நீதியரசர்களுக்கு அவசர கடிதம் எழுதியுள்ள இம்ரான் கான்
பாகிஸ்தான் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படாவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் அந்த நாட்டு உயர் நீதிமன்ற நீதியரசர்களுக்கு அவசர கடிதம் எழுதியுள்ளார்.
நவம்பர் 16ஆம் திகதியிட்ட இந்தக் கடிதத்தில், தனது இரத்த அழுத்தம் 193 வரை அதிகரித்துள்ளதாகவும், மூளையில் இரத்தக்கசிவு அல்லது மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வலது கண்ணின் பார்வையில் 85 சதவீதத்தை இழந்துள்ளதாகவும், 2025 டிசம்பர் முதல் நாளொன்றுக்கு 22 மணித்தியாலங்கள் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தனது மனைவி புஷ்ரா பீபியின் பார்வையும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
சிகிச்சைக்காக ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு மாற்றவும், குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதிக்கவும் உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தபோதிலும், அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

Post a Comment