Header Ads



தோப்பூருக்கு பிரதேச சபை வேண்டாம் எனக்கூறும் சம்பந்தன், கல்முனைக்கு கொடுங்கள் என்பதன் பின்னணி என்ன..?

சமூகம் சார்ந்த விடயங்களிலும் சட்ட விடயங்களிலும் அது சம்பந்தமான அரசு நியமிக்கும் உயர் குழுக்களிலும் முஸ்லிம் சமூகம் சார்பாக கலந்து கொள்ள வேண்டிய பிரதிநிதிகள் எங்கே ? அவற்றை வலியுறுத்த வேண்டிய தலைமைகள் எங்கே ?

கடந்த பெப்ரவரி மாத 27 ம் திகதிய ஜனாதிபதி கூட்டிய உயர் சபை கூட்டம் இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய தமிழர் தரப்பின் வலியுறுத்தல் காரணமாகவே அமைந்தது , தேர்தல் கால சந்தர்ப்பங்களை வைத்து காரியங்களை தங்களது பலத்தால் சாதிக்க முனையும் சகோதர தமிழ் தரப்பின் நச்சரிப்புக்கு அடிபணிந்து அவர்களின் வாக்குகளில் கண்ணாக இருக்கும் ஜனாதிபதி இந்த உயர் கூட்டத்தை கூட்டி இருந்தார் , 

இறுதியில் தீர்வை முன்னோக்கி கொண்டு செல்ல பிரச்சினைகளை ஆராய 4 பேர் அடங்கிய உயர் குழு ஒன்று அமைக்கப்பட்டது , இதில் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக யாருமே இல்லை ? இதை கண்டு கொள்ளாத முஸ்லிம் வீராவேச தலைமைகள்
எவ்வாறு முஸ்மிகள் தரப்பு விடயங்களை கையாள போகின்றனர் , அல்லது மீண்டும் கடைசி நேர்த்தில் வந்து ஒப்பாரி வைக்க போகின்றார்களா?

கட்சிகளின் சட்ட மேதைகளும் சட்ட நிபுணர்களும் இந்த விடயங்களை புரிந்து அல்லது தெரிந்தாவது கொண்டுள்ளார்களா? இந்த விடயங்கள் சம்பந்தமாக அரசியல்வாதிகளுக்கு பக்கவாத்தியம் வாசிக்கும் ஊடகங்களாவது வாய் திறந்தனவா?

எதிரே வரும் நாட்களில் மிக மோசமான ஜனாநாயகத்தை குழிதோண்டிப்புதைக்கும் ஒரு சட்டமாக மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டம் வாக்கெடுப்புக்கு வரப்போகிறது , 

எனநாயகத்தை பாதுகாக்க என போராடிய ஜனநாயக சக்திகள் ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்கும் இந்த சட்டத்துக்கு என்ன பதில் கூறப்போகின்றனர் ,சிறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கூட தடை செய்யும்  நினைத்தவாறே  கைது செய்து தடுத்து வைக்கும் இந்த சட்டமூலம் பற்றிய விடயங்களை இலத்திரனியல் ஊடகங்கள் உற்பட சமூக வலைத்தளங்களில் கூட கான முடியாமல் போனதும் அதற்கான அதன் சாதக பாதகங்கள் வெளியே கசியாமல் பாதுகாக்க படுவதும் ஏன் ?

ஆங்காங்கே சமூகத்தில் அரசியல் தலைவர்களுக்கும் அமைச்சர் எம் பி மார்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகள் கானாமல் போய் விடும் என்பதனாலா?

