Header Ads



ஒரு குண்டுதாரி ஏற்கனவே கைது செய்யப்பட்டு, அரசியல் அழுத்தங்களினால் விடுதலை செய்யப்பட்டவர் - கபீர்

இலங்கையில் நேற்றைய தினம் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய ஒரு குண்டுதாரி ஏற்கனவே கைது செய்யப்பட்டு அரசியல் அழுத்தங்கள் காரணமாக விடுதலை செய்யப்பட்டவர் என அமைச்சர் கபீர் ஹாசீம் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நேற்றைய தினம் ஈஸ்டர் ஞாயிறன்று கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் சுமார் 300 பேர் வரையில் கொல்லப்ட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் பௌத்த சிலைகள் மீது தாக்குதல் நடத்திய இயக்கமொன்றைச் சேர்ந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

அதன் போது உயர் அரசியல் தரப்பின் அழுத்தங்கள் காரணமாக விடுதலை செய்யப்பட்ட ஒருவரும் தற்கொலைதாரியாக தாக்குதலில் பங்கேற்றிருந்தார் எனவும் கூறியுள்ளார்.

அரசியல் அழுத்தங்கள் காரணமாக குறித்த தற்கொலை குண்டுதாரி விடுவிக்கப்பட்டார் என்பது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதனை விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. what is the political pressure beyond Ranil & you.

    ReplyDelete
  2. Who is that politician, do not hide anything from now on...Already all politicians cheated the public...at least now can u spell all the culprits...?

    ReplyDelete
  3. Mr.Minister don't try to fool the public, regarding political involvement is totally wrong no one supported even for his bile in court signed by Kalmunai's Viharathiphay.( you can ckc it at he court.)
    STILL MUSLIM POLITICIAN ARE ON BLAMING OTHER POLITICIANS!
    WHEN YOU ALL ARE GOING TO SAVE YOUR OWN COMMUNITY???

    ReplyDelete

Powered by Blogger.