Header Ads



சுனாமிக்கு முன் - பின் இந்தோனேஷியா எப்படி இருக்கிறது..?


இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக சுமார் 1,234   பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். இந்நிலையில் நிலநடுக்கம் மற்று சுனாமிக்கு முன் பாதிக்கப்பட்ட பகுதிகள் எப்படி இருந்தது, பாதிப்புக்கு பின் எப்படி உள்ளது என்பது தொடர்பான சாட்டிலைட் புகைப்படம் வெளியாகியுள்ளது. 

இந்த சம்பவம் காரணமாக அங்கிருக்கும் மக்கள் உணவுக்காக தவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பெட்ரோல் போன்ற எரிபொருட்கள் வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக நிலப்பரப்பு ஈரமாகியதால், வீடுகள் சேதமடைந்து தரைமட்டமாகிய போது எடுக்கப்பட்ட புகைப்படம். இந்த இயற்கை பேரழிவின் காரணமாக பாலு  பகுதியில் உள்ள மக்களே அதிகளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அங்கிருக்கும் சுமார் 380,000 மக்கள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.

குறிப்பாக அங்கிருக்கும் 8 மாடி கொண்ட ஓட்டல் ஒன்று தரைமட்டமானதால், அதன் உள்ளே மக்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரவாக நடைபெற்று வருகிறது.

பேரிடர் குழு மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தாலும், அரசு சார்பில் இருந்து வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள், உணவு போன்றவை கிடைப்பதில் தாமதல் ஏற்படுவதால், மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

பாலு பகுதியில் சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளதால், அவர்கள் அனைவரும் அருகில் இருக்கும் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கடும் சேதத்தை சந்தித்துள்ள இந்தோனேஷியாவுக்கு ஐரோப்பிய யூனியன் மற்றும் சில நாடுகள் உதவ முன்வந்துள்ளன. உதாரணமாக ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் தெரிவித்துள்ளது.மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக லோம்பக் பகுதியில் 505 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.