Header Ads



தெதுரு ஓயா அருகே, CTB பேருந்து மரத்தில் மோதி 21 பேர் காயம்


சிலாபம், தெதுரு ஓயா அருகே, CTB பேருந்து , வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில்,   21 பேர் காயமடைந்துனர்.


 வெள்ளிக்கிழமை (04) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் சம்பவ இடத்தில் கூடிய மக்களின்  முயற்சிக்குப் பின், சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 


கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த பேருந்து, திடீரென பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்து தெதுரு ஓயாவிலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பெரிய மரத்தில் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.