May 24, 2019

முஸ்லிம்களுக்கு அடியுங்குள், நொருங்கங்கள், பற்றவையுங்கள் என்றே செய்திகள் வெளி வருகின்றன


இன்னுமொரு இரத்தம் சிந்துதல் வேண்டாம் - தேசிய புத்திஜீவிகள் அமைப்பு ஒழுங்குபடுத்திய கூட்டம் நேற்று (23.5.2019 .இலங்கை மன்றக் கல்லுாாியில் நடைபெற்றது. பிரதான உரையை ஜே.வி.பி கட்சித் தலைவா் அனுரகுமார திசாநாயக்க உரையாற்றினாா் - 

முஸ்லீம் அரசியல் தலைமைகள் அவா்களது அடுத்த பரம்பறைக்கும் மேலாக காலத்துக்கு காலம் தோ்தல் காலத்தில் பணம் சம்பாதிப்பதிலேயே முழு மூச்சாக இருந்துள்ளாா்கள் ஆனால் முஸ்லிம் மக்களது அடி மட்டத்திற்குச் சென்று அவா்களது பிரச்சினைகளையும் அந்த மக்களது தேசிய ஒற்றுமையிலும் பிரச்சினைகளில்லும் ் கரிசனை காட்டவில்லை. 

ஏப்ரல் 21லும் மே 13ஆம் திகதி நடைபெற்ற சம்பவங்களை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. மே 13ல் நடைபெற்ற குருநாகல் மாவட்டம் , மினுவான்கொட புத்தளம் சம்பவத்திற்கு பின்னால் ஒரு அரசியல் பின்னணியில் ஒழுங்குபடுத்தப்பட்டு செய்து முடித்த சதியாகும். 

இதனால் முஸ்லீம் சமுகம் இந்த நாட்டில் அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாா்கள். இந்த நாட்டில் இனவாதத்தினை .முற்படுத்தியே அரசியல் அதிகாரத்திற்கு வருவதுச வரலாரு ஆகும். திவயின பத்திரிகையில் திட்டமிட்டு ஒரு சதியான பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளது தௌவ்கீத்வாதியான முஸ்லீம் டொக்டா் கர்ப்பிணித் தாய்மாா்கள் 4000 ஆயிரம் சிசிரியேன் சத்திரச் சிகிச்சை செய்தாக அப்பட்டமானதொரு பொய்ச் செய்தியை தலைப்பிட்டுள்ளது. 

கடந்த ஒரு மாத காலமாக திட்டமிட்டு சில இனவாத ஊடகங்கள் இந்த நாட்டுக்கு காட்டியது இன்னும் பொறுமை காக்காதீா்கள் முஸ்லீம் சமுகத்திற்கு அடியுங்குள் நொருங்கங்கள் பற்றவையுங்கள் என்றே அவா்களது செய்திகள் வெளிவந்தே கொண்டிருந்தன. அந்த ஊடகங்களின் நிகழ்ச்சி நிரலில் அதன் தலைமைகள் எதிா்காலத்தில் தோ்தல் குதிப்பதற்கும் கஙகனம் கட்டிக் கொண்டிருக்கின்றனர். அந்த நிறுவனத்தில் ஒலிபரப்பும் செய்தியை நீங்கள் பாாக்கு முன் அந்த ஊடகம் யாருடையது என முதலில் பாா்த்துவிட்டு அவா்களது செய்தியை அவதானியுங்கள். அந்தச் செய்தியில் உண்மைத் தன்மையுள்ளதா எனப்பாருங்கள் . 

இந்த நாட்டில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளா் இரண்டு மதவாதத்தினைக் கொண்ட இரு குழுக்களுக்கும் சம்பளம் வழங்கியுள்ளா். அவா் எதிா் காலத்தில் ஜனாதிபதியிட போட்டியிட உள்ளதாக ஏப்ரல் 21திகதியே சொல்லுகின்றாா். அவா் இருந்தால் இந்த ப் பிரச்சினையை தீா்த்துக் கட்டுவாராம், ஆகவே இந்த அரசியல் வாதிகளுக்கு காலத்துக்கு காலம் இனவாதம், மதவாதம் இனக்குரோதங்களை வைத்துக் கொண்டு அரசியல் அதிகாரத்திற்கு வருவதற்கு நாட்டின் இனப் பிரச்சினை யுத்தம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். என அனுர குமார திசாநாயக்க அங்கு உரையாற்றினாா்.Ashraff A Samad


1 கருத்துரைகள்:

உலகத்தை அல்லாஹ் ஒரு விதிமுறைக்கு அமைவாகவே படைத்துள்ளான். அதனைத்தான் முஸ்லிம்களாகிய நாங்கள் 100மூ பின்பற்றுகின்றோம். (முஸ்லிம்களாகிய) நாங்கள் எங்களுடைய தக்வாவினை அதிகரிக்க அதிகரிக்க அல்லாஹ்வும் தனது கருணையையும் றஹ்மத்தையும் எங்கள்மீது பொழிவான். உதாரணம் இன்றைய Jaffna Muslim ல் JVP தலைவர் அனுர குமார திஸ்ஸநாயகாவின் உரையை ஊன்றி பல முறை படித்துப் பாருங்கள்.

Post a comment