Header Ads



அனுரகுமாரவையும் கட்சியில் இருந்து, வெளியேற்ற ஜே.வி.பி பின் நிற்கப் போவதில்லை - லால்காந்தவின் அதிரடி

தேவை ஏற்படின் தம்மை மட்டுமல்லாது கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவையும் கட்சியில் இருந்து வெளியேற்ற ஜே.வி.பி பின் நிற்கப் போவதில்லையென ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லால்காந்த தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

ஒரு கட்சியில் புறக்கணிக்கப்படுகின்றவர்கள் மற்றைய கட்சியில் அமைப்பாளர்களாகவும், அமைச்சர்களாகவும் நியமிக்கப்படுகின்றனர்.

இந்த நிகழ்வு கடந்த காலத்திலும் இடம்பெற்றது எதிர்காலத்திலும் இடம்பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

மூன்று கட்சிகளும் ஒரே வகையை சேர்ந்தவர்கள் ஆகையால் இந்த ஆள்மாறாட்டங்கள் இடம்பெறுகின்றன.

எனினும், ஜே.வி.பி.யினுள் அத்தகையவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவதில்லை.

ஊழலற்ற தூய்மையான கட்சியாக ஜே.வி.பி கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

இதனை சீரழிக்க முயற்சிக்கின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கட்சியை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.

அத்தகையதான கட்டமைப்பொன்று ஜே.வி.பி கட்சியினுள் உள்ளது.

எனவேதான் விமல் வீரவங்ச போன்றவர்களும் ஜே.வி.பியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.
    (அல்குர்ஆன் : 60:8)

    ReplyDelete
  2. இது தான் உண்மையான கட்சியின் கொள்கை.. ஆட்சி அதிகாரம் அல்ல ஒரு கட்சியின் கொள்கை.. மாறாக உண்மை நேர்மை என்பது தான் கொள்கையாக இருக்கவேண்டும்.. இன்று இஸ்லாத்தின் பெயரால் அரசியல் செய்யும் முஸ்லிம் பெயர் தாங்கிளிடம் இஸ்லாம் இல்லை...

    ReplyDelete

Powered by Blogger.