Header Ads



இஸ்ரேலை கண்டிப்பதிலிருந்தும் ஓட்டம்பிடித்த இலங்கை, பலஸ்தீனத்தை கைவிட்டது -


இஸ்ரேல் ஜெருசலம் நகர் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து யுனெஸ்கோ கொண்டு வந்த யோசனை தொடர்பான வாக்கெடுப்பில் இலங்கை அரசு வாக்களிக்காது தவிர்த்து கொண்டது.

26 நாடுகள் வாக்களிக்காது தவிர்த்து கொண்டதுடன் 24 நாடுகள் யோசனைக்கு ஆதரவாக வாக்களித்தன.

வரலாற்று சிறப்புமிக்க ஜெருசலம் நகர் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் சட்டத்திற்கு உட்பட்ட தாக்குதல் அல்ல என யுனெஸ்கோ சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த தாக்குதல் மூலம் இஸ்ரேல் முன்னர் ஏற்படுத்திக்கொண்ட இணக்கத்தை மீறியுள்ளது எனவும் யுனெஸ்கோ குறிப்பிட்டுள்ளது.

அல்ஜீரியா, பிரேசில், சீனா, ஈரான், ரஷ்யா, தென் அமெரிக்க நாடுகள் உட்பட 24 நாடுகள் யோசனைக்கு ஆதரவாக வாக்களித்தன.

இலங்கைக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் நீண்டகாலமாக சிறந்த ராஜதந்திர உறவுகள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில், யுனெஸ்கோவின் யோசனைக்கு ஆதரவாக வாக்களிக்காததன் மூலம் இலங்கைக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் பாதிப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது.

3 comments:

  1. ரணில் என்ற பச்சோந்தி, அரசில் இருக்கும்பொழுது, பாலஸ்தீனத்திற்கு ஆதரவு ஒருபோதும் இருக்காது.

    மஹிந்த ஏதோ பரவாயில்லை.

    ReplyDelete
  2. I don't think we can vote this govt again.. Rather we avoid voting any of them in coming elections. It not going effect much on us.

    ReplyDelete
  3. MY3 and Ranil... Drops will make flood.. So Be aware of your actions related to Muslims of Srilanka.

    Muslims may support any party.. BUT when it comes to a matter of ISLAM related Issue... They all will get one side to give lesson as they did for MARA.

    Still We keep little trust in this government than the EVIL we met with MARA. But We are counting the DROPS of you anti Muslim deals.. Do not let to become FLOOD.. that will wash you away .

    A citizen of SLK from Peace Loving Muslims

    ReplyDelete

Powered by Blogger.