Header Ads



இலங்கை சட்டக் கல்லூரியின் சட்டமாணவர், முஸ்லிம் மஜ்லிஸ் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.

புனித ஈஸ்ட்டர் தினத்தில் கிருஸ்தவ தேவாலயங்கள், சொகுசு  விடுதிகள் மற்றும் ஏனைய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான கொடூரத்தாக்குதலை இலங்கை சட்டக் கல்லூரியின் சட்டமாணவர் முஸ்லிம் மஜ்லிஸ் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.  

இக் கோழைத்தனமான தாக்குதலானது வெட்கித் தலைகுனியவேண்டிய சாதி, மத பேதங்களுக்கு அப்பால் கண்டிக்கப்படவேண்டிய சாமான்ய மனிதனால் எக்காரணத்துக்காகவும் கிஞ்சித்தும் ஜீரணிக்கமுடியாத படுபாதக மனிதாபிமானமற்ற குற்றமாகும். 

இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வுத்துறை, சட்ட அமுலாக்கத்துறை இந்த குரூரத் தாக்குதலை மிக விரிவாகவும் பக்கச்சார்பின்றியும் விசாரணைசெய்து குறித்த சூத்திரதாரிகளை சட்டத்தின் முன்  நிறுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.

தங்களுக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத ஒரு மறைமுக நிகழ்ச்சி நிரலோடு அரங்கேற்றப்பட்ட கோழைத்தனமான தாக்குதலில் தம் இன்னுயிரை இழந்தவர்களின் உறவுகளுக்கு நாம் எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்வதோடு காயப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் பூரண சுகத்தை துரித கதியில் வழங்க இரு கரம் ஏந்திப் பிராதிக்கின்றோம்.


முபாறக் முஅஸ்ஸம் (நளீமி)
தலைவர்.
சட்ட மாணவர் முஸ்லிம் மஜ்லிஸ்,
இலங்கை சட்டக் கல்லூரி.



No comments

Powered by Blogger.