இவர் ஆத்திரம் கொள்ளுமளவுக்கு பிழையான விடயமல்ல. அனுமதியில்லாமல் கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தை இடித்த விடயத்துடன் தான் இதனை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். தவிர்ந்திருந்தால் நல்லது்

எப்படிபட்ட மடையர் கூட்டம் பெரிய பள்ளியில் இருந்துள்ளது.

அவசியம் இல்லாத இடங்களில் தேவைக்கு அதிகமாக பள்ளிவாசல்களை நாம் கட்டியுள்ளோம்.
எமது நாட்டிலே இஸ்லாமிய அமைப்புக்கள் தோன்றிய அண்மைக்காலமாகத்தான் இந்த
நிலமை. ஏட்டிக்கு போட்டியாக ஒவ்வொரு குழுவும் தங்களுக்கான
பள்ளிவாசல்களை வெளிநாடுகளில்
உதித்த சமய அமைப்புகளின் அனுசரணையுடன் அவர்களின் கொள்கை கோட்பாடுகளை இங்கு
பரப்புவதற்காக கட்டப்பட்ட பள்ளிவாசல்கள்தான் மெலிந்து காணப்படுகின்றன. ஒவ்வொரு
ஊரிலும் பிரதேசத்திலும் பல தலைமைகள் உருவாகி குர்ஆன்
ஹதீஸ்களுக்கு தாங்கள் தாங்கள்
அவைகளை விளங்கிக்கொண்டதற்கேற்ப விளக்கம்
சொல்லி விவாதித்து கொண்டிருக்கின்றோம்.ஆனால் ஒரு
இஸ்லாமியன் தான் செய்கின்ற தொழில் தொடக்கம் அன்றாட கருமங்களில் ஈடுபாடும்போது ஏனய
சமூகத்தவருக்கு முன்மாதிரியாக நடந்து கொள்ள முடியாமல்,தெரியாமல் வெறுமனே சுன்னத்தான வணக்க வழிபாடுகள்,நடைமுறைகள்,பற்றி
விவாதித்து பிரிவினையை தோற்றுவித்து கொண்டிரக்கின்றோம்.
சுன்னத்தான வணக்க வழிபாடுகளை
அல்லது பழக்க வழக்கங்களை செய்தால் அல்லது பின்பற்றினால்
அதற்கான நன்மை கூலி கிடைக்கும்
என்பதோடு அதை செய்யாவிட்டால்
ஒன்றுமில்லை என்பது எமது சிறு பிள்ளைக்கும் தெரிந்தவிடயம். இடம்
காலநேரம் சந்தர்ப்ப சூழ்நிலைகள்
என்
பதை பொறுத்து அவைகளை
பின்பற்றலாம் அல்லது தவிர்ந்து கொள்ளலாம் எனபதற்காகத்தான்
அவைகள் சுன்னத்தாக்கபட்டுள்ளன
இல்லாவிட்டால் அவைகளை அல்லாஹ்
பர்ளாக்கி இருப்பான் இதை நாம் விளங்காமல் இந்த நாட்டிலே சிறு
பான்மை மக்களான நாம் பெரும்பான்மை மக்களோடு ஒன்றித்து
கலந்து வாழவேண்டிய சூழலில் இஸ்லாத்தின் வரையறைக்குள் அந்த
மக்களின் சமய கலாச்சர பாதுகாப்பு
போன்ற விடயங்களையும் மதித்து
நடக்கவேண்டியது காலத்தின் கட்டாயத்
தேவயைாகும் என்பதை நாம் இனியும்
உணராமல் இருக்க முடியாது.
இஸ்லாம் முழுமையாக போதிக்கப்பட்டு
விட்டது. உளத்தூய்மையோடு தக்வா
வின் அடிப்படையில் அதை அணுகினால் அவரவர் ஆற்றலுக்கும்
அறிவுக்கும் சிந்தனைக்கும் ஏற்ப அது
அவர்களை வழிப்படுத்தும்.இதற்காக
கூட்டம்போட்டு மேடை அமைத்து விவாதம் நடத்தி விளக்கம் சொல்ல
தேவையில்லை.மாறாக தமது நடவடிக்கைகள் மூலம் குர்ஆன் ஹதீஸ்
சொல்கின்ற வாழ்கை முறையை
நடைமுறையில் வாழ்ந்து காட்டுவோம்
இந்த நாடே சுபீட்சமடையும்.
அதற்காக பள்ளிவாசல் உடைப்பை
எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

Post a comment