Header Ads



றிஷாட் மீதான குற்றச்சாட்டுகள் மிகமோசமாக, இனத்தை அவமதிப்பதாக உள்ளன - ரணிலிடம் கூறிய தலதா


வில்பத்து வன அழிப்பு என்று கூறி அமைச்சர் றிஷார்ட் பதியுதீன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்திருக்கிறார்.

அம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டிருந்த பிரதமர் ரணில் அங்கு வந்திருந்த அமைச்சர்களுடன் சம்பாஷணைகளில் ஈடுபட்டிருந்தார்.

அமைச்சர் றிஷார்ட் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் மிகவும் மோசமான – இன ரீதியாக அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் இது குறித்து உடனடி நடவடிக்கைகள் எடுப்பது தான் அரசுக்கும் நல்லதென நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள இதன்போது பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேசமயம் இங்கு கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் றிஷார்ட் பதியுதீன் இந்த விடயத்தை ஆராய விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைப்பதே நல்லதென பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

இப்படியான பிரசாரங்கள் மூலம் அரசின் பெயருக்கும் அபகீர்த்தி ஏற்படும் என்பதால் உடனடியாக இது குறித்து கூடுதல் கரிசனை செலுத்துவதாக பிரதமர் இங்கு உறுதியளித்துள்ளார்.

t-n

No comments

Powered by Blogger.