August 10, 2018

ஷைக் பட்டதாரிகளா..? அரபு சேர் பட்டதாரிகளா..??

பேருவலை ஜாமிய்யா நளீமிய்யா கல்விப் பீடம் நளீம் ஹாஜியார் அவர்களால் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு பாரியதொரு சேவையை நிறைவேற்றிய பெருமை அவர்களையே சாரும். 

அந்த மகான் தனது வாழ்வில் மார்க்கப் பேணுதலையும், இறை வணக்கத்தையும் கடைப்பித்தவராவார். அதனை அவர்களின் அகம் சான்றாக எடுத்துக் காட்டுகின்றது. தொப்பி அணிந்தவரான, நெத்தியில் கறுப்பு அடையாளம், தாடியுடன் கூடிய பிரகாசம் உள்ள முகம் அவர்கள் தனது வாழ்வில் எந்த  அளவு பேணுதலுடையவராக ஒரு வணக்கசாலியாக இருந்திருப்பார்கள் என்பதற்கு  சான்றாகவே இருக்கின்றது. 

இந்த நல்ல மகான் உருவாக்கிய அந்த ஜாமிய்யா நளீமிய்யாவில் இருந்து பட்டம் பெற்று வெளியேறும் பட்டதாரிகளை உற்று நோக்கும் போது மிகவும் வேதனையளிக்கின்றது. பொது மகனாகிய அந்த மகானிடம் இருந்த ஈமானிய உணர்வையாவது தன்னகத்தே கொண்டு அல்லாஹ்வை திருப்திப் படுத்தாமல் இஸ்லாம் பறிபோனாலும் பறவாயில்லை நவீன யுகத்தை திருப்திப்படுத்தினால் போதும் என்ற மனோபக்குவம் உடையவர்களாகத்தான் அவர்களில் அதிகமானவர்களின் நிலை இருக்கின்றது. 

இதற்கு அவர்களின் தோற்றமே சான்று பகர்கின்றது. நான் அதிகமாக நளீமிய்யாக்களுடன் தொடர்பு வைத்துள்ளதனால் இதனை உற்று நோக்க முடிகின்றது. அவர்களின் ஈமானில் பலவீனமான வார்த்தைப் பிரயோகங்கள், நபியவர்களின் ஸுன்னாவைக் கடைபிடிப்பதில் வெட்க சுபாவம், தொழுகையை நிறைவேற்றுவதில் பேணுதலின்மை போன்ற நடவடிக்கைகள் சான்றாக இருக்கின்றன. 

குறிப்பாக அவர்கள் ஆடை அணிவதைப் பார்த்தால் அநேகமானவர்களின் ஆடைகள்; கரண்டைக்காலுக்குக் கீழ் இருக்கின்றது. கரண்டைக் காலுக்குக் கீழ் ஆடை அணிவதைப்பற்றி ஹதீஸ்களில் கடுமையான எச்சரிக்கைகள் வந்திருக்கின்றன. முன்மாதிரியாக இருக்கக் கூடிய மூத்த நளீமிய்யாக்களின் நிலைமையும் இவ்வாறுதான் இருக்கின்றது என்றால் இது எவ்வளவு கவலைக்கு இடமான ஒரு விடயம். இவ்வாறு கடுமையான எச்சரிக்கைகள் வந்தும் கூட அவைகளை கணக்கெடுக்காமல் தமது ஆடைகளை அமைத்துக் கொள்கின்றார்கள் என்றால்   அவர்கள் மார்க்க விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் அளவை எடைபோட்டுக் கொள்ளலாம்.  

இங்கு நான் சொல்ல வரும் முக்கிய விடயம் என்னவெனில், ஜாமிய்யா நளீமிய்யாவில் அரபுப் பாடத்தை திறமையாகவும், ஷரீஆத்  துறையை மேலோட்டமாகவும் படித்துக் கொடுத்து, உலகளாவிய பட்டங்களுக்குரிய பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கற்பித்து ஷைக்-மார்களாக வெளியாக்குவதன் மூலம் பிற்காலத்தில் நவீன குழப்பவாதிகள் உருவாக்;கப்படுகின்றார்கள் என்பதாகும். ஆழம் அறியாமல் காலை விடாதே என்ற பழமொழிக்கு ஏற்ப தற்போது நிலவுகின்ற  சில முக்கியமான மார்க்கப் பிரச்சினைகளில் இவர்கள் ஆழம் அறியாமல் தலையை விட்டு சிக்கித் தடுமாறிக்கொண்டிருப்தை எமக்கு ஒரு படிப்பினையாக எடுத்துக் கொள்ளலாம். 

