November 17, 2016

எம்மை சிறையில் அடைப்பதால், அழித்துவிடலாம் என கருதவேண்டாம் - SLTJ சீறுகிறது


SLTJ பொதுச் செயலாளர் கைது – நடந்தது என்ன? தவ்ஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை

SLTJ யின் பொதுச் செயலாளர் சகோதரர் அப்துர் ராஸிக் அவர்களுக்கு எதிராக பொது பல சேனா அமைப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனு  16 மாலை 4.00 மணியளவில் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, எதிர் வரும் 29 ஆம் திகதி வரும் வரை பிணை மறுக்கப்பட்ட நிலையில் அப்துர் ராஸிக் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கான GSP+ வரிச்சலுகை கிடைக்க வேண்டுமானால் முஸ்லிம் தனியார் சட்டத்திலுள்ள பெண்களின் திருமண வயது மற்றும் வேறு சில விடயங்களும் மாற்றப்படல் வேண்டும் என்ற நிபந்தனையினை ஐரோப்பிய யூனியன் விட்டிருப்பதாக இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக ஊடக அறிக்கை விட்டது.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்கள் தேவை. ஆனால், அந்த மாற்றங்கள் குர்ஆன் மற்றும் நபிகளாரின் வழிகாட்டலுக்கு ஏற்ப முஸ்லிம் புத்திஜீவிகள் ஒன்று கூடி ஏற்படுத்த வேண்டுமே தவிர, அரசினதோ, ஐரோப்பிய யூனியனினதோ நிபந்தனைகளுக்காக மாற்றம் செய்யக் கூடாது என்பதனை எடுத்துச் சொல்லியும், அரசின் இம்முன்னெடுப்பை கண்டித்தும் கடந்த 03.11.2016 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நடாத்தியது.

ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டவுடன் பொதுபலசேனா அமைப்பின் ஞான சார தேரர், “ஆர்ப்பாட்டம் செய்து கோட்டைக்கு SLTJ வந்தால் அடித்துத் துரத்துவோம்” என்றும் பகிரங்கமாக மிரட்டல் விட்டிருந்தார்.

எதிர்ப்பை தாண்டி ஆர்ப்பாட்டம் இனிதே நடைபெற்றது. ஆர்ப்பாட்ட கண்டன உரையில் அரசையும், ஐரோப்பிய யூனியனையும் கண்டித்ததோடு, பேரணி வந்தால் அடித்துத் துரத்துவோம்! அல்லாஹ்வுக்கு இரண்டா? மூன்றா? என்று ரவுடித்தனமாகவும், ஒரு மதத்தின் கடவுள் நம்பிக்கையினை இழித்துரைக்கும் விதமாகவும் பேசிய ஞானசார தேரரை கண்டித்தும் கண்டன உரை நிகழ்த்தப்பட்டது.

மேற்படி உரையில் ஞானசார தேரர் கண்டிக்கப்பட்டதுக்கு எதிர்ப்பை தெரிவித்து மனுவொன்று குறிப்பிட்ட அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவே 16.11.2016 ஆம் திகதி கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேற்படி விசாரணையில் SLTJ யிற்கு எதிராக “இனங்களுக்கிடையில் கொந்தளிப்பை அப்துர் ராஸிக் ஏற்படுத்துகிறார்” என்று எம்மை எதிர்த்து வாதிடுவதற்காக பொதுபலசேனா அமைப்பினருடன் சேர்ந்து அஸாத் சாலியினால் அனுப்பப்பட்ட சட்டத்தரணி ஷஹீத் அவர்களும் வாதிட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

விசாரணையின் இறுதியில், அப்துர் ராஸிக் அவர்களின் உரையில் குறிப்பிடத்தக்க எந்தவொரு தவறையும் எதிர் தரப்பினரால் முன்வைக்க முடியாமல் போனபோதிலும், ஏலவே நடப்பிலுள்ள பிரிதொரு வழக்கின் பிணைக்கான நிபந்தனையிற்கு மாற்றமாக மேற்படி உரை அமைந்துள்ளது என்ற தவறான ஒரு காரணத்தை முன்வைத்து, எதிர் வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படல் வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேற்படி தீர்ப்புக்கு முன்வைக்கப்பட்ட காரணம் தவறானது என்பதுடன், இதற்கான எதிர் நடவடிக்கையினை சட்ட ரீதியாக ஜமாஅத் முன்னெடுக்கவும் உத்தேசித்துள்ளது.

