August 12, 2016

பண்பாடுகளை விட்டும், தூரமாகும் இளைஞர் சமூகம்...!

-ஏ.எம். ஆரிப்-

இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் இலக்கினை நோக்கிப் பயணிக்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இறைவனின் திருப்தியை இலக்காகக் கொண்டு மனித நலனுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டிய இளைஞன் தன் வாழ்வை வீணாக்கிக் கொண்டிருக்கின்ற துக்ககரமான நிகழ்வுகளைத்தான் அதிகம் காணமுடிகிறது. அதிலும் குறிப்பாக  இணையத்தளங்களில் அரட்டை அடிப்பதில் அதிக நேரங்களைக் செலவளிக்கின்றனர். இந்நிலை மார்க்கத்தின் எச்சரிக்கைகளைப் புரியாததினால் அல்லது அவைகளில் திடவுறுதி கொள்ளாததினால் ஏற்பட்ட விளைவெனலாம். இந்த உலக வாழ்க்கை அரட்டையிலும், களியாட்டத்திலும், மறதியிலும் கழிப்பதற்கு மரணத்தோடு முடிந்துவிடுகின்ற ஓர் இலகுவான வாழ்க்கை அல்ல. இவ்வுலக வாழ்க்கை குறித்து அல்குர்ஆன்,அல்ஹதீஸ் முன்வைக்கும் எச்சரிக்கைகளின் கனதி புரியுமாகவிருந்தால் யாரும் வீணே தன் விரலை அசைக்கவோ  வீணே ஒரு வார்த்தையை வெளியிடவோ முற்படமாட்டார்கள்.

'யார் அணுவளவு நன்மை செய்தாலும் அதன் பிரதிபலனைக் கண்டுகொள்வார்;;. யார் அணுவளவு தீமை செய்தாலும் அதன் பிரதிபலனைக் கண்டு கொள்வார்' என அல்குர்ஆன் சிறிய விடயங்களைக் கூட விசாரணைக்கு உட்படுத்தப்படுமென எச்சரிக்கிறது. இப்படியாக இருக்கையில் எப்படி ஒரு இளைஞன் தன் நேரங்களை அரட்டையடித்தலிலும், பண்பாடற்ற உரையாடல்களிலும் கழிக்க முடியும். மேலும் சினிமாக்கள் எந்தளவு இளைர்களின் வாழ்க்கையைப் ஆக்கிரமித்திருக்கின்றன என்பதை அவர்களது    பேச்சுக்களும் இணையப் பதிவுகளும், இணையப் பகிர்வுகளும் வெளிப்படுத்தி நிற்கின்றன. அவை ஆபாசம் நிறைந்தவையாகவும் இரட்டை அர்த்தம் பொதிந்ததாயும், அடுத்தவர்களின் மானத்தில் விளையாடுவதாயும், அடுத்தவர்களை தரக்குறைவாக இழிவுபடுத்தி விமர்சிப்பதாகவும் அமைந்து காணப்படுகிறன. 

இவை சமூகம் ஆரோக்கயமற்ற நிலையில் வளர்ச்சியடைந்து  வருகிறது என்பதையும் குடும்பங்கள் சரியாக கட்டியெழுப்பப்படாத நிலை அதிகரித்திருக்கிறது என்பதையும் காட்டுகின்றன எனலாம். ஏனெனில் இலக்கு நோக்கி பண்பாடான நடத்தைகளால் வழிநடாத்தப்பட்ட ஓர் இளைஞன் பண்பாடற்ற முறையில் கருத்து தெரிவிக்கவோ இழிவாக அடுத்தவர்களை விமர்சிக்கவோ முற்படமாட்டான்.பண்பாடுகளை விட்டும் தூரமாக்கிக் காட்டும் வெளிப்பாடுகள் சமூக வலைத்தளங்களிலும் நேரடி சமூக வாழ்விலும் வளர்ச்சியடைந்து வருவது அபயகரமான சமிஞை ஆகும். இந்நிலை தொடருமாகவிருந்தால் இவ்வாறான இளைஞர்களினால் சமூக விரோத செயல்கள் அதிகரிப்பதுடன் கல்வி முன்னேற்றம்,சமூக முன்னேற்றச் சிந்தனைகள் என்பன அரிதாகிவிடும்.இவை மட்டுமல்லாமல் இப்பண்பாட்டு  வீழ்ச்சியடைந்த இளைஞர்களிலிருந்து உருவாகின்ற சந்ததியும் சமூக அக்கறையற்ற சந்ததியாகவே இருக்கும். 