இன்றைய ஜனநாயக சூழலில் முஸ்லிம் சமூகத்துக்கு உள்ள ஒரே தெரிவு ஆர்ப்பாட்டங்கள் மூலம் தமது எதிர்ப்புகளை சர்வதேசங்களுக்கு தெரிவிப்பது மட்டுமே , அதைக்கூட சட்டவிரோதமாக மாற்றி அதை நடத்துவோரை பங்கு கொள்வோரை கூட இந்த பயங்கரவாத தடைச்சட்டம் பயங்கரவாதமாக்கி உள்ளே தள்ளவுள்ளது , இதை எமது சிறுபான்மை தலைமைகளும் அமைச்சுக்களை திணைக்கள தலைமைகளை சமூகத்தின் பேரால் பேர்ம் பேசி பெற்று  சமூகத்துக்கு அநீதிகள் நடக்கும் போது பதவிகளை வைத்து அடைகாத்து விட்டு பின்னர் முட்டை இட்ட கோழிகள் போல் தேர்தல் மேடைகளில் வீர முழக்கமிடவும் அழுது புலம்பவும் வரும் தலைமைகளைம் கட்சிகளும் அவற்றின் கறுப்பு கோட் போட்ட நிபுணர்களும் இன்னும் அறியவில்லையா ?

அண்மையில் இது விடயமான சில விடயங்களை தெளிவுகளை NFGG பிரதி தவிசாளர் பொறியியலாளர் ரஹுமன் அவர்கள் சிறுபான்மை கட்சிகளின் தளபதிகளுக்கு விளக்கி கூறி இருந்ததாகவும் ஆனால் ஒரு சிரேஷ்ட கட்சி தலைவரிடம் இருந்து இதற்கான பதில் இதுவரை இல்லை எனவும் , இன்னொரு வீர தளபதி அப்படி அது என்ன சங்கதி ? குழுக்கள் நியமித்து விட்டார்களா என கேட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வருகின்றன , இந்தளவு அதிகாரத்தில் பதவியில் உள்ள கட்சிகளினதும் தலைவர்களினதும் அக்கட்சிகளின் சட்டத்தரணிகளிடமும் அசட்டையீனம் காணப்படுகிறது !

இந்த விடயத்தில் தன்னால் இயன்ற வகையில் அதிகாரங்கள் இல்லாத போதும் பொறியியலாளர் ரஹுமான் அவர்களும் சட்ட முதுமணி YLS Hameed அவர்களும் சில விடயங்களை குரல்கள் அமைப்பினரும் செய்து வருவதை இவ்வேளை பாராட்டியே ஆகவேண்டும் !

முஸ்லிம் தலைமைகளே சமூகம் அரசியலமைப்பு அதிகார பரவலாக்கம் என்ற விடயங்களிலே மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பெயரிலும் அடிமைப்படுத்தும் இறுதி கட்டத்தில் உள்ளது ! நீங்கள் பதவிகளுக்காக சமூகத்துக்கு எதிராக நடைபெறும் விடயங்களின் பாரதூரம் தெரியாமல் ஆளுனர் அமைச்சு திணைக்கள பதவிகளுக்கும் திணைக்கள தலைமை பதவிகளுக்கும் சோரம் போகாமல் சமூக விடயங்களை மக்களுக்கு தெளிவு படுத்தி அவற்றை அரசியல் ரீதியாகடைமுறைப்படுத்த வாருங்கள் , 

இறுதி நேரத்தில் எல்லாம் முடிந்த பின்னர் கைகளை கசக்கிக்கொண்டு நீங்கள் நிற்பது போன்று சமூகமும் நிற்க உங்களது இந்த தாமதமும் மோனமும் காரணமாக அமைந்து எதிர்கால சந்ததிகளுக்கு அரசியல் அடிமைச்சாசணம் என்ற பெயரில் துரோகத்தை செய்து விடாதீர்கள் , 

சகோதர தமிழினம் தனது அரசியல் பாராளுமன்ற பலத்தை கொண்டு அதன் சட்ட வல்லுணர்களையும் கொண்டு சந்தர்ப்பத்தைக்கு ஏற்ப ஜனாதிபதி பிரதமர் எதிர்கட்சி தலைமைகள் இடதுசாரிகள் என அணைவரையும் கொண்டு தங்களது விடயங்களை எந்த பதவி சுகபோகங்களும் இன்று செய்கையில் உங்கள் கைகளையும் விய்களையும் கட்டி வைத்திருப்பது என்னவோ ?