ஜமாஅத்தின் நிர்வாகிகளை சிறையில் அடைப்பதாலோ, அல்லது இன்ன பிற எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதனாலோ இந்த ஜமாஅத்தின் கொள்கையினை அழித்துவிடலாம் என்று சில அமைப்பினரும், அரசியல் வாதிகளும் பகற்கனவு கண்டவண்ணம் உள்ளனர். இது போன்றவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கின்றோம். அல்லாஹ்வின் மீது சுமத்தப்பட்ட இழிவான விமர்சனத்துக்கு பதிலளிக்கும் இறைப் பணிக்காய் சிறைகூடம் செல்வது இந்த ஜமாஅத்தில் உள்ள அடிமட்ட தொண்டன் முதல் நிர்வாக மட்டத்தில் உள்ளவர்கள் வரை மனதார ஆசிக்கும் ஓர் அம்சமாகும். ஏனெனில், கொள்கைக்காய் சிறை கூடம் செல்வது நபிமார்களின் வழிமுறைகளில் ஒன்று என்றே திருக்குர்ஆன் அடையாளப்படுத்துகிறது.

ஆதலால், எம்மை சிறையில் அடைத்துவிடுவதால் எம் கொள்கை போராட்டத்தினையும், சமுதாய உரிமைப் போராட்டத்தினையும் அழித்துவிடலாம் என்று கருதிவிடவேண்டாம். எதிர்ப்புகளையும், சிறைகூடத்தினையும், இறைவனுக்காய் இன்முகத்துடன் எதிர்கொள்ளும் உணர்வுடன் பயணிக்கும் எம்மை பொருத்தமட்டில் இது போன்ற நிகழ்வுகள் எமது கொள்கை போராட்டத்தினை இன்னும் இன்னும் வீரியப்படுத்துமே தவிர வீழ்ச்சிகான வைக்காது என்பதனையும் இங்கு அழுத்தமாய் பதிவு செய்து கொள்கின்றோம்.

-ரஸ்மின் MISc

துணை செயலாளர்,

தவ்ஹீத் ஜமாஅத் - கொழும்பு

26 கருத்துரைகள்:

The title of Jaffnamuslim.com...about this report is very very wrong...
Do you know what is the meaning "Seeerugurathu....!!!"
thayavu seithu ungal thalaippaal intha pathivukku....pilayaana arttam undu pannividatheergal....Neruppil ennai ooottuhireergal...
Ganniyamaana murayil seithigalai pathivirakkam seiyungal ayya oru muslimaaga

Almighty Allah (SWT) is there for Muslims and nothing will happened without his blessings. We as Muslims should have a strong believe on this.

What we need at this moment is to unite under one voice without any division and decisions should be taken on the basis of MAZOORA. As far as we know that the All Ceylon Jammiyathul Ulamaa (ACJU) is doing its work well above the expectation and therefore let us follow ACJU and leave the rest to Almighty Allah (SWT) for the best.

yes brother not compromise in Principle

வாழ்த்துக்கள்

ஜம்மியத்துல் உலமா என்ன தூங்கிகொண்டா இருக்கின்றார்கள் இவ்வளவும் பிரச்சினைகள் முஸ்லிம்களுக்கு வந்தும் இலங்கையில்?இந்த தௌஹீதுகரங்களாலேயே இவ்வளவு பிரச்சினையும் அவங்களுக்கு என்று பள்ளிவாசல்களும் ,அவர்களுக்கு என்று வெற வேற ஒழுங்கு சட்டமும் இதனால் அணைத்து முஸ்லிம்களுக்கும் பிரச்சினை.எது இப்படியே இந்த தௌஹீத் இயக்கத்தை முஸ்லிம்களின் பாதுகாப்பு மற்றும் ஏனைய பிரச்சினைகள் கருத்தில் கொண்டு தடை செய்ய வேண்டும்.

Ungalukkum BBSukkum edayil erukkum Thanippatta pirachchinaykki Muslimgalayo Islaaththayo sambanda padaththa wendaam. neengal eppadiyum Quran Hadispadi thaan jailukku poweerhal. Hadispadi esuweerkal. adya nambum alawuku orukoottam irkkum waray. Enada Nabiyum pinayil irundkondu yaareyum thitti kewalpadththi jailukku paiththirukka maattarkal.

Dear SLTJ.
I regret to know the arrest of a brother Rasik and I ask dua to be released soon and to give good sense to him and to the GROUPs.

SLTJ and other groups are out of Islam. So, How you can combine this issue with Islam? SLTJ did wrong deeds and now they trying to combine with Islam how cruel mineded they are.
Is there a hadees to create GROUPS and preach Islam? NO. You are wrong with the basic. How you can expose that you are inside Islam?
Do you know which managerial system you are following to preach Islam? It's from Jews.
Do you remember how you behaved while you protest? Do you believe Islam is motivating such act? Is the way of Islam how to oppose and fight against injustice?
Whom you are cheating? You are completely wrong and now you are telling Allah is with you. How cruel you are. Allah is with truth. Don't sell Islam dear SLTJ and others.

