April 01, 2019

அம்ஹர் மெளலவியின் கவனத்திற்கு...!


அம்ஹர் மெளலவியின் பேட்டி குறித்த கருத்தாடல்கள் முகநூலில்  சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றது.

அவர் குறித்த பேட்டியில் பதில் சொன்ன ஒரு சில இடங்களில் எனக்கும் முரண்பாடுகள் இருக்கின்றன ஆனால் ஓவரோலாக அம்ஹர் மெளலவி மிக புத்திசாளித்தனமாக பேட்டிக்கு  முகம் கொடுத்தார் என்பதுதான் எனது அபிப்ராயம்.

இலங்கையைப் பொருத்தவரையில் அதிகமான மெளலவிகளுக்கு சிங்களம் தெரியாது.

சிங்களம் தெரிந்த அதிகமானவர்களுக்கு இஸ்லாம் தெரியாது.

அம்ஹர் மெளலவி பெரிய பிரபலமில்லாத மனிதராக இருந்ததனால்தான் அவரால் சமூகத்தின் குரலாக ஒலிக்க முடிந்தது.

அவருக்கு இன்று கிடைத்திருக்கும் பிரபலமும், ஆதரவும் அவரை சமூகத்தை விட்டு தூரமாக்கிவிடாமல் இருந்திட வேண்டும்.

ஒரு சாதராண அரபுக் கல்லூரி அதிபராக இருந்ததனால்தான் இப்படி நிதானமாகவும்  தைரியமாகவும் பதில் சொல்ல முடிந்தது.

நாளை சமூகம் அவரை ஒரு ஸ்டார் ஆக மாற்றி,  வெளிநாடுகளுக்கு நிகழ்ச்சி நடத்த அழைத்து
விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது.

அப்படி ஒரு நிலமை வந்தால் அவர் ஒரு ஆடம்பர வாழ்க்கைக்குள் அகப்பட்டுவிடுவார். 

அத்தோடு அவரது சமூகப் பார்வையும் மங்கிவிடும்.

அவரை ஒரு குத்பாவில் காண்பதுகூட அரிதாகிவிடும்.

இலங்கைப் பிரச்சினையை வெளிநாட்டில் பேசிக்கொண்டும், தீர்வு சொல்லிக் கொண்டும்  இருக்கும் ஸ்டார் உலமாக்கள் சமூகத்தில் நிறையபேர் இருக்கிறார்கள்.

இலங்கைச் சூழலில் இஸ்லாத்தையும்,சிங்களத்தையும்,சிங்களவர்களையும் சரியாகப் புரிந்து கொண்டு பேசக்கூடிய பேச்சாளர்களுக்கு ஒரு பெரிய வெற்றிடம் முஸ்லிம் சமூகத்தில் இருக்கிறது.

அதனை அம்ஹர் மெளலவி போன்றவர்களினால்தான் நிரப்ப முடியும்.

அவரை ஓவராக விமர்சித்தும் ஓவராக புகழ்ந்தும் அவரது சமூக செயற்பாட்டை இந்த கீ போர்ட் போராளிகள் குழப்பிவிடாவார்களோ என்ற அச்சம் கொஞ்சம் கொஞ்சம் வரத்தொடங்கி இருக்கின்றது.

அம்ஹர் மெளலவிக்கு அல்லாஹ் அருள் புரிய வேண்டும்

Safwan Basheer

17 கருத்துரைகள்:

Star Ulamaakkal, Sariyana padivu. Nammidaththil periya periya Bayan sollum Star Ulamaakkal ini veliye varuvaarhal. Vandu copy paste pannuvaarhal paarungal.

Amhar Moulavi is an highly knowledgable person and therefore he should be made as the spokesman of the ACJU. We have seen that ACJU is working very hard for the betterment of the Muslim community in Sri Lanka but it has failed in the HALAL matter as it was not presented technically and scientifically. Now Almighty Allah (SWT) has identified a person and it is our duty to make use of him.

கீ போர்ட் போராளிகல் ட கத எங்களுக்கு தேவ இல்ல... உன்ன மாதிரி அதி புத்திசாலிகல நினச்சாதான் பயமா இருக்கு... இஸ்லாத்த பாதுகாக்க அல்லாஹ் போதும். அஹ்மர் மௌலவியோ நீயோ தேவ இல்ல... அல்ஹம்துலில்லாஹ் அஹ்மர் மௌலவி மூலமா சமுதாயத்துக்கு ஒரு நல்ல பெயர் கிடைச்சு இருக்கு. அவர பாதுகாத்துக்க அவருக்கு தெரியும். ஸ்டார் உலமாக்கலோ குப்பத்து உலமாக்களோ பிரச்சினை இல்லை. நன் நடத்தை உள்ள உலமாக்களா இருக்கிற உலமாக்கள் போதும். உன்ன மாதிரி அதி பிரசங்கிகள் பொத்திகிட்டு இருந்தாலே அது போதும்.