எனவே ஷரீஅத் துறையும் அங்கு கற்பிக்கப்படத்தான் வேண்டும் என்றிருந்தால் தயவு செய்து ஆழமாக கற்பித்துக் கொடுத்து அஷ்-ஷைக் என்ற பட்டத்துடன் அவர்களை வெளியாக்கலாம். அது சாத்தியமில்லையென்றால் தயவு செய்து  உலகளாவிய பட்டப் படிப்புகளுடன் அரபு மொழியையும் கற்பித்து 'அரபு சேர்களாக' வெளியாக்குங்கள். 

இந்த எனது தாழ்மையான அபிப்பிராயத்தை நளீமிய்யாவின் பணிப்பாளரான கலாநிதி சுக்ரி, அஷ்-ஷைக் ஏ.சீ அகார் முஹம்மத், அஷ்-ஷைக் எஸ்.எச்.எம். பழீல் அவர்களிடம் முன்வைக்கின்றேன். நீங்கள் வாழ்ந்த காலம் அதிகம் வாழப் போகின்ற காலம் மிகவும் அரிது. இக்காலப் பகுதிக்குள் நளீம் ஹாஜியார் அவர்களின் எதிர்பார்ப்பின் பிரகாரம் அல்லாஹ்வை திருப்திப்படுத்தும் வண்ணம் இதற்கு அழகான தீர்க்கமான ஏற்பாடுகளை செய்வீர்கள் என  எதிர்பார்க்கின்றேன். 

வல்லவன் அல்லாஹ் நம் அனைவரையும் சிறந்த நேரான வழியில் இட்டுச் செல்வானாக! ஆமீன்.

ஸாஹிர் ஹுஸைன்
கல்முனை 

39 கருத்துரைகள்:

நான் எத்தனையோ வருடங்கள் சொல்ல நினைத்ததை சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.

assalamu alaikum.
if this was the concern of br Zahir Hussain, he should had directed this
to Nalimiah amangement, as he mentioned above and not play double game by publishing it here. this shows the real Munafiq quality.

Alert be cool. What he is telling 100% correct. They will sell their aahir for dunia. If you talk to them, they will promote dunia.

It is truly unfortunate to see Jaffna Muslim considers to publish artcles of ultra tribal elements of this nature. It is obvious that the author suffers from ultra tribal mentality. Resorting to a particular and identical part of a complete code is a significant syndrome of ultra tribal mentality. By bublishing articles of this nature the readers may conclude that Jaffna Muslim is a partner in circle out arrangements. Hence, in order to protect its credibility Jaffna Muslim should adopt a proper criteria to refrain from publishing futile posts.

Who is this idiot to judge Nalemiah boys and their contribution to the Sri Lankan Muslim community and Sri Lanka ..
How many Naleemiah boys work as teachers? As principals and as education officials and many government and none government departments? Do you know that ?..
How many of them work as dawa workers and many other fields ?
Impact of Naleemiah on Sri Lanka society is huge and idiot like this is blind in his heart and that is why he Can not see all this.
Do you mean that having beard and having your cloth up from ankles is Islam ..that is only form of Islam you know ..
Who gave you power to judge people on their prayers ?...
If you do not see them keeping hands in prayers as you like ..
If you do not see them dress as you like ..
If you do not see them doing dawa as you like ..
If do not see them talk as you like ..

