Header Ads



முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகள், எந்த உடையணிய வேண்டும்..? முக்கிய தீர்மானம் எடுக்கப்படவுள்ளது

அர­சாங்க பரீட்­சை­க­ளுக்குத் தோற்றும் முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­க­ளுக்­கான உடை எவ்­வாறு அமை­ய­வேண்டும் என்­பது தொடர்பில் ஆராய்ந்து அந்த உடையை கல்வி அமைச்சின் சுற்று நிரு­பத்தில் உள்­ள­டக்கிக் கொள்­வ­தற்கு முஸ்லிம் கல்வி மாநாடு, சிவில் சமூக அமைப்­புகள், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் என்­பன திட்­ட­மிட்­டுள்­ளன. கடந்த காலங்­களில் பரீட்­சை­க­ளுக்குத் தோற்­றிய

முஸ்லிம் மாண­விகள் சிலர், அவர்­க­ளது ஆடை தொடர்பில் பரீட்சை மண்­டப அதி­கா­ரி­களால் அசௌ­க­ரியங்­க­ளுக்­குள்­ளாக்­கப்­பட்­டனர். நிகாப் அணிந்து சென்ற மாண­விகள் மற்றும் சில இடங்­களில் அபா­யா­வுக்கும் மறுப்புத் தெரி­விக்­கப்­பட்­டது. இதற்கு ஒரு தீர்வு பெற்­றுக்­கொள்­வ­தற்­கா­கவே  பரீட்­சை­க­ளுக்குத் தோற்றும் முஸ்லிம் மாண­வி­களின் ஆடை எவ்­வாறு அமைய வேண்­டு­மெனத்  தீர்­மா­னிக்­கப்­ப­ட­வுள்­ளது.

இது தொடர்­பான கூட்­ட­மொன்று எதிர்­வரும் சனிக்­கி­ழமை காலை 9 மணிக்கு வெள்­ள­வத்தை– இஸ்­லா­மிய கற்கை நிலைய மண்­ட­பத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் தலைவர் என்.எம். அமீன் தலை­மையில் நடை­பெறும் இக்­கூட்­டத்தில் முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலைவர் பேரா­சி­ரியர் ஏ.ஜி.ஹுசைன் இஸ்­மாயில், முன்னாள் பரீட்சை ஆணை­யாளர் ஏ.எஸ்.மொஹமட் ஆகியோர் கருத்­து­களை வழங்­க­வுள்­ளனர்.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பிர­தி­நி­தி­களும் கருத்­து­களை முன்­வைக்­க­வுள்­ளனர். இக்­கூட்­டத்தில் பரீட்சை எழுதும் முஸ்லிம் மாண­விகள் இஸ்­லா­மிய கலா­சா­ரத்­துக்கு உட்­பட்ட எவ்­வா­றான ஆடை அணி­ய­வேண்டும் என்ற தீர்­மானம் ஒன்று எட்­டப்­ப­ட­வுள்­ளது.

தீர்­மா­னிக்­கப்­படும் ஆடை கல்­வி­ய­மைச்சின் அங்­கீ­காரம் பெறப்­பட்டு சுற்­று­நி­ருபம் மூலம் பரீட்சைத் திணக்­க­ளத்­துக்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­மெ­னவும், பரீட்சைத் திணைக்­களம் மூலம் பரீட்சை மண்­ட­பங்­களின் அதி­கா­ரி­க­ளுக்கு அனுப்­பப்­படுமெனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் தெரி­வித்தார்.

முஸ்லிம் மாணவிகள் பரீட்சை எழுதுவதற்கு செல்லும்போது பரீட்சை மண்டப அதிகாரிகளால் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்படுவது இதன் மூலம் நிவர்த்திக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
-Vidivelli

2 comments:

  1. நல்ல முயற்சி, பரீட்சை எழுதுவோரின் ஆளடையாளம் அறியும் வண்ணமான உடையை சிபாரசு செய்வது முயற்சி வெற்றி பெற உதவியாக அமையும். முடியாதவர்கள் இறைவனை அஞ்சியவர்களாக வீட்டோடு இருந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  2. கிழக்கு மாகாண பெண்மாணவிகள் அணியும் பர்தா ஆடையே பொருத்தமானது.மேலுள்ள புகைப்படத்திலுள்ளதைப் போன்று மாற்றம் செய்யத் தேவையில்லை.ஆரம்பமாக பர்தா அமைப்பிலான ஆடையை கல்வி அமைச்சராகவிருந்த பதியுதீன் மஹ்மூத் அவர்களின் மகள் அணிந்து பாடசாலை சென்றதாகவும் அதனை ஏனைய மாணவிகள் கிண்டல் செயத்தாகவும் அதை அவர் தந்தையிடம் முறையிட அவர் இனி முஸ்லிம் மாணவிகள் இதே உடை அணிந்துதான் பாடசாலை வருவார்கள் எனக்கூறி அதை அறிமுக்படுத்தியதாகவும் ஒரு செய்தி கேள்விப்பட்டதுண்டு.

    ReplyDelete

Powered by Blogger.