I don't oppose your motivation which related to Quran and sunnah. It is appreciated and it should be done by everyone but not by the way of kafirs (groups)

The groups are not related to Islam becaus it not the motivation of our prophet. How you say Allah will help you if you are not with truth. Don't cheat!!!

I request to destroy all the groups and unite as Muslims and get a better managerial system to preach Islam evidenced by Quran and sunnah.

Can you agree? Prophet Jesus will arrive to the world one day and he will join with SLTJ /other groups OR with the Muslims???
He will unite with Muslims then your groups will be destroyed automatically. So, why you cheeting!!! Destroy your groups now. It's better for you.

We will pray and ask dua to be with peace, love, harmony and justice for every Human being on our earth.

It is to be noted that this particular jamath do not represent whole muslim population of our country. There are leaders and learned scholars in our society who truly represent our community working on our legal reformation. Unwanted interference and incitement by fringe elements like this jamath is creating bigger problems to our society than any good. Please bear in mind that in Tamil Nadu this jamath can undertake big protests in the name of muslims and people and government there are less caring due to the fact they are Dravida thinking ( Logical thinking ) society.Our country is different. Here Budhism and clergy are considered revered by majority community. Following Tamil Nadu way in our country may backlash. So better think differently, get on with our community leaders who represent majority muslims in order achieve anything good for the community.

வழிகெட்டவனே! நீ மார்க்கத்தை அறியாவனாக இருக்கும்போது கருத்து போடாமல் ஒதுங்கியிரு!
அஇஜஉ வே ஒரு அச்சாறு அதில் போய் இஸ்லாத்துக்கு தீர்வை தேடுவதா? இவ்வளவு பிரச்சினைக்கும் மூல காரணமே அவர்கள் கொள்ளையடித்த "ஹலால்" தானே? அவர்களுக்கு 90 வருட அவகாசமிருந்தும் ஏன் மாற்றுமத்த்தவர்களுக்கு இஸ்லாத்தின் தூய வடிவை சொல்லாத்து ஏன்?

I am ashamed as a muslim to read these comments from sri lankan muslim brothers! why do they love this world so much, forgetting the destination Yaumul Aakhira. True believers will go for justice! Brother Razik will get justice Insha Allah.
Allah says: "O you who believe! Stand out firmly for Allah, as witnesses to fair dealing, and let not the hatred of others to you make you swerve to wrong and depart from justice. Be just: that is next to piety: and fear Allah. For Allah is well-acquainted with all that you do.” [Sûrah al-Mâ’idah: 8]

This comment has been removed by the author.

Regret Brother Razik's arrest. Abusing a not so honorable priest can not be Islamic. Bro. Razik's conduct is more or less equal to that of priest with respect abusive component.

Whatever the policies and actions of the SLTJ be they are growing in popularity and becoming stronger day by day mainly because the other sections in the Muslim community are not dealing with the SLTJ in an intelligent manner and only trying to suppress them and now the Govt. is also trying the same method.

Thowheed deputy should have a good look back at his own speeches that will help him stay away from prison in the future.What have you done when your mentor PJ insulted our beloved Prophet (PBUH)

Thowheed deputy should have a good look back at his own speeches that will help him stay away from prison in the future.What have you done when your mentor PJ insulted our beloved Prophet (PBUH)

Naauthubillah... is sltj out of Islam? How can you proof that? I'm challenging you?

Not only SLTJ but also every Islamic groups in the world are out of Islam. Their basic is wronge. Everybody is telling they following Quran and sunnah but it's contradict when we see their activities and behavior.
And creating groups for Islam is a wrong motivation. Do you know what will happen to SLTJ or other groups after 100 years or 1000 years? Why not that people's can hope this SLTJ leaders as God. Asthoufirulla. Allah protect us.
And there is no any evidence in Quran or Hadees to create groups to divide the Muslim community. Islam is preaching to be unite everyone and preach errornious each other to make it correct. But unfortunately we are divided to groups.
I challenge you to bring SLTJ leaders for an open debate. I'm ready to prove they are out of Islam.

A small example, reciting Quran is a best deed for a Muslim but can you recite it in an uncleaned area like toilet? You can't. Because it wrong. It's not a respect to Quran and it's not a practice of our prophet. I mean toilet for groups.
Groups als same. They telling they are real Muslims but it's opposite to Quran and sunnah when we see their behavior and activities

So be a Muslim but don't stick to groups. We will stick with Quran and sunnah.
I believe every group will be destroyed one day to be United every Muslims under Quran and sunnah.
It will happen at least after prophet Jesus arrival. Inshallah.

