April 29, 2019

உங்களுடன் 2 நிமிடங்கள் ( வாசிக்கத் தவறாதீர்கள் )

இரத்தக்காட்டேறித்தனம் இலங்கைக்குள் தனது நோக்கங்களை அடைந்து கொள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர் கூட்டமொன்றை நன்றாக பயன்படுத்தி விட்டது. தொடர்ந்தும் பயன் படுத்தும்.  

இலங்கை வளங்களை சூரையாடுவதில்  ஏகாதிபத்தியத்திற்கும் முதலாலித்துவத்திற்கும் இடையில் உண்டாகியுள்ள நீயா, நானா சமரின் கோரத்  தாண்டவமே  21ஆம் திகதி இலங்கையை நாசப்படுத்திய இரத்தக் காட்டேறித்தனமாகும்.   

பாதுகாப்புத்துறையில் இடம்பெற்றுள்ள பலவீனத்தை தனது பிரச்சாரத்திற்கு ஏதுவாக  பயன்படுத்த ஆரம்பித்துள்ள குள்ளநரிக் கூட்டமானது அதிகாரத்தையும், ஆட்சி பீடத்தையும் குறிவைத்து காய் நகர்த்த ஆரம்பித்துள்ளது. 

கொலையுண்டோர் பட்டியலை நன்றாக அவதானித்தீர்களா?  பெளத்தம் பத்திரமாக பாதுகாக்கப்பட்டுள்ளது. அறவே சம்பந்தமற்ற கிரிஸ்தவம் பல நூறு உயிர்களை பறிகொடுத்துள்ளது? இஸ்லாம் பழிக்கடாவாக மாற்றப்பட்டுள்ளது.  மர்மமொன்று புதைந்திருப்பதும் பூதமொன்று ஒழிந்திருப்பதும் புலப்படவில்லையா உங்கள்  சிந்தனைக்கு? 

இலங்கையில் பயங்கரவாதத்தை அரங்கேற்றி, பஞ்சமாபாதகத்தை செய்து,  இரத்த குளியலில் மூழ்கியுள்ள ஏகாதிபத்தியமும்  முதலாளித்துவமும் உள் வீட்டு குள்ளநரிக் கூட்டமும் வெவ்வேறு நோக்கங்களைக்  கொண்டுள்ளன. அவற்றில் ஒன்றிற்கு கணிம வளமும், இன்னுமொன்றிற்கு கேந்திர நிலையமும் மற்றையதிற்கு   ஆட்சி அதிகாரமும் தேவைப்படுகின்றன. 

ஏகாதிபத்தியமும் முதலாளித்துவமும் இலங்கைக்குள் தமக்கு வேண்டியதை முழுமையாக அடைந்து கொள்ளும் வரை ஓயப்போவதில்லை. முஸ்லிம் வாலிபர்களை பயன்படுத்தி இலங்கைக்குள் இன்னுமின்னும் இரத்தம் குடிக்க முனைவர். வாலிபர்களே! அன்பான இஸ்லாமிய இளசுகளே! தூண்டல்களுக்குள் மாட்டுண்டு துயரில் விழிந்து விடாதீர்கள். 

30 வருட கொடூர யுத்தத்தின் போது கொழும்பில் உலக வர்த்தக மையம் குண்டு வெடிப்புக்குள்ளானது, கட்டுநாயக்க சர்வதேச  விமான நிலையம் தகர்க்கப்பட்டது, தலதா மாலிகை இலக்கு வைக்கப்பட்டது, காத்தான்குடி பள்ளிவாசலில், ஏராவூரில், வடக்கு தமிழர்களுக்கிடையில், ஆனையிறவு முகாமில் என எத்தனையாயிரம் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன ? எமக்காக போராடிய பல ஆயிரம் பாதுகாப்பு வீரர்கள் மாண்டு போயினர். அப்போதெல்லாம் 30 வருடங்களாக இலங்கையை அறவே கண்டுகொள்ளாத ஏகாதிபத்தியத்தின் உளவுப்பிரிவுகள் 21ம் திகதி குண்டுகள் வெடித்த போது 22ம் திகயே இலங்கைக்குள் ஏன் நுழைய வேண்டும் ? 