Who the Hell are you to pass on judgment on people...
JM should be more responsible and Answer to Allah for publishing this fake news .
How dare are you to publish your stupidity on public .
Go to Naleemaih and do a research on it since its establishment.
How many books
How many journals
How many conferences
How many dawa workers
It has produced .
UGC wants to make it as a university in Sri Lanka
Do you think they idiots like you do that ..
You will be answerable to Allah for your writing

Today, the Muslim world is not in short of these type of fanatics who come up with the face of Islam they understand. for these fanatics and some of them are agents to some countries. They do not see what the Muslim world goes through now. They do not know where they and how to talk in public and how to write in public.
just now Muslims in Sri lanka feel some sort of free from all types of hatred from BBS and other groups.. Muslim community is lagging behind in Education, economy, and employment and faces some serious challenges in Sri Lanka and rather than focusing on issues that we need to discuss today, these type of people make fitna in the name of ISlam. it was in the name of Islam some fanatics killed Hussain, it was in the name of Islam ISIS, Taliban kill Muslims .. likewise, these fanatics always try to make mockery of people with whom they disagree.
otherwise, these people feel jealously of some old boys of Naleemiah who are getting good posts, and good jobs..
These fanatics are not doing a good jobs for Muslims rather they are damaging the good name of Islam... These fanatics need to know ethics of making criticism in public. I'm sorry I do not have any other terms to depict these people except to use these terms.. I do not want to but yet, I'm forced to do that because of the fact, these fanatics do not know how to make any objectives criticism on any community issue.

Naleem Haji -> Kal-Eliya + Naleemiyya = Wahhaabi + pro.Ibn Thaimiyya Productions. Benefit: "Resourced Community in adverse"

what about Sia foundation Sia also start from same place

I'm not a Naleemi but there are people who claim to be Moulavis or Assheikhs are not practicing Islam properly. It's not just Naleemis but other Moulavis too. Zakir Hussein, Allah does not look at a person's outer appearance but his inner appearance which is takwa. There are plenty of people with long beard and all those signs you mentioned above but they lack takwa which is what Islam requests from Muslims. You should not just generalise Naleemis.

Why some Naleemis / Jamath Islami brothers boasts themselves and criticise others as if , only their group has professionals & intellectuals ? ☺

What you have said is really true! Pls make a change at your earliest.

w alaikum al-salam brother Alert !! You don't need to get angry
Don't behave like 3rd class people
Truth will always be truth
Who ever says it you have to believe that
Most of the the people's voice is that
Also he has said openly and bravely
Because Islam is not only for one particular person but it's for everyone
He has said as if it has happened for Islam and it's society at large
It must be accepted

w alaikumus salam...shaihk Alert !! You don't need to get angry
Don't behave like 3rd class people
Truth will always be truth
Who ever says it you have to believe that
Most of the the people's voice is that
Also he has said openly and bravely
Because Islam is not only for one particular person but it's for everyone
He has said as if it has happened for Islam and it's society at large
It must be accepted

இதையெல்லாம் சொல்ல நினைத்தும் சொல்ல முடியவில்லை. மிகச்சிறந்த பதிவு. வாழ்த்துக்கள்.

Also how he can decide the Thoppi, Long Taadi, and Netti mark?
those symbols are for original mu'mins...and they only will go to Jannah?????
Lots of Pakkeeeer babas have these all symbols at Kalmunai kadatkarai kodiyetta Kovil tiruvila.... "No prayer, lots of drugs.... doing shirks... showing people of magics...so thos also....?????
Its a boolshit article

w alaikumus salam...shaihk Alert !! You don't need to get angry
Don't behave like 3rd class people
Truth will always be truth
Who ever says it you have to believe that
Most of the the people's voice is that
Also he has said openly and bravely
Because Islam is not only for one particular person but it's for everyone
He has said as if it has happened for Islam and it's society at large
It must be accepted

ஒரு சிலரின் செயற்பாடுகளை சுட்டிக்காட்டி முழ ஜாமியா நளீமியா மாணவர்களும் அப்படி என்று குறிப்பிடுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

100% true massage.as i see lots of naleemis they have good knowledge with arabic and islamic history. but unfortunately lower rate in Imaan, Dawa,ibadah, Follow of sunnaah when compare to other Madrasa.