எனவே இவ்வாறான எதிர்மறையான நிலைமைகளைப் போக்க பாடசாலை மட்டத்திலும்,அதற்கு வெளியிலும் மனத்தூய்மை, மனவலிமை என்பவற்றை பிரதிபலிக்கும் வகையிலான தலைப்புகளில் சொற்பொழிவுகள், மற்றும் சமூததிற்காகப் பாடுபட்ட அறிஞர்கள் ஒவ்வொருவரையும் பற்றிய அறிமுகப்படுத்தல்கள் என்பவற்றை தொடராக இடம்பெறச்செய்வதன் ஊடாக பண்பாடுகளும்,சமூக அக்கறையுமுள்ள இளைஞர் சமூகத்தைப் பெற முயற்சிப்போமாக!

5 கருத்துரைகள்:

மிகவும் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய கருத்து எடுத்து கூறப்பட்டுள்ளது. வசதி வாய்ப்புள்ளவர்கள் இதன் பக்கம் கவனம் செலுத்துதல் மிகப் பெரும் சமூக சேவையாக கருதப்படும். இப்படியான கருத்தை கூறியவரும் நமது சமூகத்தில் உள்ள ஒருவரினால் தான் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்பதும் எமக்கு மன ஆறுதலை தருகிறது. ஆரிப் அவர்களுக்கு எமது நன்றி.

Not only former scholars we should remind them sahaba life.how they became good practise islam in our own life.

உட்சாகமூட்டிய குருவி அவர்களுக்கு எனது நன்றிகள்.அடுத்து சனா அவர்களின் கருத்தும் கட்டாயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.ஆம் எம் சமூக்கில் பெரும்பாலானவர்கள் சஹாபாக்களின் வாழ்கையை அறிவதை விட்டும் துாரமாகவே இருக்கின்றனர்.அவர்கள் பட்ட கஷ்டங்களை அறிந்து உள்ளத்தால் உணர்ந்தால் வெளிப்பகட்டிற்கோ ஆடம்பரத்திற்கோ முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள்.முஹம்மது நபியும் அவர் தொழர்களும் பட்ட கஷ்டங்களை வாசித்த போது என் கண்கள் கண்ணீரை வடித்தன என ஒரு முறை காந்தி கூறினார், ஆனால் எம் இளைஞர்களில் அதிகமானோர் அவர்கள் வாழ்வை அறிவதற்கு கூட ஆர்வம் இல்லாத நிலையில்தான் உள்ளனர்.

This situation happening because of most imams,ulamas and responsible people in society not focusing on it and they focus on fighting between sufi & salafi.

The essence of the article that the youths of today are
morally bankrupt is absolutely true but citing cinema
and internet as the culprits is not correct . Money ,
jealousy, egoism ,pride , hatred ,racism ,intolerance,
party politics , SELFISHNESS and many other social
evils that have not been treated for decades , are the
culprits .One horrific example is , about twenty five
yrs ago , one respectable Moulavi wanted to take more
money than allowed amount , unlawfully on his
pilgrimage to Makkah !!! Just imagine , the level of
his respect and belief in his religion that he preaches
in school and Mosque !There are so many like him in our
society . They all love to get rich and become owners to
goods and properties but when they can not achieve them,
they preach the society not to try it . My question is,
how can you expect such people to correct the wrongs of
the society ? It is the same thing in schools where
children spend most of their time . Muslim schools have
improved educating children to qualifications and skills
but as far as knowledge about life is concerned , good
citizens are rare . Everything is a race today . Not
only Muslims , the whole country and Muslims are worst
affected aimless.
Cinema , the other issue . Don't blame cinema for our
inability to learn about life . Tamil cinema particularly
is a reflection of social evils screened again and again
with different names and characters for survival. For
decades we are watching Police , Hospitals , Ambulances ,
Airports , Sea ports, Markets , Offices , Bosses ,Thugs
Politicians , Poosaris , Kovils , Boy and Girl, love
and family quarrel against the love and so on . Boring ,
nothing creative but yet , the message is , social evils
must be defeated and destroyed . A picture is worth
thousand words . If you are watching the movie only to
see the lead role girl , it is then different .

Coming to the internet issue . It is simple as this.
The kitchen is not a kitchen without knife .You will
cut yourself if you don't know how to handle it .
Learn the art of cutting and chopping with the knife
if you want to cook .

Post a Comment