Bull Bulli, நீயே ஒரு வேஸ்ட் உனது கருத்தை கக்கூசியில் கொண்டு போடு நீ சொல்லும் கூட்டம் கிழித்த கிளிப்பாலதான் இந்தப் பிரச்சினைகள் நாட்டில் ஆரம்பத்தில் இருந்து உண்மையான விடயங்களை பெரும்பான்மை சமூகத்துக்கு சொல்லி இருந்தால் இன்று இலங்கை முஸ்லிம் நாடாக இருக்கும் .இத்தனை அமைப்பு உருவாக காரணமே அந்தக் ACJU தான் இதை நீ தேடித் தெரிந்து கொள்

SLTJ and BBS should be banned.Both are same and trouble makers.BBS dance to tune of Norway Money and SLTJ is dance to the tune of Saudi Money,What would have happened if the police not stopped the SLTJ march .Opposing the Government move to change Muslim personnel law should be in a civilize way not agitate as BBS do.The way of SLTJ is giving BBS and other anti Muslim allies more reason to attack Muslims.This man already created the problem saying Lord Buddha ate human flesh.Insulting religious man is not civilize act but it shows law mentality.

இது என்ன களமோ புரியவில்லை.நான் நினைக்கிறேன் (ந ஊது பில்லாஹ்)இது நரகம் தேடும் களமோ.என்னவெல்லாமோ எழுதுகிறார்கள்.இப்போ கொஞ்ச நாட்களாக நாங்கள் போர் செய்தவர்களை காணவில்லை மாறாக எங்களுக்குள் நாங்கள் செய்யும் போரை பார்த்துக்கொண்டு அவர்கள் ஒதுங்கி இருந்து ஓய்வு எடுக்கின்றார்கள்.இதில் சிலர் தங்கள் செயல் களால் தீமையை தான் செய்து கொன்டு இருக்கின்றனர் முஸ்லிம் களின் மானத்தை கப்பல் ஏற்றி கொண்டு இருக்கின்றனர் அல்லாஹ்வே நம் எல்லோருக்கும் நேர் வழி காட்ட வேண்டும்.முஸ்லிம்களுக்கு முஸ்லிம்கள் முர்தத் கொடுத்து கொன்டு ஆழம் தெரியாமல் ஆத்திரத்தில் என்ன எல்லாமோ எழுதிக் கொண்டு இருக்கின்றார்கள்.உங்கள் உள்ளத்தில் அல்லாஹ்வை பற்றிய பயம் நரகத்தை பற்றி பயம் வரவில்லையா.சுப்ஹானல்லா நல்ல மக்களையும் நீங்கள் விட்டு வைக்க வில்லை .

முஃதபா ஜாவ்பெர் சொல்வது சரிதான் ,யார் இந்த புள் புல் முதலில தைர்யம் இருந்தால் உண்மையான பெயரையும் போட்டோவையும் வெளி காட்டட்டும் !

,நாய்ச்சீச்சீட்டெமா புலி சீத்தமா

Our beloved prophet said there will be 72 groups during the day of judgement and out of 72 one group will enter the paradise... so we don't know which one is right and which are wrong... of course we have to follow commandments of holy Quran and sahi hadees.. which groups taught us such as kaththam Fathiha, kanthoori, etc which is not in Islam and which group teach us now as such stupid things are not in islam... many wrong beliefs have been removed from day today life by this SLTJ.

I'm not opposed the motivation of SLTJ which is related to Quran and sunnah. It's appreciated and it's should be done by everyone not by the name of a groups which followed managerial systems of kafirs. Why you cannot preach Islam without creating a group??
Is prophet pbuh or sahabas created groups to preach Islam ??? Why we should give our right to a group and we should be lazy always. We should wakeup to preach Islam not by the groups. I ask you did you preach Islam to your family or neighbors? But you are waiting until a group comes to preach it. How lazy you are. Every fithna was created when a group created. So why not after 100 year SLTJ Followers also may do fithna. Allah protect us. That's why we are oppose groups. Groups is not a healthy motivation to preach Islam till end of this world. Yes. One group will go to jennah within 72 groups. That one group which is following Quran and sunnah. I and me following Quran and sunnah it means we are the one that group can go to jennah. that group doesn't have a name like SLTJ or others. It's Muslim. That group will never follow fithna and kafirs managerial systems.

So don't stick to groups but stick to Quran and sunnah and preach it first to your family and neighbors also I will preach it to my family and neighbors then every world will be pure Muslim unity without groups and fithna. Use your sense.

Can you agree SLTJ and other groups will alive till end of this world???
So what about prophet Jesus?? He will join with SLTJ or Muslims? He will join with Muslims not with the groups which following foot path of kafirs managerial systems.
I pray Allah to destroy your groups soon and unite us as Muslims and follow Quran and sunnah.

مِنَ الَّذِيْنَ فَرَّقُوْا دِيْنَهُمْ وَكَانُوْا شِيَعًا ‌ؕ كُلُّ حِزْبٍۢ بِمَا لَدَيْهِمْ فَرِحُوْنَ‏ 
எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.
(அல்குர்ஆன்: 30:32)

Post a Comment