ALL THESE FANATICS IN MUSLIM COMMUNITY DO NOT KNOW HOW TO EVALUATE, EXAMINE AND GAUGE IN INSTITUTIONS OR MAKE ANY CRITICISM . THEY ALL ARE GOOD IN GENERALISATION . WHAT ISIS AND OTHER RADICAL GROUPS DID FOR MUSLIM WORLD AND THEY REPEAT THE SAME MISTAKE IN SRI LANKA TOO....
FIRST OF ALL, SOME PEOPLE THINK ISLAM IS RELIGION LIKE RITUALS, FORMS OF WORSHIPS, AND ISSUE OF SHIRK AND BIDA.. THEY KNOW ISLAM ONLY THESE ISSUES... WHEN YOU SEE PEOPLE SPEAK ABOUT ISLAM BEYOND THESE LIMITS, THEY THINK IT IS NOT PART OF ISLAM.. WHEN WE TALK ABOUT ISLAMIC REFORM, ECONOMIC REFORM, SOCIAL REFORM, POLITICAL REFORM, EDUCATIONAL REFORM.. ISSUES OF MINORITY COMMUNITIES.. SO, MANY OTHER ISSUES THAT AFFECT MUSLIMS IN THE WORLD AND IN OUR COUNTRIES.. THESE SO CALLED CLERICS DO NOT HAVE A CLUE ABOUT THEM.. NOW THEY THINK NALEEMIAH BOYS TALK ABOUT SOMETHING NOT ISLAM....
IT IS KNOWLEDGE GAP ..
IT IS IGNORANCE VS ILM..
THAT IS IT...
BEFORE YOU TALK PLEASE DO SOME RESAERCH.

I think mr.zakir husain very very very islamic fuder mentalist


யாரையோ திருப்தி படுத்த போடப்பட்ட பதிவு
பதில் சொல்லவது .நளீமியாவில் பயின்ற மாணவர்களின் பொறுப்பு ,உலக தரம் வாய்ந்த , இது போலொன்றை செய்ய பலர் போட்டி போட்டு தோல்வியற்ற கதை வேறு , காழ்புணர்ச்சியின் வெளிப்பாடே ........
முக்கியமான மார்க்கப் பிரச்சினைகளில் இவர்கள் தலையிட்டு க்கொண்டிருப்தை பதவி வெறி பிடித்த உலமாக்களுக்கு அச்சத்தை உண்டு பண்ணி இருக்கலாம் . எவ்வளவு காலம் தான் ஏமாற்றுவார் இந்த முஸ்லிம்களை


அஸ்ஸலாமு அலைக்கும். சகோ. ஸாஹிர் ஹுஸைன், முதலில் நானும், நீங்களும் அல்லாஹ்வைப் பயந்துகொள்ள வேண்டும். ஒருவரைப் பற்றி அல்லது ஒரு நிறுவானத்தைப் பற்றி, அவர்களது குறைகளை பற்றி பேசும் போது இஸ்லாம் சில வழிமுறைகளை காட்டித் தருகின்றது.
முதலில் நீங்கள் இதை இந்த website இல் பதிவிட்டது இஸ்லாமிய ரீதியில் மிகப்பெரும் தவறு. ஏனென்றால் ஒரு தடவை அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சவ்தா ரலியல்லாஹு அன்ஹா (இவர்கள் தான் என்று நினைக்கிறேன். சரியாக ஞாபகம் இல்லை) அவர்களுக்கு "கருப்பி" என்று சொன்னதற்கு, நபியவர்கள் சொன்னார்கள்: அந்த சொல்லை கடலில் போட்டால் கடலின் நிறமே மாறிவிடும் என்று....

உண்மையிலே நீங்களும் சொல்கின்ற விடயம் அவர்களிடம் இருந்தால் (மனிதன் என்கிற ரீதியில் அவ்ர்களிடம் தவறுகள் இருக்கும்) அதனை சொல்வதற்கு நபியவர்கள் சிறந்த வழிமுறையை காட்டித் தந்துள்ளார். முதலில் அவ்ர்களிடம் போய் நீங்கள் அந்த தவறை சுட்டிக்காட்ட வேண்டும், அவர்கள் திருந்தவில்லை என்றால், எங்களால் முடியுமாக இருந்தால் கையால் தடுக்க பார்க்க வேண்டும், அதுவும் முடியா விட்டால் அமைதியாக இருக்க வேண்டும். என்று ஹதீஸ் வந்திருக்கும் போது, அதற்கு முரணாக நீங்கள் இவ்வாறு எழுதுவது எந்த விதத்தில் சிறந்தது.???