safwan Basheer உங்களுடன் உடன்படலாம், அத்தோடு வெளிநாடுகளில் இருக்கும் சகோதரர்களே நீங்கள் அங்கிருந்து இவரை அழைக்க வேண்டாம் என்ற தயவான வேண்டுதலை முன்வைக்கும் அதேநேரம்,முஸ்லிம்களுக்கும்,இஸ்லாத்துக்கும் வெளிநாடுகளில் நடக்கும் பிரச்சினைகளை பேசும் அநேகமானவர்கள் உள்நாட்டில் பேசாமடந்தைகள்(உள்நாட்டில் என்பது அவரவர் இருக்கும் நாடு) ஆகவே அம்ஹர் மௌலவி அவர்களை அவரின் (இலங்கையில்) நாட்டில் பேசவிட்டுவிடுமாறு அணைத்து முஸ்லிம்களையும் வினயமாக கேட்டுக்கொள்கிறேன்.அம்ஹர் மௌலவி அவர்களே! உங்களுடன் "வஹ்ன்" அற்ற மக்கள் இருப்பார்கள்,இருக்கிறார்கள் என்பதில் உறுதியாக இருங்கள் அல்லாஹ் போதுமானவன்.

Correct. Over comments and over criticism are dangerous weapons that may divert the issues in different angles. Amhar Moulavi's explanations are very decent, polite and positive. May Almighty Allah bless him for his endeavor. Please do not drag him into our usual unwanted, shallow, muddy and complex issues and discourage him.

Allah should protect him aamin

Masha Allah You are Exactly correct

Amhar Moulavi is not just a principal to a Madrasa..... He is one of the Directors of Zam Zam Foundation, he is the head of Dehiwela Carron place Fath Acadamy who teaches higher education to Moulavis in Sinhala language.(We also giving our contribution on sharing Sri Lankan Muslim Law) He is so qualified in Buddhism.....Allah made him to highlight at the right time...Masha Allah..

Amhar Moulavi is not just a principal to a Madrasa..... He is one of the Directors of Zam Zam Foundation, he is the head of Dehiwela Carron place Fath Acadamy who teaches higher education to Moulavis in Sinhala language.(We also giving our contribution on sharing Sri Lankan Muslim Law) He is so qualified in Buddhism.....Allah made him to highlight at the right time...Masha Allah..

சகோதரர் Safwan Basheer அவர்களே நீங்கள் பந்தி இரண்டில் குறிப்பட்டுள்ள "ஒரு சில இடங்களில் எனக்கும் முரண்பாடுகள் இருக்கின்றன " என குறிபிட்டுள்ளீர்கள் அதனை கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும் If you are a straight forward person. otherwise please don't write such unwanteds and waste JM's Time and valuable web space.

Moulavi Amhar has done his best for the muslim society. Please try to stop to make unnecessary advertisement by writing such instruction or comments.

Exactly correct in one vision

May Allah Bless brother Amhar mawlavi and Brother Safwan for his great advice.

உலமாக்களை ஏன் குறை கூறுகிறீர்கள்!!!
குறை மட்டும் சொல்லிவிட்டால் அல்லாஹ்விடமிருந்து தப்பித்து விடலாமா???
நல்ல உலமாக்களை உருவாக்க உங்களுக்கும் பொறுப்பு உண்டு என்பதை ஞாபகப்படுத்திக்கொள்கின்றேன்....

Dear Br, Amhar Moulavi is not just a principal to a Madrasa..... He is one of the Directors of Zam Zam Foundation, he is the head of Dehiwela Carron place Fath Acadamy who teaches higher education to Moulavis in Sinhala language.(We also giving our contribution on sharing Sri Lankan Muslim Law) He is so qualified in Buddhism.....Allah made him to highlight at the right time...Masha Allah..

Brother Safwan Basheer,
Let him go on his own way. He knows what to do and Not to do. Don't find the address for you by criticising Amher Moulavi or other Ulamaas. Allah knows how to use him and where to use him. Think positively.
அவரை அவரது வழியில் போக விடுங்கள். எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதை அவர் அறிவார். அம்ஹர் மௌலவியையோ அல்லது ஏனைய உலமாக்களையோ விமர்சிப்பதன் மூலம் உங்களுக்கான முகவரியைத் தேட வேண்டாம். அவரை எப்படிப் பயன்படுத்த வேண்டும், எங்கு பயன்படுத்த வேண்டும் என்பதை அல்லாஹ் அறிவான். நேர்மறையாக சிந்தியுங்கள்

Post a Comment