Header Ads



"என்னிடம் கோடிப் பணம், தருவதாக பேரம் பேசப்பட்டது"

முஸ்லீம்களுடைய அரசியலை அப்படியே குழி தோண்டிப் புதைக்கின்ற அத்தனை விடயங்களும் புதிய அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் சார்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும்  தலைமை வேட்பாளருமான எம்.ஏ.அன்சில் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அட்டாளைச்சேனை புறத்தோட்ட வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் ஏ.பி.தீனுள்ளாவை பலநோக்கு கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேரடியாக மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற ஜனாதபதி முறையானது முஸ்லீம்களுக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும். இதன் மூலம் எமது சமூகத்தின் பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்ள முடிவதுடன் எமக்கு பேரம் பேசுவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் அமையும். 

ஜனாதிபதி என்பவர் பாராளுமன்றமூடாகவே தெரிவு செய்யப்படுவார் என்று புதிய அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சிறுபான்மை சமூகத்தின் பேரம் பேசும் சக்தியை இல்லாமல் செய்வதற்கான ஒரு தந்திரயுபாயமாகக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்று நாட்டிலே புதிய அரசியல் முறைமை ஒன்றை அறிமுகம் செய்வதற்கான  இடைக்கால அறிக்கையொன்று முன்வைக்கப்பட்டு அது பாராளுமன்றத்திலே விவாதத்திற்கும் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த இடைக்கால அறிக்கையிலே வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்காக மும்மொழிவு செய்யப்பட்டிருக்கின்றது, மேலும் தேர்தல் முறை மாற்றம், ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் போன்றன வற்றுக்கும் மும்மொழிவு செய்யப்பட்டிருக்கின்றது. இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான அத்தனை விடையங்களும் அதில் செய்யப்பட்டிருக்கின்றன.

இவ்வாறாக முஸ்லீம்களுக்கு பாதகமான அத்தனை விடயங்களுக்கும் கண்னை மூடிக்கொண்டு நாங்கள் ஆதரவு அளிக்க வேண்டுமென்று றவூப் ஹக்கீம் பேசிக்கொண்டுதிரிகின்றார்.

ஐக்கியதேசி கட்சியின் கடந்த மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்ட றவூப் ஹக்கீம் அங்கு முஸ்லிம் காங்கிரிஸின் தலைவராகவோ, முஸ்லீம் சமூகத்தின் தலைவராவோ உரையாற்றிருக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சயின் கலகெதர தொகுதியின் அமைப்பாளராகவே அங்கு உரையாற்றியிருந்தார். 

-புதிய அரசியல் அமைப்பை எல்லோருமாக இணைந்து நாங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதற்காக எல்லோருமாக இணைந்து வாருங்கள் என நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுத்திருந்தார்.

மர்ஹூம் அஸ்ரபின் கொள்கையிலிருந்தும், அவர்காட்டிந்த பாதையிலிருந்தும் தற்போதய முஸ்லீம்காங்கிரஸ் விலகிச் செல்கிறது. சமூகம் சார்ந்த விடயங்கள் தவிர்ந்து ஏனையவர்களின் தேவைக்காக கட்சி பயணித்துக் கொண்டிருக்கின்றது.

கட்சியின் தலைமை வேறு திசையில் பயணித்துக்கொண்டிருப்பதை கட்சிக்குள் இருந்து கொண்டே நாம் போரடினோம். அதற்கும் முடியாத நிலையிலேயே கட்சியை விட்டு வெளியேறிய போது என்னிடம் வந்து கோடிப் பணம் தருவதாக பேரம் பேசப்பட்டது.

 அந்தக்கட்சிக்காக வாக்களித்து வந்த ஏழைக் குடும்பங்கள் என்று பாராது இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட அத்தனை அரசாங்க தொழில்களுக்கும்  பணம் அறவீடு செய்யப்பட்டன. 

விiளாயட்டு துறை பிரதி அமைச்சரின் 05 கோடி ரூபா நிதியொதுக்கீட்டின் மூலம்  அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தை புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. இந்த வேலையை வழங்குவதற்காக  ஒப்பந்தக்காராரிடம் 60 இலட்சம் ரூபா கொமிசன் பெற்றுள்ளனர்.

முஸ்லிம் கட்சி என்ற போர்வையில் மக்களின் ஆணையைப் பெற்று அதிகாரத்தில் அமர்ந்துள்ள அரசியல் தலைமை சமூகத்தின் அபிலாசைகள், தீர்மானங்கள் அத்தனையையும் மொத்தமாக இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் விலைபேசி விற்கின்றது.

பைஷல் இஸ்மாயில் - 

No comments

Powered by Blogger.