தோப்பூருக்கு பிரதேச சபை கொடுக்க வேண்டாம் எனக்கூறும் சம்பந்தன் ஐயா கல்முனைக்கு கொடுங்கள் எனக் கூறுவதன் பின்னணி என்ன , 3 அடுத்தடுத்த வீதிகளை விட்டுக்கொடுக்க முடியாத சகோதர தமிழினம் கிழக்கு மாகாணத்தை இணைத்து தாருங்கள் என கேட்பதற்கான காரணங்கள் என்ன ? 

அமைச்சு பதவிகள் இன்றியே தங்களது பிரச்சினைகளை ஆராய ஜனாதிபதிவரை தங்களது அதிகாரத்தை செலுத்துவதற்கு உரிய காரணம் என்ன ? போன்றவற்றை இனிமேலவது உணர்ந்து சமூகத்தில் இதுவரை விஸ்வரூபம் எடுத்துள்ள பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளையாவது இந்த அரசியல் சூழலில் நிறைவு செய்யவும் எதிர்கால அரசியல் ரீதியான அடிமைத்தணங்களில் இருந்து பாதுகாக்கவும் இனிமேலாவது உங்களுக்கு மக்கள் அளித்த ஆணைகளை அதிகாரங்களை பயன்படுத்துங்கள் , 

சமூகத்துக்கு எதிரான சட்டமூலங்களை தோற்கடிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் , அரசியல் சீர்திருத்த உயர் குழுவில் முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஆராயும் பிரதிநிதியை உடன் நியமியுங்கள் அல்லது அந்த உயர் குழுவை முடக்கும் காரியத்தை செயற்படுத்துங்கள் !

Shm Firthows

3 comments:

  1. மூதூர் பிரதேச சபை பிரிப்பில் முஸ்லிம்களுக்கு மேலும் ஒரு பிரதேச சபை வருவதை சம்பந்தர் எதிர்ப்பது தப்பு. ஆனால் 70188 மக்கள் வாழும் மூதூர் பிரதேச சபை பிரிவின்போது அங்கு வாழும் 26,608 தமிழர்கள் பிழவு படுத்தப் படக்கூடும் என்பது பற்றிய சம்பந்தரின் கவலை நியாயமானது. சம்பந்தன் அவர்கள் மூதூர் முஸ்லிம்களுக்கான பிரதேச சபை பிரிவை ஆதரிக்கவேண்டும். மூதூரில் முஸ்லிம்களுக்கு 2 பிரதேச சபை தமிழருக்கு ஒரு பிரதேச சபை உருவாக்கவேண்டும் என்கிற கோரிக்கையை சம்பந்தன் அவர்கள் முன்வைக்கவேண்டும்.
    ஏற்கனவே கல்முனையில் தமிழ் பிரதேச சபை உறுதியாக இயங்கி வருகிறது. எனவே தரமுயர்த்தப்படுவது எப்ப என்பது மட்டும்தான் கேழ்வி. எனவே இரண்டு பிரச்சினையையும் குழப்ப வேண்டியதில்லை.
    சென்ற மாகாண சபை தேர்தல் முடிந்து அரசமையும்போது முஸ்லிம் தலைவர்களுக்கும் சம்பந்தருக்கும் இடையில் நிலவிய நல்லுறவு மீண்டும் உருவாகும் வகையில் இரு தரப்பினரும் செயல்படவேண்டும்.

    ReplyDelete
  2. கல்முனை தமிழ் பிரதேச சபை என்பதை மட்டும் கல்முனை பிரதேச செயலகம் தமிழ் பிரிவு என மாற்றிவிடவும்

    ReplyDelete
  3. தோப்பூரில் 2007 ஆம் ஆண்டிலிருந்து உப பிரதேச செயலகம் இயங்கி வருகின்றது.அதனை தரமுயர்த்துவதே அவர்களது கோரிக்கை .

    ReplyDelete

Powered by Blogger.