Header Ads



கண்டி முஸ்லிம் விரோத கலவரத்தை, ஐ.தே.கட்சியே ஏற்படுத்தியது - விபரிக்கிறார் கம்மன்பில

கண்டி - திகன பிரதேசத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த இனவாத கலவரத்தின் பின்னணியில் அரசாங்கம் இருந்தது என்ற தகவலை பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா வெளியிட்டு விடுவார் என்ற அச்சம் காரணமாகவே, நாலக சில்வாவை கைதுசெய்யவும், பணியில் இருந்து இடைநீக்கம் செய்யவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -18- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாலக டி சில்வா பிணை வழங்க முடியாத குற்றமான அரச விரோத சதித்திட்டத்தை மேற்கொண்டுள்ளார். இதனால், அவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

அவர் வெளியில் இருப்பதனால், சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கவும் சாட்சியங்களை அழிக்கவும் வாய்ப்பு இருப்பதுடன் மக்கள் கலவரமடைய காரணமாக அமையும் என்பதால், இவ்வாறான குற்றத்தை செய்தவர் பிணை வழங்கப்படாமல் விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டும் பிணை தொடர்பான சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

அரச தலைவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை என்பது சாதாரண கொலை முயற்சியல்ல. அது அரச விரோத சதித்திட்டம். எனினும் நாலக டி சில்வா இதுவரை கைதுசெய்யப்படவில்லை. இந்த அரசாங்கம் நாலக டி சில்வாவை கண்டு பயப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் திகனையில் நடந்த கலவரத்தின் பின்னணியில் அரசாங்கமே இருந்தது. அது இனவாத கலவரமல்ல, அரசாங்கம் முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட அரச பயங்கரவாதம்.

பேராசிரியர் ராஜன் ஹூல் கூறியுள்ளது போல் 1983ம் ஆண்டு ஜூலை கலவரத்தை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்படுத்தியது போல், 2018ம் ஆண்டு முஸ்லிம் விரோத கலவரத்தையும் அந்த கட்சியே ஏற்படுத்தியது.

பாரிய தேர்தல் தோல்விக்கு பின்னர் அரசாங்கம் பதவி விலகும் என சமூகத்தில் ஏற்பட்ட நிலைப்பாடுகளை வேறு பக்கம் திசை திருப்பும் தேவை அரசாங்கத்திற்கு இருந்தது.

இதன் காரணமாகவே தெல்தெனிய முதல் திகனை வரை ஆறு கிலோ மீற்றர் வரை கலவரத்தில் ஈடுபட்டவர்கள் சொத்துக்களை அழித்து முன்னோக்கி செல்லும் போது பொலிஸார் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

இவை அனைத்தையும் அழகாக மூடி மறைத்து வேறு தரப்பினர் மீது பிரதிப் பொலிஸ் மா அதிபர் குற்றத்தை சுமத்தினார்.

இதன் காரணமாகவே அரசாங்கம் அவரை பணி இடைநீக்கம் செய்யவும் கைதுசெய்யவும் அஞ்சுகிறது எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. Mr Gammanpila leader of Sinhala communal party has given statement speech terrorist involved
    This is a political speech. Muslims have no mercy under both government. Now we are better than previous rule . Heavy blow our community experienced and accelerated by previous government still felt . Leaders like Gammanpila playing political game everyone knows

    ReplyDelete
  2. Gammanpila is the first enemy to Buddhist community

    ReplyDelete
  3. Mr Gamman,

    We Muslim have realized all the foxes.... Do not make crocodile tears fro us ....

    We Keep Trust only on ONE TRUE GOD (Allah) who created you and us. We worship him alone and We seek safety from him alone... He will protect us and give us eternal success which is paradise.

    Racism, Killing, Violence is not Human character and will not help any one to achieve peace in this world or after death.

    ReplyDelete
  4. You people fired Beruwala this people fired Digana what is next?

    ReplyDelete

Powered by Blogger.