மேலும் சகோதரரே! ஒருவருடைய வெளிரங்கத்தை பார்த்து, அவர் சுவர்க்கவாதி, நரகவாதி என தீர்மானிக்க நாங்கள் யார்????
மனிதனுடைய மனதை அறியக்கூடியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை..
நீங்கள் இங்கு கூறிய விடயங்களால் நளீமிய்யாஹ் நிர்வாகத்தினர், மாணவர்கள் மற்றும் நளீமிக்கள் எவ்வளவு மனவேதனை அடைந்திருப்பர் என்பதை சிந்தித்தீர்களா?

மேலும் நீங்களா இந்த கட்டுரையை ஜாமிஆ நளீமியாவிற்கு சென்று அவர்களுக்கு கற்பித்துக் கொடுக்கின்ற விதம், அவர்களது Syllabus போன்றவற்றை ஆராய்ந்துவிட்டு தான் சொல்கிறீர்களா?
அல்லாஹ்வைப் பயந்துகொள்ளுங்கள்....

முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (அல் ஹுஜுராத் 6)

மேலும் இதற்கு சார்பாக, எதிராக Comments பதிவிட்டவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். அல்லாஹ் ஸூரா ஹுஜுராத்தில் (12) பின்வருமாறு கூறுகின்றான்.
"முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்."

அரைகுறை அறிவு, அறிவீனத்தை விட ஆபத்தானது...

Naleemis criticise and write articles on other Islamic groups. but they can't bear if anything said to them. are you guys perfect ?. learn to take the the criticism and correct yourself. மற்ற இயக்கங்களை விமர்சித்து நளீமிகள் ஆயிரக்கணக்கான பதிவுகளை இணையத்தில் பதிவிடுகிறார்கள். அவர்களுக்கு ஏதாவது சொன்னால் ரோசம் பொத்திகிட்டு வருது. 😩😩😩

٥١  يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا الْيَهُودَ وَالنَّصَارَىٰ أَوْلِيَاءَ ۘ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ ۚ وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَإِنَّهُ مِنْهُمْ ۗ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ
51  O you who believe! Do not take the Jews and the Christians as allies; some of them are allies of one another. Whoever of you allies himself with them is one of them. God does not guide the wrongdoing people.

முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.

👆🏻👆🏻2:120 وَلَنْ تَرْضٰى عَنْكَ الْيَهُوْدُ وَلَا النَّصٰرٰى حَتّٰى تَتَّبِعَ مِلَّتَهُمْ‌ؕ قُلْ اِنَّ هُدَى اللّٰهِ هُوَ الْهُدٰى‌ؕ وَلَٮِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ بَعْدَ الَّذِىْ جَآءَكَ مِنَ الْعِلْمِ‌ۙ مَا لَـكَ مِنَ اللّٰهِ مِنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍؔ‏ 

2:120. (நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.

١٢٠ وَلَنْ تَرْضَىٰ عَنْكَ الْيَهُودُ وَلَا النَّصَارَىٰ حَتَّىٰ تَتَّبِعَ مِلَّتَهُمْ ۗ قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَىٰ ۗ وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ ۙ مَا لَكَ مِنَ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ

120 The Jews and the Christians will not approve of you, unless you follow their creed. Say, "God's guidance is the guidance." Should you follow their desires, after the knowledge that has come to you, you will have in God neither guardian nor helper.

ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்டுரை.ஜாமியா நளீமியா தலைமைத்துவம் மீள் பரிசீலனை செய்வது சாலச்சிறந்தது.

