Header Ads



புதுவருட காலண்டர், கொடுப்பவர்களின் கவனத்திற்கு..!


வாஸ்து, ராசிபலன், நல்ல நேரம் கெட்ட நேரம் என பல மூடநம்பிக்கைகளுக்கு ஆரம்ப வழிகாட்டியே காலண்டர் தான்.

இஸ்லாம் பகுத்தறிவின் மார்க்கம். மூடநம்பிக்கைகளுக்கு எந்த நிலையில் ஒரு முஸ்லிம் துணைபோக கூடாது. அந்த அடிப்படையில் நமது கடை மற்றும் அலுவலகம் சார்பில் கொடுக்கும் காலண்டரில் இந்த வாஸ்து, ராசிபலன், நல்ல நேரம் கெட்ட நேரம் போன்ற எந்த மூடநம்பிக்கைகளுக்கும் இடம் கொடுக்காமல், அதற்கு பதிலாக இஸ்லாமிய நற்போதனை அடங்கிய வாசகங்களை அதில் அச்சடித்து கொடுத்தால் அதன்மூலம் அவர்கள் இஸ்லாத்தை ஓரளவு விளங்க கூடும்.

இதில் கொடுமை என்னவென்றால் இந்த மூடநம்பிக்கைகள் அடங்கிய காலண்டர்கள் பல மஸ்ஜித்களிலேயே தொங்குகிறது.!

தன்னுடைய நேர்மையான வியாபாரத்தின் மூலம் தான் விற்கும் பொருளுடன் சேர்த்து இஸ்லாத்தையும் அன்பளிப்பாக வழங்க வேண்டிய ஒரு முஸ்லிம், இதுபோன்ற மூடநம்பிக்கைகளைஅன்பளிப்பாக கொடுப்பது எவ்வகையில் நியாயம்.!

*ஜோதிடம் பற்றி இஸ்லாம்*

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

ஜோதிடன் அல்லது குறிகாரனிடத்தில் வந்து அவன் கூறுவதை உண்மை என நம்பக் கூடியவன், முஹம்மதின் மீது இறக்கப்பட்ட இறைநூலை (குர்ஆனை) நிராகரித்தவன் ஆவான்."
(நூல்: முஸ்னது அஹ்மது)

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

"ஒருவர் ஜோதிடனிடம் சென்று, எதைப் பற்றியாவது கேட்டால், அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை."

(நூல்: முஸ்லிம் 4488)

எனவே இந்த மூடநம்பிக்கைகள் அடங்கிய காலண்டரை அன்பளிப்பாக தருவதிலுருந்தும் மேலும் அதனை நமது வீட்டில், கடையில், மஸ்ஜிதுகளில் தொங்க விடுவதிலிருந்தும் தவிர்ந்து கொள்வோம்.!

-Hoorulayn Leeza-

2 comments:

  1. அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை.
    (அல்குர்ஆன் : 6:59)

    ReplyDelete
  2. அழகான ஒரு ஆக்கம், என்றாலும் இஸ்லாம் பகுத்தறிவின் மார்க்கம் என்பது பிழையான ஒரு கருத்தாகும்,மேலும் அது வழிகேட்டின் மற்றொரு பிரதியாகும், காரணம் இஸ்லாத்தில் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட சில அம்சங்களான நபிமார்களின் அற்புதங்கள்,மண்ணறை வாழ்க்கை,மறுமை நாளின் இறுதிப் பத்து அடையாளங்கள் போன்ற அதிகமான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது,
    பகுத்தறிவால் சிந்தித்தால் இதனை ஏற்க முடியாது, விசுவாசம்(ஈமான்)என்று வரும்போது பகுத்தறிவுக்குப் புலப்படும்,புலப்படாத அனைத்தையும் விசுவாசிப்பது கடமையாகும்.

    ReplyDelete

Powered by Blogger.