கொழும்புக்கு கூடி, பதுளைக்கு குறைந்தது
தேர்தல் மாவட்ட ஆசன ஒதுக்கீட்டின்படி, கொழும்பு தேர்தல் மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை ஒன்றாக அதிகரித்துள்ளது, பதுளை மாவட்டத்திற்கான ஆசனம் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 3ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட ஊடக அறிக்கையில், 2024 பொதுத் தேர்தலில் 18 ஆக இருந்த கொழும்பு மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடு 19 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய 20 தேர்தல் மாவட்டங்களுக்குமான ஆசன ஒதுக்கீடுகளில் 2024 நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
தேர்தல் ஆணைக்குழுவின் தரவுகளின்படி, 2026 ஆம் ஆண்டின் முதன்மை வாக்காளர் பதிவேடு மற்றும் முதலாவது மேலதிக பதிவேட்டின் கீழ் இலங்கையில் மொத்தம் 17,534,397 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

Post a Comment