என்னிடம் வந்து கெஞ்ச வேண்டாம்

 


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு எதிராக வழக்கு தொடரப்படும். இந்த நாட்டின் 22 மில்லியன் மக்களின் தலைவரும் படைச் சேனாதிபதியுமான ஜனாதிபதி மிகுந்த பயந்த சுபாவம் உடையவராக காணப்படுகின்றார் என உதய கம்மன்பில மிரட்டல் தெரிவித்துள்ளார்.


அந்த நேரத்தில் தன்னிடம் வந்து கெஞ்சி வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி வாயை பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.


ஊன்றுகோல் ஒன்றுக்கும் ஊசிகளுக்கும் அஞ்சும் ஜனாதிபதியாகவே அநுரகுமார திசாநாயக்க இருக்கின்றார். இவரிடம் எவ்வாறு நாட்டின் தேசிய பாதுகாப்பையும் ஒப்படைப்பது?.


அச்சம் ஏற்படுவது மனித சுபாவம் என்றாலும் நாட்டின் படைத்தளபதி என்ற வகையில் அதனை வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது.. நாட்டின் படை சேனாதிபதியான ஜனாதிபதி அச்சமடைகிறார் என மக்கள் புரிந்து கொண்டால் அவர்கள் பதற்றம் அடைய கூடும் என கம்மன்பில தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.