பின்னால் மறைந்துள்ள மர்மங்கள் பல.....
ஏன் எமது இஸ்லாமிய மடையர் கூட்டம் பழிக்கடாவாக்கப்பட வேண்டும்?   

அப்பாவி முஸ்லிம் வாலிபர்களே! ஏமார்ந்து போகாதீர்கள். நீங்கள் விழிப்படையாவிடின் இவர்களின் நரபலி விளையாட்டில் வெடி குண்டுகளாக வெடித்துச் சிதறி உங்கள் இன்மை, மறுமை வாழ்கையை பாழ்படுத்திக் கொள்வது மட்டுமே மிஞ்சப் போகின்றது. 

பெற்றோர்களே! 
பாதுகாவலர்களே! 
உங்கள் பிள்ளைகள் மூளைச் சலவைக் காரர்களின்  கரங்களில் இலகுவாக சிக்கிக் கொள்வது மிகப்பெரும்பாலும் இரண்டு சந்தர்ப்பங்களில் தான். 

(01) உங்கள் வாலிபப் பிள்ளைகள் உயர் கல்வி, தொழில் என்ற பெயர்களில் முதலாம் உலக நாடுகளிலும் மத்திய கிழக்கிலும் வாழ்ந்து வரும் காலம். இதில் எல்லா வாலிபர்களையும் சேர்த்துக்கொள்ள முடியாது. இருந்த போதும் பல வாலிபர்கள் அந் நாடுகளில் வைத்து  மூளைச்சலவைக்கு உற்படுத்தப்பட்டே பயங்கரவாதத்திற்குள் சிக்க வைக்கப்பட்டுள்ளனர்.  தற்கொலை குண்டுதாரியாக வெடித்துச் சிதறிய ஸஹ்ரான் ஹாஷிம் மத்திய கிழக்கில் தொழில் புரிந்தவன். அவனை போலவே வெடித்துச் சிதறிய  தெமட்டகொட இப்ராஹிம் ஹாஜியாரின் மகன்கள் இருவரும் UK பல்கலைக்கழக பட்டதாரிகள் ஆவர். 

(02) பூட்டிய அறைக்குள் உங்கள் வாலிப ஆண்/பெண் பிள்ளைகள் அடைந்து கொண்டு  இணையத்தில் (Internet)  சங்கமித்துத் கொண்டிருக்கும் தருணங்கள். 

பெற்றோர்/ பாதுகாவலர்களாகிய உங்கள் கடுமையான கண்கானிப்பின் கீழ் அவர்கள் வந்தாக வேண்டும். போலீஸ் காரனாக செயற்பட்டு அவர்களை அவதானித்து வாருங்கள். இல்லையேல் போலீஸ் வந்து உங்கள் பிள்ளைகளையும் உங்களையும் அள்ளிச் செல்வது நிச்சியம்.

நாட்டில் சமாதானம் நிலவட்டும், அனைத்து இனங்களுக்கிடையிலும் புரிந்துணர்வு ஏற்படட்டும், எமது இலங்கையில் எமக்கு மீண்டும் அமைதி வேண்டும். அள்ளாஹ் துணை நிற்பானாக.   

அபூ அஹ்மத். 
29/04/2019.

8 கருத்துரைகள்:

Timely,Great article... Should reach each and every Muslim Parents.

Also,, ACJU should protect our society by guiding all Parents and Youths about this world agenda (oil/silk road) and educate the youths not to get attracted to misguiding speeches by these groups.

May Allah make our country a peaceful land for all citizens.

Wonderful article. This is the best advice each and every Muslim in Sri Lanka should listen to.

Masha Allah, Dear Editor you are coming to true and nature of this world on going situation. So you have to wright more about this matter.
Allah bless you and give more knowledge to you and our society scholars.

Rubbish, the reason is Muslim ministers tried to cheat the government pretending that they are supporting the government

well said I appreciate ur article

Who are we? We are of course brethren. Why cannot we join hands even after this incident. I very much appreciate the behaviour of our brothers security personnels. They are very kind with innocent people. Because for very few culprits, they never think of hurting muslims even by words.

Post a comment