Header Ads



BLACK HOLE குறித்து அல்குர்ஆன் கூறுவது என்ன..? இறைவன் வெளிக்காட்டும் அத்தாட்சி


-  Mohamed Jawzan -

விண்வெளியில் எமது சூரிய குடும்பத்துக்கு வெளிய உள்ள Galaxy வெளியில் இன்னும் சூரியன்களை அல்லாஹ் படைத்துள்ளான் அதை சுற்றி வரும் கிரகங்களும் அதில் உண்டு.

Black hole என்பது அது அணைந்து கொண்டிருக்கும் அல்லது அணைந்து போன சூரியன் ஆகும் அதை அல் குர் ஆன் இப்படி தெளிவாக சொல்லிவிட்டது எமது சூரியனும் அணையும் போது கடைசியில் Black hole ஆக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை 

இதில் சூரியனைப் போன்ற நட்ச்சத்திரங்களும் அடங்கும்

Black hole இதுவும் விண்வெளியில் இருக்கும் அணைத்தையும் ஏட்டை சுருட்டுவது போல் சுருட்டி எடுக்கும் 100. வீத ஈர்ப்பு சக்தி கொண்ட அணைந்து கொண்டிருக்கும் அல்லது அணைந்துபோன செயலிழந்த சூரியன் ஆகும்

இந்த Galaxy விண்வெளி மொத்தமே ஈர்ப்பை மையமாக வைத்தே அமைக்கப்பட்டுள்ளது எமது பூமி உட்பட இவைகள் செயலிழக்கும் காலம் வரும் போது அவை அனைத்துக்கும் ஒன்று சேர்ந்த அபரிதமான 100. வீத ஈர்ப்பு சக்திகளை கொண்டு அதிகரித்துவிடும்

அதன் பின் ஏழு வானங்களும் அதனுள் உள்வாங்கப்படும் நேரம் ஆரம்பிக்கும் வேலையிலேயே சூர் ஊதப்படும் நாளாக அது இறைவனால் மாற்றி அமைக்கப்படும்.

அதன் பின் அது விண்வெளியாக மாற முன் முதலில் இருந்த வடிவத்துக்கு ஒன்று சேந்து முதல் படைப்பாக இருந்தது போல் மாறிவிடும்.

இதுவே மறுமையின் தீர்ப்பு நாளின் மைதானமாகவும் இருக்கும்

இவைகளை வெளிப்படையானதாகவே இப்போது எம் கண் முன் இறைவன் காட்டி கொண்டிருக்கிறான்.

அதுவே இந்த Black hole எனப்படும் அதன் ஆறம்ப நிலையாகும் ..

மனிதர்களை இப்போது காணும் அளவுக்கு இறைவன் இதை கொண்டு சென்றுவிட்டான்

அல் குர் ஆன்

உம்முடைய இறைவன் நிழலை எப்படி நீட்டுகின்றான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மேலும் அவன் நாடினால் அதனை (ஒரே நிலையில்) அசைவற்றிருக்கச் செய்ய முடியும். (நபியே!) பின்னர் சூரியனை - நாம்தாம் நிழலுக்கு ஆதாரமாக ஆக்கினோம். (25:45)

ِபிறகு, நாம் அதனைச் சிறுகச் சிறுக (குறைத்து) நம்மிடம் கைப்பற்றிக் கொள்கிறோம். (25:46)
Sura Al-Furqan (1 - 50)
______________________________
நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்
(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம்.  என்பதையும் காஃபிர்கள்  பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?   (21:30) Sura Al-Anbiyaa (1 - 50)
_______________________
எழுதப்பட்ட ஏடுகளைச்  சுருட்டுவதைப் போல்  வானத்தை நாம்  சுருட்டிவிடும்  அந்நாளை (நபியே!
நினைவூட்டுவீராக!);

முதலில் படைப்புகளைப் படைத்தது போன்றே, (அந்நாளில்)  அதனை மீட்டுவோம்; இது நம்மீது வாக்குறுதியாகும்; நிச்சயமாக நாம்  இதனை செய்வோம். (21:104)
Sura Al-Anbiyaa (101 - 112)

5 comments:

  1. அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.
    (அல்குர்ஆன் : 2:255)

    www.tamililquran.com

    ReplyDelete
  2. Allah halik allah razik allah malik allah mulk.

    ReplyDelete
  3. உலகிலுள்ள அனைத்து Muslim மக்களும் அல்-குரானையும்,அல்லாஹ்வையும்,இறுதித் தூதரையும் நம்புகிறோம்.ஆனால் மிக மிக சிறிய கருத்து முரண்பாடுகலுக்காக எம்முல் பல இயக்கங்கள்.வேண்டாம் இனியாவது பிரிவுகள்.அடுத்த மதத்தினர் நம்மை பார்த்து நினைக்கிறனர் நாமும் அவர்களை போல பல இறைவனை,அவர்களை போல ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு கோயில்கள் வைத்திருப்பதாக.எனவே தயவு செய்து அமைப்பைபு,இயக்கம் என்பவற்றை விட்டு விட்டு ஒற்றுமையாக,அனைவரும் Muslim என ஒரே கட்டமைப்பின் கீழ் வாழ முயல்வோம்.நமது பலம் ஒற்றுமைதான் அதனால்தான் ஒரு காலத்தில் ஜரோப்பா இருளில் இருந்த போது நாம் இந்த உலகை ஆண்டோம்

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete

Powered by Blogger.