இது மாதமொன்றுக்கு சுமார் 230 பேர் உயிரிழப்பதற்குச் சமமான அதிர்ச்சியளிக்கும் எண்ணிக்கையாகும்
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 2,414 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி போக்குவரத்து விபத்துகளைத் தடுப்பதற்கான நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக குறித்த குழுவின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ருவான் துஷார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர்,
இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் 2026 நவம்பர் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வீதி விபத்துகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2,414 ஆக உயர்ந்துள்ளது. இது மாதமொன்றுக்கு சுமார் 230 பேர் உயிரிழப்பதற்குச் சமமான அதிர்ச்சியளிக்கும் எண்ணிக்கையாகும்.

Post a Comment