இவ்வாக்கதிற்கு " சொல்ல மறந்த கதை" என்றே தலைப்பு இட்டிருக்கலாம், அப்படி பலரின் மனதில் தேங்கி கிடந்து யாரிடம் போய் இந்த அநியாயத்தை கூறுவதென்று விழி பிதிங்கிய அப்பாவி இலங்கை முஸ்லிம்களின் சோகக்கதைதான் இது.
இதில் எந்த தவரும் இல்லை, எந்த பொய்யுமில்லை. சொல்ல வேண்டிய இடமென்றால் இதுவே சிறந்த இடம். இப்படியான பொது வலை தளங்களில் கருத்திட்டே பல அமைப்புக்கள் தங்களை சீர் செய்துகொண்ட வரலாற்ரை நாம் இங்கு நினைவுகொள்ளலும் வேண்டும்.
இவர்களின் வீணான கல்விக்கு ஏழை பெற்றோர்கள் ஏழு வருடங்கள் செலவளிப்பதும் இருதியில் அந்த ஏழை, பாமர பெற்றோர்கள் தன் தனயன் தான் கற்றது என்னவென்ரே தெறியாமல் உயிர் இழப்பதும், அவர்கள் எதிர்ப்பார்த்த இரைவனின் திருப்பொருத்தமும் கிடைக்காதவர்களாக இறைவனிடம் செல்லுவதும் அநியாயமே!
ஜப்னா முஸ்லிமுக்கு மிக்க நன்றி இதனை ஆக்கியோனாகிய ஸாகிர் ஹுஸைனுக்கும் நன்றி.
இனியாவது நளீமிக்கள் உண்மையானதை கற்று உண்மையானதை சமுகத்திற்கு எடுத்து சொல்ல வேண்டும் என்று இவ்வண்ணம் அப்பாவி மக்கள் சார்பாக வேண்டுகிறோம்.

இவர்களின் கற்ற இஸ்லாத்திற்கும் இன்றைய அறபுலகம் பின்பற்றும் நவீன இஸ்லாத்திற்கும் வேறுபாடே இல்லை என்பதும் உண்மை.

Zakin husein is ACJU's and Colombo BigBigBig mosque employee

Most of things it's true in my perception

WHAT A SHAM . DANGERES WAY

நான் இந்தக் கட்டுரையாளருடன் உடன்படுகிறேன் இவர் குறிப்பிட்ட விடயங்களை காணமுடிகிறது மேலும் கிழக்கில் பல நளீமிக்கள் வெட்கமின்றி சீதன்னத்துக்கு அடிமையாகி வாழும் கேவலத்தை பார்க்கின்றபோது அந்த உன்னத மனிதரின் உயரிய எண்ணத்திற்கு உலை வைக்கும் இவர்கள் கற்ற இஸ்லாம்தான் என்ன ? என்ற கேள்வியை பொறுப்பாளர்கள் சொல்ல வேண்டும் . அல்லது பட்டங்களை பாவிக்க கூடாது

ஒரு சிலரை வைத்து முழு நமீபியா பட்டதாரிகளையும் தப்பாக எடைபோடும் படியாக இக்கட்டுரை உள்ளது.
இதற்காக முதற்கண் கட்டுரை ஆசிரியரை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
எமது கிண்ணியாவிலே பல நளீமியா பட்டதாரிகள் மகத்தான பணியினைச் செய்து வருகிறார்கள்.
கட்டுரையாளரிடம் காழ்ப்புணர்ச்சி வெளிப்படையாகத் தென்பட்டுள்ளது.

குறித்த கட்டுரையில் சொல்ல மறந்த கதை "ஷீஆக்களின் ஆதிக்கம் இலங்கையில் காலூன்றுவதற்கும் இவர்களின் பங்களிப்புத்தான் காரணம்"

நளீமிய்யாவில் கற்று பாடநெறியை பூர்த்தி சுய்தவரை நளீமி என்று சொல்வோம்..நளீமிய்யாக்கள் என்று சொல்வது முதலாவது பிழை..தாடியின் நீளத்தால் ஈமானின் நீளத்தை அளக்கும் , எந்த வொரு பாவத்தையும் செய்து ஜுப்பாக்குள் ஒழிந்து கொள்ளும் சம்பிரதாயத்தை நாம் பின்பற்றுவதில்லை..அரசியல் , கல்வி , பொருளாதாரம் ,போன்ற துறைகள் பற்றி எந்தவொரு தெளிவும் இல்லாத ஆணின் முகத்தில் தாடி வளர்ப்பதும் பெண்ணின் முகத்தை மூடி மறைப்பதும் மட்டுமே இவர்களின் இஸ்லாம்..

Post a Comment