விமனத்திற்குள்ளும், விமான நிலையத்திலும் ஏற்பட்ட பரபரப்பு
விமானம் தரையிறங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு ஏற்பட்ட இந்த அவசர நிலைமை குறித்து விமானி கட்டுநாயக்க விமான நிலைய இயக்க அறைக்கு உடனடியாக அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவசரமாகத் தரையிறக்கும் நடவடிக்கைகளுக்காக விமான நிலைய தீயணைப்பு வாகனங்கள், மருத்துவர்கள், தாதியர்கள், மீட்புப் படையினர், அம்பியூலன்ஸ்கள் மற்றும் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள மருத்துவமனைகள் அனைத்தும் தீவிர எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுத் தயார்ப்படுத்தப்பட்டன.
விமானம் தரையிறக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட விரிவான பரிசோதனைகளில், சரக்குக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த இறைச்சித் தொகைக்கு இடப்பட்டிருந்த நைதரசன் உலர் பனிக்கட்டி (Dry Ice) காரணமாகவே இந்த புகைமூட்டம் உருவாகியுள்ளமை கண்டறியப்பட்டது.
விமானத்தில் 258 பயணிகளும், 15 விமானக் குழுவினரும் அடங்கலாக 273 பேர் பயணித்துள்ளனர்.

Post a Comment